ஞாயிறு, 15 நவம்பர், 2020

குடிநீர் பஞ்சம் மழை இல்லாமை காரணம் எம்.ஜி.ஆர் நட்ட நீலகிரி தைலம் மரம்

 

aathi tamil aathi1956@gmail.com

1 ஜூலை, 2019, பிற்பகல் 1:17
பெறுநர்: எனக்கு
Kumarimainthan
குடிநீர்ச் சிக்கல் கழுத்து மட்டத்தையும் தாண்டி மேலே போய்க்கொண்டிருக
்கும் போது அறிவு சீவிகளும் சீவாதவர்களும் மழை நீரைத் தேக்குவது பற்றி ஆளுக்கு ஒன்றாகத் தீர்வுகளைக் கூறி வருகிறார்கள். இணைய தளங்களிலிருந்து புள்ளிக் கணக்குகளை அள்ளி அள்ளிக் கொட்டுகிறார்கள். ஆனால் அடிப்படைக் காரணியான மழை பொய்ப்பைப் பற்றி எவருமே வாய் திறக்கவில்லை. முகாமையான காரணம் தமிழகக் காடுகளில் இயற்கையான மரங்களை அழித்துவிட்டு ம.கோ.இரா. காலத்தில் எங்கு பார்த்தாலும் நீலகிரி மரம் எனப்படும் எண்ணெய் மரங்களை நட்டுவிட்டு ஒரு தாள் ஆலையையும் திறந்தது. சமநிலத்திலுள்ள புறம்போக்குகளிலும் அந்த மரத்தை வளர்த்தது. அடுத்து நிலத்தடி நீர் தேவைப்படாமல் காற்றிலிருந்தே நேரடியாக ஈரப்பத்ததை எடுத்துக்கொள்ளும் சவுக்கு, சூபாப்புல், வேலிகாத்தான் எனப்படும் சீமைக்கருவேல மரங்கள். இம்மரங்கள் அனைத்துக்கும் பொதுவான இயல்பு என்னவென்றால் இவற்றின் கீழே பசும்புல் உட்பட வேறு எந்த செடிகொடிகளும் வளரா, அவை வளரும் இடங்களில் நுழைந்தால் நெருப்புக்குள் நுழைந்த்து போன்ற வெப்பம் நம்மைத் தாக்கும். காடுகளில் இயல்பாகக் கணப்படும் சருகு அடுக்கே இருக்காது. அவ்வப்போது பெய்யும் மழைகள் நேரடியாக நிலத்தைத் தாக்கிக் கரைத்துக்கொண்டு
போய்விடும்.
நீலகிரி எண்ணெய் மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எண்ணெய் ஆவியாக்கி அந்த வட்டாரத்து வானில் இருக்கும் நீராவியை அகற்றுவதுடன் அங்கு நீராவியே உருவாகாமல் செய்துவிடுகிறது. சவுக்கு வேலிகாத்தான் சூபா புல் போன்றவை காற்றிலுள்ள நீராவியை உறிஞ்சி காற்றில் மேகமே உருவாகாமல் செய்துவிடுகிறது. வெளியிலிருந்து வரும் மேகத்திலுள்ள ஈரத்தையும் உறிஞ்சி அழித்துவிடுகிறது. இந்த விளைவால் தமிழகம் மட்டுமல்ல சுற்றிலுமுள்ள கேரளம், தென்கன்னடப் பகுதிகளிலும் மழை பொய்த்துள்ளது.
இந்த இக்கட்டிலிருந்த
ு மீளவேண்டுமானால் இம்மரங்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும். வேலிகாத்தானைப் பொறுத்த வரை அதை அழித்தால் மட்டும் போதாது, திறந்தவெளி கால்நடை மேய்ச்சலை ஒட்டுமொத்தனாகத் தடை செய்ய வேண்டும். ஏனென்றால் வேலிகாத்தானின் விதை தானே முளைப்பதில்லை. மாட்டுச் சாணம், ஆட்டுச்சாணம் போன்றவற்றில் இருப்பவைதான் முளைக்கும்.
இந்தப் பணியை ஆட்சியாளர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு வல்லரசியம் வகுத்துக்கொடுத்திருக்கும் செயல்திட்டம் தமிழகத்தில் வாழும் மக்கள் அனைவரையும் அகற்றி இதை மேலை நாடுகளுக்கு இறைச்சி வழங்கும் மேய்ச்சல் நிலமாக மாற்றுவதுடன் இங்கு அளவின்றிக் கிடைக்க வாய்ப்புள்ள கன்னெய்யம்(பெட்ரோலியம்) உட்பட எரிபொருட்கள் மற்றும் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க வழிவகை செய்துகொடுப்பதாகும். எனவே ஒரு புரட்சிப் போராட்டமாக இந்த மரங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் நம் மரபுக் காட்டுமரங்களையும் சம நிலத்தில் தழை மரங்களையும் நட்டு வளர்க்கும் போராட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சீமைக்கருவேல மரம் காடு மண்ணரிப்பு நதிநீர் பங்கீடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக