ஞாயிறு, 15 நவம்பர், 2020

தமிழ்மொழி பழமை கிமு 2000 தமிழி படங்கள் பட்டியல் பொதிகை யாழ்ப்பாணம் கீழ்வாலை பொருந்தல் புகைப்படம்

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்திங்., 5 ஆக., 2019, முற்பகல் 10:57
பெறுநர்: எனக்கு
Poorna Chandra Jeeva
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின்சொல் லுள்ளும் ...
சமஸ்கிருதமா முந்தியது ?
தமிழா சமஸ்கிருதமா எது தொன்மையானது என்று கருத்துப்போர் நடக்கிறது . நண்பர்கள் உணர்ச்சிப் பெருக்கில் தகிக்கிறார்கள் . எல்லா மொழிகளுமே தொன்மையானவைதாம் .அது அல்ல ஒரு மொழியின் தொன்மையை உணர்த்தும் கருவி . பண்பாடும் நல்ல இலக்கிய வளங்களைப் பெற்றிருப்பதோடு பிற இன - மொழி மக்கள் தொகுதியால் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் . எ- டு : கி மு 999 இல் வாழ்ந்த செமிட்டிக் பொனீசிய மன்னன் சாலமன் ஏடுகளில் அரிசி தோகை கருவாப்பட்டை மணப்பொருள்களின் தமிழ்ப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன . அரிசி சமஸ்கிருதச் சொல்லில் இருந்து வந்தது என்றனர். ஆனால் ரிக் வேதத்தில் அரிசி என்னும் பெயரோ குறிப்போ இல்லை . தோகை என்பது தோகைமயிலைக் குளிப்பது. அரிசி மிகப்பிற்கால வேதத்தில் குறிப்பிடப்பெறுகிறது . இவற்றால் கி மு 1000 அளவிலேயே தமிழகம் அரிசியைப் பயிரிடும் தொழில்நுட்பம் கொண்டிருந்தது தெரிந்தது. வடக்கேயும் ஆரியர் கைபர் கணவாய் வழியே இந்தியா வந்து முதலில் பஞ்சாப்பில் தங்கியபோது ஆரியர் பருவகாலங்களைப்பற்றிய அறிவு வேளாண்மை வணிகம் ஆகியவற்றைத் தமிழரிடம் இருந்து கற்றனரென்று ரிக் வேதம் கூறுகிறது . பருவமறிந்து ஆண்டில் இருமுறை பயிர்ச் சாகுபடி செய்வதை தேவர்கள் அங்கிருந்த திராவிடத் தமிழ் மக்களிடமே கற்றறிந்ததாக ரிக் வேதம் கூறுகிறது . அவ்வேதத்தில் காணப்படும் தமிழ்ச் சொற்கள் தமிழ்ச் சமுதாயத்திடமிரு
ந்தே ஆரியர் நாகரிக வாழ்வைக் கற்றதை உணர்த்துகின்றன . ரிக்கில் காணும் இச்சொற்கள் வாழ்விற்கு அடிப்படையானவை.
மயூர = மயில் , காக = காகம், மீன = மீன் , உலுகல = உலக்கை , கடுகு , குண்ட, கல = கலை , கள = களம், பல, தண்ட , பிண்ட , கய்தா = கைதை - தாழை , ரத்தம் = அரத்தம், வர்ணம் = வருணம், லங்கலா = உழுங்கலம் ( அ) அலங்கலம் = ஏர்க்கலப்பை , மேலும் பலநூறு சொற்களும் உள்ளன . அவர்கள் அங்கு வந்தபோது சிந்து நாகரிகம் அழிந்து மக்கள் எளிய நாகரிகர்களாக வாழ்ந்தனர் . பாழடைந்த இடிந்த பெரிய கட்டடங்களில் வாழ்ந்தனர் . இத்தகைய இடங்கள் வைலஸ்தான் என்று ரிக் வேதம் கூறுகிறது . அங்கு வாழ்ந்த பெண்களை வைலஸ்தானில் வாழும் சூனியக்காரிகள் என்கிறது . வைலஸ்தான் என்பது வேளஸ்தான் - வேளகம் ஆகும் . சிந்தவன் (சிந்து நாட்டவன்) சமஸ்கிருதத்தில் சைந்தவன் ( சிந்து நாட்டு அரசன் மகாபாரதம்) என்று ஆவது போல வேளகம் வைலஸ்தான் ஆனது . ஸ்தான் - இடம் , அகம் . வேளிர் வாழ்ந்ததால் வேளகம். இங்கு வாழ்ந்த பெண்கள் வீரம் நிறைந்தவர்கள் . அரசர்கள் சிந்து நகரங்களில் பெண்கள் போர்ப்படைப் பிரிவை வைத்திருந்தனர் .எனவே இந்திரனால் அவர்களை எளிதாக வெல்ல முடியவில்லை என்று ரிக் வேதம் கூறுகிறது. அப்படைகளை அழிக்க இந்திரன் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது . எனவே மக்கள் மிகுந்த நாகரிகமும் அறிவும் பெற்றிருந்தது தெரிகிறது .
ஆனால் ஆரியர்கள் இங்கு வந்தபோது அவர்களிடம் கல்வியறிவோ எழுத்தறிவோ கிடையாது . வெறும் வாய்மொழி நாடோடி வழிபாட்டுப் பாடல்கள் தான். அவையே பின்னர் ரிக் வேதம் எனப்பட்டது . பிற்கால வேதங்களின் விளக்க நூலான சதபதபிரமாணம் ஒரு நிகழ்வைக் குறிக்கிறது . ஆரியர்கள் ஒரு ஊரைக் கைப்பற்றுகின்றனர் . ஆண்கள் கொல்லப்பட்டார்கள் . பெண்களும் குழந்தைகளும் வயதானோருமே சிறைப்பட்டனர் . ஊர்ப்பொது மன்றத்தில் வைத்து சிறைப்பட்ட மக்களின் வாக் voc என்னும் வாக்கை நெருப்பிலிட்டு அழிக்கின்றனர். வாக்கு என்றால் பேச்சு , பேச்சை எப்படி நெருப்பிலிட முடியும் ? அப்போது ஆரியர்கள் மொழியில் எழுத்து என்ற சொல் இல்லை . அம் மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஓலை சீலைகளை அழிப்பதையே அவ்வாறு கூறினர் . மக்கள் அவ்வாறு தங்கள் நூல்கள் தீயிடப்படுவதைக் கண்டு தங்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஐயய்யோ ஐயய்யோ என்று ( ஹல்லாயோ ஹல்லாயோ ) அழுததாக சதபதபிரமாணம் கூறுகிறது .எழுத்து மொழியற்ற ஆரியர் தங்கள் பேச்சு மொழியில் கூட எழுத்து நூல் போன்ற சொற்களை அறியாதிருந்தனர் . இன்று ...
சிந்து வெளியை விடுங்கள் தமிழக மக்களும் கி மு 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்வியறிவும் எழுத்திலும் பெற்றுத் திகழ்ந்தமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே தமிழ்நாடு கல்வியறிவு பெற்று எழுத்து முறையைக் கொண்டிருந்தது . தமிழ்நாட்டு மக்களும் அவர்களது தமிழ்மொழியைச் சிந்து எழுத்து வடிவங்களாலேயே ( Indus script ) எழுதியமைக்குச் சான்றுகள் உள்ளன . தமிழ்நாட்டில் அவ்வாறு சிந்து எழுந்தால் எழுதப்பட்ட பொறிப்புகள் (Inscriptions ) பல கிடைத்துள்ளன . கீறல் வரி வடிவங்களென ஆய்வாளர்கள் அவற்றை ஒதுக்கிவிட்டார். அவற்றின் பொருளை மட்டுமல்ல சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் மட்டுமே கிடைத்து இந்தியாவின் வேறு எப்பகுதியிலும் கிடைக்காத சிந்து எழுத்து வடிவங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே கிடைப்பது எவ்வாறு என்றுகூட ஆராயவில்லை . பெருங்கற்காலத்த
ில்கூட ( Megalithic age ) அவை பேரளவில் மட்பாண்ட எழுத்துகளாகவும் (Graffiti signs ) எழுத்துப் பொறிப்புகளாகவும் தமிழகத்தில் கிடைக்கின்றன . அவற்றைச் சுருக்கமாகச் காணலாம் .
(1) செம்பியன்கண்டியூர் நாகை மாவட்டம் . இங்கு புதியகற்காலக் கருவியில் தூய சிந்து எழுத்தாகப் பொழியப்பட்டுள்ளது . எழுத்து ஓரளவு தெளிவாக உள்ளது . நான் அதனை
வர ஆய்யன்
என்று படித்துள்ளேன் . இடமிருந்து நான்கு வடிவங்கள் வர ஆ ய் ய என்றும் விகுதியை நிறைவு செய்ய தொல்காப்பிய விதிப்படி ( ளகர ஒற்றே ஆடூஉ அறிசொல் ) இறுதியில் ன் சேர்த்து வர ஆய்யன் என்று படித்துள்ளேன் . இது கி மு 2000 அளவுக்குரியதாக மதிப்பிடலாம் .
(2) பொதிகை மலைக்குகை
தமிழுடன் தொடர்புடைய அகத்தியர் வாழ்ந்த மலை . இக்குகையில் மிகப்பெரிய துறவி வாழ்ந்துள்ளார் . அவரை அப்பொறிப்பு தவம் வளர்ப்பவர் என்கிறது . தவ நந்தன் . இக்குகை மக்களால் எழுத்துப் புடை எழுத்துகளுள்ள பக்கங்களைக் கொண்டது என்று அழைக்கப்படுகிறத
ு .
மூய தவணண்தன் இன் தவ
மூய தவ நந்தன் இன் தவ
நந்தன் என்பது இயற்பெயராகவும் இருக்கலாம் . மேலும் பல மறைபொருட் குறியீடுகளும் இங்கு கீறப்பட்டுளுளது . ஒரு வரிசையாகக் கீறாமல் பாறைச்சுவர்களில் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப இடம் விட்டுக் கீறப்பட்டுள்ளது .
(3) கீழ்வாலைப் பாறைத் தீற்றல்
இதுவும் தவசியர் வாழ்விடமே . தூய சிந்து எழுத்தும் படங்களும் தீட்டப்பட்டுள்ளன. இப்பொறிப்பில் வரும் இரு பொறிப்புகளும் படங்களும் செங்காவி நிறத்தில் தீற்றப்பட்டுள்ளன .
தவச சதவரவ் தவசய்ய சரத்
தவச சதவரவ்வன் தவசய்ய சரய்
சதவர் என்பது இயற்பெயர் . அவ்வன் - அவ்வய் என்பதன் ஆண்பால் . சரய் - கிழத்தன்மை . ஊர்வலம் என்பதும் . இணைப்புப் படம் நண்பர் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தியின் பதிவு . தமிழக அரசின் காப்பில் உள்ள இடம் .
(4) சாணூர் பானைக் கீறல் .
செங்கற்பட்டருகே உள்ள பெருங்கற்கால வாழிடம் . மத்திய அரசு அகழ்வாய்வைத் தொடரவில்லை .
ஆயவர் ( ஆயர் )
தெளிவான சிந்து வடிவங்கள் . பெருங்கற் காலத்திலும் சிந்து எழுத்துத் தொடர்ந்துள்ளது . இவ்விடம் முழுமையாக அகழப்பட்டால் 1500 ஆண்டு தமிழக வரலாறு வெளிச்சம் பெறும் .
(5) பெருமுக்கல் பாறைக் கீறல் .
மரக்காணம் அருகே சிறு குன்றின் மீதுள்ளது . சுற்றிலும் அரசன் யானை மீது வருவது , அவன் வருவதால் மழை பொழிந்து நாடு செழிக்கிறது என்னும் கருத்துரு ஓவியமாகக் கீறப்பட்டுள்ளது .
அ ர ச ர்
என்ற ஒற்றைச் சொல் உள்ளது . முதல் எழுத்து அ சிந்து எழுத்து வடிவமாகவும் பிற சிந்து தமிழிக்குப் பொதுவாகவும் உள்ளது . இந்த எழுத்துக்குப் பிறகே தமிழ்நாட்டில் சிந்து எழுத்து மாறுகிறது .
(6) யாழ்ப்பாணம் முத்திரை
தமிழகத்துடனான இன மொழி பண்பாட்டுத் தொடர்பால் இங்கு இணை க்கப்படுகிறது. குயவன் தொழிலக முத்திரை . மேல் வரிசை சிந்து எழுத்து கீழே முழுமையடைந்த தமிழி எழுந்துள்ளது. Dr . இந்திரபாலா அகழந்தது .
மயன ( சிந்து)
கோவேத்து ( தமிழி)
தமிழி முழுமையாகி உ எ ஒ உயிர்மெய்யாக்கம் பெறுகிறது.
(7) பொருத்தல் பானைக்கீறல்
பழனியருகே வயிரம் என்பானது பெருங்கற்கால புதைகுழியில் கிடைத்தது .
வயிர ( வயர் - வைரம் )
இந்திய மொழிகளிலேயே தொன்மையான எழுத்து . கி மு 490 .
இவற்றுடன் குஜராத் மாநில பேட் துவாரகை கடலடியில் கிடைத்த வழிபாட்டுப் பாத்திர எழுத்து மேற்காணும் எழுத்துகளின் கால நிர்ணயத்துக்கு முக்கியம் . இதன் காலம் கி மு 1500 . இதன்படி வடிவ மாற்றமில்லா பொதிகை கீழ்வாலை பொறிப்புகள் சிந்து நாகரிக காலத்தை ஒட்டியவை என்றும் பிற யாவும் கி மு 1500 அளவுக்குப் பிற்பட்டவையாகும். பேட் துவாரகை எழுத்தில்
மண்ய்வரணணாவ்வோர்
மணிய் வரணன் ஆவோர்
என்பது மணிவண்ணனாகிய கிருஷ்ணரைக் குறித்தது . இம்முத்திரைகள் சிந்து வெளி நாகரிகக் காலம் முதல் சிந்து எழுத்துச் சாயல் உள்ள பொருத்தல் எழுத்துக் காலம் வரை தமிழகத்தில் தமிழை எழுத சிந்து எழுத்தே பயன்படுத்தப்பட்டது என்று இதனால் அறியலாம் .
சமஸ்கிருதம் பேச்சு வழக்கிலிருந்து எழுத்து முறைக்கு கி பி 151 ஆம் ஆண்டு சத்ரபகுல மன்னன் ருத்ரதாமன் வெட்டிய கிர்நார் கல்வெட்டின் காலத்திலேயே எழுத்து வடிவம் பெற்றது . சங்க காலத்தில் தமிழை எழுத எழுத்து முறை இருந்தது போல சமஸ்கிருதத்தை எழுத எழுத்து முறை இல்லை . இதனைச் சங்கத்தமிழ் மக்களும் அணிந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியம் கூறுகிறது. குறுந்தொகை ,156 . பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாடல் காட்டுகிறது .
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து
படிவ வுண்டி பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின்சொ லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும்
மருந்து முன்போ மயலோ இதுவே
என்பது பாடல் . இவர் பாண்டிய மன்னரின் வில் படைத் தலைவர். தலைவி பார்ப்பன மகனிடம் எழுதும் முறை இல்லாததால் எழுத்தில்லாமல் கற்பிக்கப்படும் உன் வேத மொழியில் ( சமஸ்கிருதம்) பிரிந்தோரைச் சேர்த்து வைக்க மருந்து ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா ? எனறு கேட்கிறாள். எனவே இப்புலவர் காலத்திலும் சமஸ்கிருதத்திற்கு எழுத்துமுறை இல்லை , ஆனால் தமிழுக்கு இருந்தது என்று தெரிகிறது .எனவே இப் பாடல் கி பி 150 ஆண்டுக்கு முன்பு பாடப்பட்டிருக்க வேண்டும் . தமிழுக்குத் தொலபழங்காலத்தில் இருந்து எழுத்தும் இலக்கியமும் இருந்தது ஆகவே சமஸ்கிருத மொழியை விட தமிழே மிக்க நாகரிகமும் எழுத்து மொழியறிவு பெற்றதென்று அறியலாம். சமஸ்கிருதம் கி பி 2 ஆம் நூற்றாண்டில் எழுத்து பெற்று குப்தர்கள் காலத்தில்தான் இலக்கியம் உருவானது . அவர்கள் பலரது நூல்களையெல்லாம் மொழிபெயர்த்துத் தனதாக்கிக் கொண்டனர் . நூறு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு காட்டிய கோயில்களுக்கே பெருமை சேர்க்க புராண இதிகாசக் கற்பனைகளை அவிழ்த்துவிடும் பார்ப்பார்கள் தாங்கள் உரிமை கொண்டாடும் நூல்களுக்கு எவ்வளவு கற்பனையான கதைகளை அதற்குச் சேர்த்திருப்பார்கள் என்று சொல்லாமலே விளங்கும் .
சொல்லுங்கள் சமஸ்கிருதமா முந்தியது ?
12 மணி நேரம் · Facebook for Android ·

பானைக்கீறல், பானையோடு, பானை ஓடு, கீறல், பிராமி, சான்று ஆரியர் சிந்துசமவெளி எழுத்துரு புகைப்படம் ரிக் வேதம்

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக