ஞாயிறு, 15 நவம்பர், 2020

தென்னாடு என்பது பாண்டியநாடு சைவம் முதலில் தோன்றியது

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 29 ஜூலை, 2019, முற்பகல் 10:19
பெறுநர்: எனக்கு
அழகன் தமிழன்
தென்னாடு எது?
1) "வருநாளென் றும்பிழையாத் தெய்வப் பொன்னி
வளம்பெருக்க வளவர்குலம் பெருக்குந் தங்கள்
திருநாடு போற்செழியர்
# தென்னாடு விளக்குஞ்
சீர்விளக்கின் செய்யசீ றடிகள் போற்றி
ஒருநாளுந் தஞ்செயலில் வழுவா தன்பர்க்
குடைகீளுங் கோவணமு நெய்து நல்கும்
பெருநாமச் சாலியர்தங் குலத்தில் வந்த
பெருந்தகையார் நேசர்திறம் பேச லுற்றாம்"
- பெரிய புராணம் 4192
பொருள்:-
நீர்ப்பெருக்கு வரும் நாள் ஒரு காலத்தும்
பொய்யாது வரும் தெய்வத்தன்மை வாய்ந்த காவிரியாறு வளம் பெருக்கச் சோழர்
திருமரபு பெருக்கம் தங்களுடைய சோழநாட்டினைப் போலவே பாண்டியர்களது # பாண்டி
# நாட்டினையும் விளங்கச் செய்த சிறப்புடைய விளக்காகிய
மங்கையர்க்கரசி யம்மையாரது செய்ய சிறிய திருப்பாதங்களைத் துதித்து.........
2)"அந்நாளி லாளுடைய பிள்ளையா ரருளாலே
#தென்னாடு சிவம்பெருகச் செங்கோலுய்த் தறமளித்துச்
சொன்னாம நெறிபோற்றிச் சுரர்நகர்க்கோன் றனைக்கொண்ட
பொன்னார மணிமார்பிற் புரவலனார் பொலிகின்றார்"
- பெரிய புராணம் 4070
பொருள்:-
அக்காலத்தில் ஆளுடைய பிள்ளையாரது திருவருளினாலே
# பாண்டிநாட்டிற் சைவத்திறம் பெருகியிட; செங்கோல் அரசாட்சி செய்து அறநெறி வழுவாமற் காத்தும் எடுத்துச் சொல்லப்படும் சிவநாமமாகிய திருவைந் தெழுத்தின் நெறியாகிய சைவநெறியினைக் காத்தும், தேவேந்திரனிடத்துக் கொண்ட பொன்னாரமணிந்த மார்பினையுடைய அப்பாண்டியனார் விளங்குகின்றாராகி.
3)" கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப் படை உடையான்
கருதும் கோயில்
# தென்னாடும் # வடநாடும் தொழநின்ற திருவரங்கத்
திருப்பதியின் மேல்
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ்
உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ் இணை பிரியாது
இருப்பர் தாமே
- நாலாயிர திவ்விய பிரபந்தம் 421
பொருள்:-
பெரிய துதிக்கையையுடைய கஜேந்திராழ்வா னுடைய துன்பத்தைப் போக்கின, ஜ்வலியா நின்றுள்ள ,திருவாழியாழ்வன
ை ஆயுதமாகவுடைய எம்பெருமான்
, விரும்பி எழுந்தருளியிருக்கப்பெற்ற கோயிலாய், தென்னாட்டிலுள்ளாரும் வடநாட்டிலுள்ளாரும்சேவிக்கும்பட
ி அமைந்த.....................
நான் மேலே காட்டிய சான்றுகளின் படி விளக்குவது யாதெனில் #தென்னாடு என்னும் சொல் பாண்டி நாட்டைக் குறித்து பெரிய புராணத்திலும்,தமிழ்நாட்டைக் குறித்து நாலாயிர திவ்விய பிரபந்திலும் வந்துள்ளது.இவை இரண்டை தவிர வேறு எப்பகுதியையும் இச்சொல் குறித்து வந்ததில்லை.மாணிக்கவாசகர் கூறும் தென்னாடு இவையிரண்டில் யாதெனின் அதனையும் கீழே கூறுவோம் ...
4)"மன்னும் மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்"
( திருவாசகம், கீர்த்தி திருவகவல் 10)
பதப்பொருள் : சொன்ன ஆகமம் -
மேலுலகத்தில் தான் சொல்லிய ஆகமத்தை,
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில் - நிலைபெற்ற பெரிய மகேந்திர மலையின்கண் வீற்றிருந்து,
தோற்றுவித்தருளியும் - நிலவுலகத்திற்கு வெளிப்படுத்தியு
ம்.
விளக்கம் : ஆகமம் தோற்றுவித்தது.
படைப்புக் காலத்தில் ஆகமத்தை இறைவன் தோற்றுவித்து, பிரணவர் முதலியோர்க்கும், அனந்ததேவர் முதலியோர்க்கும் கூறினான். இவ்வரலாற்றை ஆகமங்கள் கூறுகின்றன. உமையம்மைக்கு இறைவன் ஆகமம் சொல்லிய வரலாற்றைத் திருமந்திரமும் திருத்தொண்டர் புராணமும் கூறுகின்றன. அந்தப் பழைய வரலாறுகளைக் கருத்தில் கொண்டே, "சொன்ன ஆகமம்" என்றார். படைப்புக் காலத்தில் சொல்லிய அந்த ஆகமங்களை, நிலவுலகத்தின் பொருட்டு மகேந்திர மலையில் இறைவன் வெளிப்படுத்தி யருளினான் என்பதை அடிகள் அருளிய இந்தப் பகுதியினாலே அறிகிறோம்.
மேலே காட்டிய திருவாசக அடிகள் கூறுவது யாதெனில் சிவப் பெருமான் சைவ ஆகமங்களை முதல் முதலில் நிலவுலகிற்கு கூறிய மலை மகேந்திரமலை ஆகும் என்பது.இதன் மூலம் சைவ சமய தொடக்கமே அம்மலையிலிருந்த
ு தான் தொடங்குகிறது என்பதும் தெளிவு.
5) "தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே"
"மந்திர மாமலை மகேந்திர வெற்பன்",
"பாண்டி நாடே பழம்பதி யாகவும்"
"தென்னா டுடைய சிவனே போற்றி
யெந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி",
என்றெல்லாம் சிவப்பெருமான் திருவாசகத்தில் கூறப்படுதலால் இமய மலைக்கு முன் மகேந்திர மலையே அவன் முதலிருக்கை என்பதும் பாண்டி நாடே அவனுடைய பழைய இருப்பிடம் என்பதும் தெளிவாகிறது.
இனி மகேந்திர மலை எங்குள்ளதோ எனின் அதனையும் கூறுவோம்.
6) "துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தின்
அங்கனக இலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்" (கோபுர. 68)
"மிகவும் உயர்ந்திருக்கிற பொதிய மலைக்குத் தெற்காகிய திசையில் தொடர்ந்த எழு மலைகளைக் கொண்ட மயேந்திர மலைத்தொடரின் அடிவாரச் சாரலில், அழகிய பொன்மயமாகிய இலங்கை யென்னுந் தேசமும் பொருந்தும்" என்னும் அவ் வடிகளின் உரையை நோக்குக.
மேலே சொன்ன சிவ தருமோத்திர அடிகளால் இந்து மா கடலில் மகேந்திரம் இருந்தது என்பது தெளிவாகிறது.
ஆகவே "தென்னாடு" என்று குறிக்கப்பட்டது கடல் கொண்ட பழம் பாண்டி நாடே ...என்பது தேற்றம்
நேற்று, முற்பகல் 7:38 · Facebook for Android · பொது
சேமி
Jayaprakash Jp மற்றும் 16 பேர்
Aathimoola Perumal Prakash
மகேந்திரமலை இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகேந்திர கிரி என்பர்.
குமரிக்கண்டம் தாண்டி இராவணன் ஆண்ட இலங்கை

குமரிக்கண்டம் பக்தி இலக்கியம் பாண்டியர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக