வெள்ளி, 13 நவம்பர், 2020

தமிழகம் வேலைவாய்ப்பு தமிழர்கள் புறக்கணிப்பு மணியரசன் பேட்டி தினமணி



aathi1956 <aathi1956@gmail.com>

வெள்., 3 மே, 2019, பிற்பகல் 5:43


பெறுநர்: எனக்கு



மத்திய அரசு வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன் வெள்ளிக்கிழமை (மே 3) தமிழர் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்.


தஞ்சாவூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
தமிழகத்தில், மத்திய அரசின் 18 துறைகளிலும் இந்திக்காரர்களையும், மற்ற வெளி மாநிலத்தவர்களையும் 90 - 100 சதவீதம் என்ற அளவுகளில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இனப்பாகுபாடு காட்டி, தகுதி இருந்தும் தமிழர்களுக்கு வேலை தராமல் புறக்கணிக்கின்றனர். இது, தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசுச் செயல்படுத்தும் இன ஒதுக்கல் கொள்கையாகும்.
அண்மையில் தமிழ்நாட்டில் ரயில்வே துறை பழகுநர் பணி இடங்களுக்காக 7,000 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது. இதில், 400 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பெரும்பாலும் இந்திக்காரர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலை பார்க்கும் 3,000 தொழிலாளர்களில் 1,500 பேர் வட இந்தியர்கள்.
தமிழ்நாடு அஞ்சல் துறையில் 4,452 பணியிடங்களுக்குச் சான்றிதழ் அடிப்படையில் வேலையில் சேர விண்ணப்பம் கோரியுள்ளனர். இதற்கான விளம்பரம் இந்தி ஏடுகளில் 15.3.2019 அன்று வெளியானது. ஆனால், தமிழ்நாட்டில் 5.4.2019 அன்றுதான் வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் 15.4.2019. இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் அதற்கான சர்வர் வேலை செய்யவில்லை.
ரயில்வே, அஞ்சல், வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பி.எஸ்.என்.எல்., பெல், படைக்கலன் தொழிற்சாலைகள், வருமான வரி, ஜி.எஸ்.டி., சுங்க வரி, கணக்குத் தணிக்கை, சாஸ்திரி பவன் போன்ற அலுவலகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெட்ரோ - கெமிக்கல் தொழிற்சாலைகள், ஓ.என்.ஜி.சி. என அனைத்து துறைகளிலும் தமிழர்களைப் புறக்கணித்து இந்திக்காரர்களையும், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களையுமே மத்திய ஆட்சியாளர்கள் வேலையில் சேர்க்கின்றனர். இது பச்சையான இன ஒதுக்கல் கொள்கை.
மத்திய அரசுத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுத்தும் இன ஒதுக்கல் கொள்கையைத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தடுப்பதில்லை; கண்டிப்பதில்லை.
இந்த இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்து திருச்சி பொன்மலை பணிமனை முன் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. அருணபாரதி தலைமையில் தமிழர் மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது என்றார் மணியரசன்.
அப்போது, தலைமைக் குழு உறுப்பினர் பழ. ராசேந்திரன், மாவட்டச் செயலர் நா. வைகறை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


புள்ளிவிபரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக