வெள்ளி, 13 நவம்பர், 2020

ஈழம் கிழக்கு ஒற்றுமை சோனகர் முஸ்லீம் ஈழம் கிழக்கு மதமோதல் 16 தம்பலகமம் படுகொலை ஊர்க்காவல்

 

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 30 ஏப்., 2019, பிற்பகல் 10:10
பெறுநர்: எனக்கு
திருத்த வரலாறு என்பதைக் காண்
Thiruchchelvam Kathiravelippillai, Jeevan Sha மற்றும் 86 பேருடன் இருக்கிறார்.
தொடர் – 16
திருக்கோணமலை மாவட்டத்தில் கண்டி-திருக்கோணமலை வீதியில் தம்பலகமம்
உள்ளது. கந்தளாயக்குளம், வெண்டரசன்குளம், கல்மெட்டியாவகுளம்,
புலியூற்றுக்குளம், கடவாணக்குளம், சேனைவெளிக்குளம், போன்ற
குளங்களிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நீர் மூலமாக நெற்செய்கை
மேற்கொள்ளப்படுகின்றது.
தம்பலகமம் வெளி என்பது ஏறத்தாள 7000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில்
நெற்செய்கை செய்யப்படும் வயல்வெளியாகும்.
தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் அந்நாட்களில் அரசபணி
நிமிர்த்தமாக வாழ்ந்துள்ளனர். யாழ் வடமராட்சியிலிருக்கும் மக்களுக்கும்
தம்பலகமம் மக்களுக்கும் நெல் வியாபாரம் மற்றும் நெற்செய்கை காரணமாக
தொடர்புகள் அதிகமாக இருந்தன. ஆரம்பத்தில் தம்பலகமத்திலிருந்து நெல்
கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றவர்கள் பின்னர்
தம்பலகமத்தில் வயல் நிலங்களை 10, 15, 20 ஏக்கர்கள் என்ற வகையில்
தமதுடமையாக்கியுள்ளனர். இன்றும் தம்பலகமத்தில் பல யாழ்ப்பாணத்தவர்களுக்கு
வயல்நிலங்கள் உரித்துடையவையாக உள்ளன.
தம்பலகமத்திலுள்ள வயல்நிலங்கள் எருமை மாடுகளின் உதவியினால்
பண்படுத்தப்பட்டன. அவ்வேலைகளில் தம்பலகமத்திலுள்ள மேற்குக்கொலனி,
சிறாஜ்நகர் மற்றும் கிண்ணியா போன்ற இடங்களில் வசித்த முஸ்லிம் மக்கள்
தொழிலாளர்களாக பணியாற்றியுள்ளனர். தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்தே
வயல்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். வயல் விதைப்பு தொடங்கி அறுவடை
முடிந்து சுடடித்து நெல் உரியவர்களின் வீடுகளுக்குக் கொண்டு சென்று
சேர்க்கும் வரையான நடவடிக்கைகளில் தொழிலாளர்களாக முஸ்லிம்களே
ஈடுபட்டுள்ளனர்.
1950 – 1970 களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களுடன் இந்திய வம்சாவழி
வந்த தனவந்தர்களும் இணைந்து நெல் வணிகத்தில் ஈடுபட்டதுடன் நெற்செய்கை
யிலும் ஈடுபட்டு பின்னர் அரிசி ஆலைகளையும் தம்பலகமத்தில் நிறுவினார்கள்.
பொற்கேணியில் இலங்கைநேசன் அரிசி ஆலை, லோகராஜா அரிசி ஆலை (எல். ஆர்.எஸ்.
அரிசி ஆலை), கோவிலடியில் இராசலெட்சுமி அரிசி ஆலை என்பன இவ்வாறு உருவாகிய
அரிசி ஆலைகளாகும்.
இராசலெட்சுமி அரிசி ஆலை சின்னராசா என்பவரால் ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு
உரித்தான காணியில் அமைக்கப்பட்டிருந்தது. மில்லுச் சின்ராசர் என மக்கள்
அவரை அழைத்தனர். பின்னர் அவ்வரிசி ஆலை மூடப்பட்டு தம்பலகமத்தில் இருந்த
ஒரேயொரு திரைப்பட மாளிகை அவ்விடத்தில் இயங்கியது. வன்செயல் காலங்களில்
அநாதரவாக இருந்த அவ்விடத்தில் தற்போது சுகாதார மருத்துவ அதிகாரி
தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
தம்பலகமத்தில் உள்ளவர்களாலும் அரிசி ஆலைகள் தொடங்கப்பட்டன. முள்ளியடியில்
சமேஸ்வரி அரிசி ஆலை, நடுப்பிரப்பன்திடலில் தங்கராசாப்போடியார் அரிசி ஆலை,
நாயன்மார்திடலில் நாகேஸ்வரி அரிசி ஆலை என்பன தொடங்கப்பட்டன.
அக்குறணையைச் சேர்ந்தவர்களால் புதுக்குடியிருப்பில் “லக்கி அரிசிஆலை“
தொடங்கப்பட்டது. இது முஸ்லிம் மக்களால் தொடங்கப்பட்ட அரிசி ஆலையென்பதுடன்
இதுவே இறுதியாக உருவாக்கப்பட்ட அரிசி ஆலையுமாகும்.
1985 மே மாதம் கடவாணையில் விடுதலைப்புலிகளால் நிலக்கண்ணிவெடித் தாக்குதல்
நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கடவாணையில் முகாமிட்டிருந்த கடற்படையினர்
எட்டுப் பேர் மடிந்தனர். அந்தச் சத்தம் தம்பலகமத்தில் கேட்ட முதலாவது
பாரிய வெடிப்புச் சத்தம் என்பதுடன் இவ்வாறுதான் கண்ணிவெடிச்சத்தம்
இருக்கும் என்பதை தம்பலகமம் மக்கள் தெரிந்து கொண்ட முதலாவது
சந்தர்ப்பமுமாகும்.
பொற்கேணி, பட்டிமேடு, கூட்டாம்புளி, கள்ளிமேடு, சிப்பித்திடல்,
கரைச்சைத்திடல், வர்ணமேடு, முள்ளியடி, நடுப்பிரப்பன்திடல்,
நாயன்மார்திடல், ஐயனார்திடல், மாக்கைத்திடல், குஞ்சடப்பன்திடல், கோவிலடி
ஆகிய ஊர்களில் இருந்த மக்கள் கிண்ணியா நோக்கி இடம்பெயர்ந்தனர்.
பத்தினிபுரம், பாரதிபுரம், முள்ளியடி, பொற்கேணி ஆகிய ஊர்களில் வசித்த
மக்கள் தம்பலகமத்திலுள்ள கோவிலடி , பட்டிமேடு, கள்ளிமேடு ஆகிய ஊர்களில்
தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.
1985 ஜுன் 10 ஆம் நாள் “எல்.ஆர்,எஸ். அரிசிஆலை“ படையினரால்
சுற்றிவளைக்கப்பட்டது. படையினருடன் பெருமளவிலான சிங்கள-முஸ்லிம்
இளைஞர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஊர்காவல்படை வீரர்கள்
இணைந்திருந்தனர். அரிசி ஆலையில் இருந்த நான்கு 12 வயதுக்குக் குறைந்த
குழந்தைகள் மற்றும் 06 பெண்கள் உட்பட 33 பேர் கைகள் பிணைக்கப்பட்டு
பொற்கேணி பக்கமாக அழைத்துச் செல்லப்படுகின்றபோது பொற்கேணியில் உள்ள
“வளர்மதி கூப்பன்கடை“ என அனைவராலும் அழைக்கப்பட்ட நாவலர் வீதிச்
சந்திக்கருகில் குடியிருந்த மணியம் அவர்களின் துணைவி மற்றும் இரு
பெண்பிள்ளைகள் வீதியில் நின்றமையால் அவர்களின் கைகளும் பிணைக்கப்பட்டு
கல்மெட்டியாவிலுள்ள பாடசாலைக்கு கூட்டிச் செல்லப்பட்டார்கள். அழைத்துச்
செல்லப்பட்டவர்களில் அரிசி ஆலை உரிமையாளர் திரு.லோகராஜா அவர்களின் 68
வயது தாயாரும் ஒருவர். நடக்கமுடியாத நிலையிலும் அவரையும் அழைத்துச்
சென்றார்கள். அழுதழுது வீதி வழியால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
பாடசாலையில் கைகள் பிணைக்கப்பட்ட நிலையில் வைத்திருந்த போது பல முஸ்லிம்
தலைவர்கள் பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
பாடசாலையில் அதிபர் மற்றும் சிங்கள பொது மக்களும் விடுதலை செய்யுமாறும்
கோரினர். அனைவரையும் விடுதலை செய்கிறோம் என உறுதியளிக்கப்பட்டு கைகள்
அவிழ்த்து விடப்பட்டனர். காலை 06.00 மணிக்கு கைது செய்யப்ட்டவர்களுக்கு
மாலையில் உணவு வழங்கப்பட்டது.
அன்றிரவு அனைவரும் அடித்தே கொல்லப்பட்டனர். 36 உயிர்கள் கண்ணிவெடியில்
உயரிழந்த கடற்படையினருக்கு ஆறுதலளிப்பதற்காக காணிக்கையாக்கப்பட்டனர்.

Balasingam Sugumar
தம்பலகாமத்தின் துயரம்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 24 ஆக., 2018

Sounthararajan Muthucumar
உலபத்தை கிராமத்தில் உள்ளவர்களே இதனை செய்யவர்கள் அதில் முக்கியமாவர்
உக்கூன் அவர்தலைமையில்தான் இந்த கொலை நடந்தது கொல்லப்பட்டவர்களை சமுலை
இலைகளால் மூடிவைத்திருந்தனர்

Sounthararajan Muthucumar
1990 தம்பலகாம்ம் அகதிமுகாமில் கடந்தபட்டு படுகொலை செய்யப்பட்டது
தம்பலமாமம் சந்தியில் பஸ்யில் இறக்கிஎடுத்து படுகொலை செய்யப்படவை இப்படி
பல சம்பவங்கள் நடைபெற்றது பழைய விடையங்களை பதிவு செய்தமைக்கு
பாராட்டுக்கள்
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 24 ஆக., 2018

Farhan Musthafa
அப்பாவிகளின் உயிர்கள் ஆயுதம் ஏத்தியவர்களின் எண்ணிக்கையில்
இருமடங்கையும் தாண்டும்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 24 ஆக., 2018

Thiyagarajh Pragash
நன்றி அண்ணன்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 24 ஆக., 2018

Shafeek Ahmed
வேதனை
திருத்தப்பட்டது · 1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் ·
24 ஆக., 2018

Murali Vallipuranathan
Tragic story, My father was also killed in the same way. In June 1985
first day pankulam police station was attacked by tigers. Next day STF
came to the scene and massacred 85 Tamil civilians traveling by a bus
bound to Jaffna. My father was one of the innocent civilians killed by
the STF. No justice so far.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 24 ஆக., 2018

CargoNizar Cargo
உங்களுக்கு ஒரு சிறிய ஞாபகமூட்டல் பதிவுகளில் சேர்த்துக் கொள்ளவும்.

தம்பலகாமத்தில் முதல் முதலாக துப்பாக்கி சூட்டில் இறந்தவர்
மாக்கையைச்சேர்ந்த செல்லத்தம்பி சுட்டவர் ஞாயமார்திடல் உருத்திரமூர்த்தி.
பின்னர் உருத்திரமூர்த்தியின் மூத்த மகன் மோகன் சுடப்பட்டு இறந்தார்.
அதன்பின்
கிட்டனன் கட்டடியின் மகள் ஈஸ்வரி மகன் சௌந்திரன் இயக்கத்தால் சுடப்பட்டார்கள்

பின்னர்
பொன்னம்பலம் gs மகனுடன் இன்னும் பலர் கொல்லப்பட்டு மதுரை மரத்தில்
தொங்கப்போட்டதும். அதே சமகாலத்தில் பலரை ராணுவம் சுட்டு ஆதி கோனேஷவரா மவி
முன்னாள் அமைந்திருந்த மாத்தளையான் கடையில் அரைகுரை உயிருடன் போட்டு
பெற்றோல் பம் போட்டதில் மாத்தளையான் உயிர் தப்பினார். அவ்வழியாக சென்ற
நானும் கள்ளிமேடு கனகசிங்கத்தாரின் மாடுபார்த்த எனது காலஞ்சென்ற சரீபு
சித்தப்பாவும் பலரின் பிரேதங்களை வெளியில் எடுத்து போட்டோம். அந்த
சம்பவம் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே உள்ளது
திருத்தப்பட்டது · 6 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் ·
24 ஆக., 2018

Mahdy Hassan Ibrahim
இதுபோல் எத்தனை எத்தனை கொடுமைகள்
நமக்குத் தெரியாமல் நடந்து விட்டன கடந்த காலத்தில்!
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 25 ஆக., 2018

Jeevarupan Jeeva
போரில் வீரர்கள் இறப்பது சாதாரணம் அதனால் மக்களுக்கு ஏற்பட்டது சதா மரணம்
வீரத்தை பலமற்றவர்களிடம் காட்டுவது பலவீனம் இவ்வாறான செயல்கள்
எம்மினத்தையே அழித்துவிட்டது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 25 ஆக., 2018

Krishnan K Paranthaman
Hi friend
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 25 ஆக., 2018

Siva Murugupillai
அனைத்து மக்களும் கோரியும் அடித்துக் கொல்லப்பட்டது கோரச் சம்பவமே.
இங்குதான் அரச இயந்திரம் பாகுபாடின்றின் தனது கொலை வெறியை செய்யும்
என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. இதே தம்பல காமத்தில் ஈபிஆர்எல்எவ்
இன் தோழர்கள் சிங்கள மக்களால் அரச படையினர் இடம் இருந்து காப்பாற்றப்பட்ட
சம்பவமும் நடைபெற்றது விரிவாக பதிவு செய்கின்றேன் பிறதொரு இடத்தில்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 26 ஆக., 2018
உரையாடல் விவாதம் ஆயுதக்குழு ஒற்றுமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக