வெள்ளி, 13 நவம்பர், 2020

தமிழகம் தோல் பொருட்கள் உற்பத்தி இந்தியா வில் 60 சதவீதம்

 

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 3 மே, 2019, பிற்பகல் 3:19
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
ஆடு மாடு தோல்களில் இருந்து தயாரிக்கப்படும் காலணிகள், உடைகள், இதர பொருள்கள் சந்தையில், உலகின் முக்கியமான இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது
இந்தியாவின் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் 60% தமிழ்நாட்டில் தான் இருக்கிறது...
உலகளவில் தேவையான சுத்தப்படுத்தப்பட்ட தோல்களில் (Finished Leather) 6% தமிழ்நாட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது
இந்தியாவின் ஒட்டுமொத்த தோல் பொருள்கள் ஏற்றுமதியில், 50% தமிழ்நாட்டில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது..
தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளும்
# கழிவுநீர்_சுத்தப்படுத்தும்_வசதிகள் கொண்டவை... பெரும்பாலும் "ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்" தொழில்நுட்ப த்தை பயன்படுத்தி "ஜீரோ கெமிக்கல் டிஸ்சார்ஜ்" தரத்தை உறுதி செய்கிறார்கள்.. பல சர்வதேச நாடுகள் தங்கள் தோல் பொருள்களை தமிழ்நாட்டில் இருந்து வாங்குவதற்கு இதுவொரு முக்கியமான காரணம்...
தமிழ்நாட்டில் மொத்தம் 764 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன... சராசரியாக நாளொன்றுக்கு 800 முதல் 1,200 டன் தோல் பதனிடப்படுகிறது...
இந்தியாவில் மொத்தம் 170 கழிவுநீர் சுத்தப்படுத்தும் ஆலைகள் (ETP - Effluent Treatment Plant) தோல் பதனிடும் துறையில் இயங்குகிறது... இதில் 140 கழிவுநீர் சுத்தப்படுத்தும் ஆலைகள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன...
இந்தியாவில் மொத்தம் 16 பொது கழிவுநீர் சுத்தப்படுத்தும் ஆலைகள் (CETP - Common Effluent Treatment Plant).. இதில் 12 ஆலைகள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன... இதில் 631 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன....
தோல் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 80% பெண்கள் தான் வேலை செய்கிறார்கள்...
நேற்று, பிற்பகல் 1:36 · Facebook for Android · பொது
சேமி
இரா.தமிழன் பி.செங்கமுத்து மற்றும் 136 பேர்

பொருளாதாரம் தனிநாடு பெருமைகள் லெதர் leather

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக