ஞாயிறு, 15 நவம்பர், 2020

குமரி என்பது ஆறு தெற்கெல்லை

 

aathi tamil aathi1956@gmail.com

சனி, 20 ஜூலை, 2019, பிற்பகல் 5:00
பெறுநர்: எனக்கு
அழகன் தமிழன்
தமிழ்நாட்டின் தென்னெல்லை:-
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)
என்பது பனம்பாரனார் கூற்று.
இதற்கு இளம்பூரனார் கீழ்வருமாறு உரை கூறியுள்ளார்.
"மங்கலத்திசையாகலின் வடக்கு முன் கூறப்பட்டது. கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின், தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின், கூறப்படாவாயின. பிற இரண்டெல்லை கூறாது # இம்மலையும் # ஆறும் கூறியது, அவை தீர்த்தமாகலானும் கேடிலவாதலானும் எல்லாரானும் அறியப்படுதலானுமென்பது. இவை அகப்பாட்டெல்லை."
நச்சினார்க்கினியார் பின்வருமாறு பாயிரத்திற்கு உரைகூறுகிறார்.
"இனி மங்கலமரபிற் காரியஞ்செய்வார் வடக்குங் கிழக்கும் நோக்கியுஞ்
சிந்தித்தும் நற்கருமங்கள் செய்வாராதலின் மங்கலமாகிய வடதிசையை
முற்கூறினார், இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி. தென்புலத்தார்க்
கு
வேண்டுவன செய்வார் தெற்கும் மேற்கும் நோக்கியுங் கருமங்கள்
செய்வாராதலின் தென்றிசையைப் பிற்கூறினார். நிலங்கிடந்த
நெடுமுடியண்ணலை நோக்கி உலகந் தவஞ்செய்து வீடு பெற்ற
மலையாதலானும் எல்லாரானும் அறியப்படுதலானும் வேங்கடத்தை
எல்லையாகக் கூறினார். குமரியுந் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினார்.
இவ்விரண்டினையுங் காலையே ஓதுவார்க்கு நல்வினை யுண்டாமென்று கருதி இவற்றையே கூறினார். இவையிரண்டும்
அகப்பாட்டெல்லையாயின. என்னை ? குமரியாற்றின் தெற்கு நாற்பத்
தொன்பது நாடு கடல்கொண்டதாகலின். கிழக்கும் மேற்குங் கட
லெல்லையாக முடிதலின் வேறெல்லை கூறாராயினார். வேங்கடமுங்
குமரியும் யாண்டைய என்றால் வடவேங்கடந் தென்குமரியென
வேண்டுதலின் அதனை விளங்கக் கூறினார்."
இதன் மூலம் நாம் அறிவது தமிழ்நாட்டின் வட எல்லை வேங்கட மலைத் தொடர் என்றும் தெற்கெல்லை குமரி யாறு என்றுமாம். இரண்டு இடங்களில் சங்க இலக்கியத்தில் குமரி ஆறு குறிக்கப்பட்டுள்ளது.
"தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"- (புறம் 06;02)
"குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி" (புறம் 67;06)
சிலப்பதிகார காலமான கி.பி 2 ம் நூற்றாண்டில் தான் தமிழ்நாட்டின் தென்னெல்லை கடலாகக் குறிக்கப்படுகிறது.
"நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு"
(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)
இவ்வரிகட்கு அடியார்க்கு நல்லார் கூறிய முழு உரை படங்களாக இணைக்கப்பட்டுள்ளன.அடியார்க்கு நல்லார் உரையில் "தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும்" என்பது, அகன்ற நீர்ப்பரப்பையுடைய குமரியாற்றின் வடபெருங் கரைவரை, என்று பொருள்படுவது. ஆகவே,சிலப்பதிகார காலமான கி.பி இரண்டாம் நூற்றாண்டில் குமரி ஆற்றின் வட கரை வரை அஃதாவது குமரியாறு முழுமையும் முழுகி இருந்தது தெளிவு.
எனவே,தொல்காப்பியர் கால தமிழர் நில எல்லை ஈழத்தையும் உள்ளடக்கியதாகும்.

குமரிக்கண்டம் இலக்கியம் எல்லைகள் மண்மீட்பு விளக்கம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக