ஞாயிறு, 15 நவம்பர், 2020

சமணர் ஜைனர் வேறுபாடு பற்றி திருநாவுக்கரசர்

 

aathi tamil aathi1956@gmail.com

வியா., 25 ஜூலை, 2019, பிற்பகல் 4:19
பெறுநர்: எனக்கு
காளிங்கன்
ஜூலை 25 2018 இன் மீள் பதிவு
சமணம் என்றால் ஆசிவகம்தான்
சமணர்கள் என்பவர்களைத் தமிழ் அறிந்தவர்களாக
" வாயிரும் தமிழே படித்தும் ஆளுறா ஆயிரம் சமணர்கள்" என்பதில் ஆசீவகர்களுடைய தமிழ்ப் புலமையைப் பாராட்டுகிற திருநாவுக்கரசர் சாதி சமணர் என்று சைனர்களைக் குறிப்பதன் மூலம் ஆசீவகர்கள் வேறு சைனர்கள் வேறு என்ற வேறு பாட்டையும் பதிவு செய்கிறார்.
அந்த வேறு பாட்டைப் பிற்காலத்தில் தமிழ் ஆய்வாளர்கள் கவனிக்கத் தவறி விட்டனர். அதன் வாயிலாகச் சமணர் என்ற சொல்லை சைனர்களை மட்டுமே குறிக்கக் கூடிய சொல்லாகத் தமிழ் அறிஞர்கள் அவர்களுடைய பேச்சுக்களால், எழுத்துக்களால் ஒரு மாயையை உருவாக்கி விட்டார்கள்.
அது ஒரு வரலாற்றுப் பிழையாகப் போய் விட்டது.
சமணம் என்றால் ஆசீவகம் தான். ‘சமணீர்காள்’ என்று ஆசீவகர்களை மட்டுமே குறிக்கக் கூடிய ஒரு நிலையை மணிமேகலை உறுதி செய்கிறது.
- முனைவர் க. நெடுஞ்செழியன்
(தமிழர் பெருவெளி / சூலை - செப். 2017 நேர்காணல்)

சைவம் சமணம் மதம் இலக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக