ஞாயிறு, 15 நவம்பர், 2020

சித்திரவதை சித்தர் வதை கழுவேற்றம் இல்லை விவாதம் விளக்கம்

aathi tamil aathi1956@gmail.com

27 ஜூலை, 2019, பிற்பகல் 6:01
பெறுநர்: எனக்கு
Paari Saalan
சித்திரவதை= சித்தர்+வதை .. யூத பிராமணன் தமிழ் சித்தர்களை வதம் செய்தது நடந்த ஒரு வரலாறு. ஆனால் அதன் கால வரையறையில் சில குழப்பங்கள் உண்டு. ஆனால் அது நடக்கவில்லை என முற்றாக மறுப்பது சரியான தேடலாக தெரியவில்லை.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · நீக்கு · இன்று அன்று முற்பகல் 1:01 மணிக்கு

Aathimoola Perumal Prakash
சித்தர் வேறு சமணர் வேறு பாரி அவர்களே!
சித்திரவதை என்பதில் உள்ள "சித்ர" என்பது காட்சிப்படுத்துதல் என்கிற பொருள் தரும்.
அதாவது பலர் முன்னிலையில் தரப்படும் தண்டனை.

Aathimoola Perumal Prakash
சித்திரவதை என்கிற வார்த்தை 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்பராமாயணத்தில் ஓரிடத்தில் வருகிறது.

'புத்திரர், குருக்கள், நின் பொரு இல் கேண்மையர்
மித்திரர், அடைந்துளோர், மெலியர், வன்மையோர்,
இத்தனை பேரையும், இராமன் வெஞ் சரம்
சித்திரவதை செயக் கண்டு, தீர்தியோ ?

புத்திரர் குருக்கள்- உன் புத்திரர்கள், குருமார்களாகிய
மேலோர்கள்;
பொருஇல் கேண்மையர்- ஒப்பற்ற
உறவினர்கள்;
மித்திரர் - உனக்குரிய நண்பர்கள்;
அடைந்துளோர்- உன்னை அடைந்து உன் ஆதரவில் வாழும் மக்கள்;
மெலியர் வன்மை யோர் - வாழ்க்கையில்
மெலிந்தவர்கள், வலிமை மிக்க வீரர்கள்;
இத்தனை
பேரையும் - இத்தனை பேரையும்;
இராமன் வெஞ்சரம் - இராமபிரானுடைய கொடிய அம்புகள்;
சித்திரவதை செய - சித்திரவதை செய்வதை; கண்டு தீர்தியோ - பார்த்துவிட்டு
நீயும் அழியப் போகிறாயோ.

இராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் 6375

சொல்லாய்வு இலக்கியம் 

”சித்திரவதை” என்ற சொல், பெருஞ்சித்திரனார் வறுமையால் வாடிப் பெருந்துயருற்றதால் உருவாகியது என்று புலவர் இரா. இளங்குமரனார் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக