வெள்ளி, 13 நவம்பர், 2020

ஈழம் கிழக்கு மதமோதல் 18 சிங்கள குடியேற்றம்

 

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 30 ஏப்., 2019, பிற்பகல் 10:17
பெறுநர்: எனக்கு
Thiruchchelvam Kathiravelippillai, Jeevan Sha மற்றும் 88 பேருடன் இருக்கிறார்.
தொடர் – 18
கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை விகிதத்தினை
குறைப்பதற்காக திட்டமிட்டவகையில் தென்பகுதியில் வசித்த சிங்கள் மக்கள்
அம்பாறை, திருக்கோணமலை மாவட்டங்களில் குடியமர்த்தப்பட்டனர்.
திருக்கோணமலை மாவட்டத்தில் அல்லை, கந்தளாய், முதலிக்குளம் (மொரவெவ),
குமரேசன்கடவை(கோமரங்கடவெல) பெரியவிளாங்குளம் (மஹாதிவுல்வெவ), சாலியபுர,
கல்மெட்டியாவ, ஜெயந்திபுர, மஹாவலிகம….. போன்ற இடங்களில்
விவசாயக்குடியேற்றங்கள் என்ற போர்வையில் சிங்கள மக்கள்
குடியேற்றப்பட்டனர்.
இந்நடவடிக்கை மூலமாக சிங்கள மக்கள் எண்ணிக்கையில் அதிகரித்தமையினால்
அரசியல் ரீதியாகவும் திருக்கோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம்
பின்நாட்களில் அதிகரித்தது.
கந்தளாய், மொரவெவ, கோமரங்கடவெல, சேருநுவர ஆகிய பிரதேசசபைகள் ஏறத்தாள
தனியான சிங்கள மக்களின் பிரதேசசபைகளாகின.
திருக்கோணமலை மாவட்டத்தில் எண்ணிக்கையில் 90 வீதமாக இருந்த தமிழ் பேசும்
மக்கள் 70 வீதமாக்கப்பட்டதுடன் 30வீதமான உள்ளுராட்சிமன்றங்கள் தனியான
சிங்கள மக்களின் கைகளுக்குச் சென்றது.
இவ்வாறான குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்களவு எதிர்ப்புகள் இன்றியே
நடைபெற்றன. இக்குடியேற்றங்களால் “நமக்கென்ன பாதிப்பு வரப்போகின்றது “ என
தமிழ்பேசும் மக்கள் வாளாதிருந்தனர்.
80 களில் தமிழ் பேசும் மக்களிடையேயான பிளவினைப் பயன்படுத்தி
ஆட்சியாளர்கள் மிகவும் இரகசியமான முறையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களைப்
பிரிப்பதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டார்கள். வடக்கையும் கிழக்கையும்
தொடுக்கின்ற ஊராக தென்னவன்மரபுஅடி ஊர் விளங்கியது. அவ்வூரிலிருந்து
மக்களை 03.12.1984 இல் வெளியேற்றியதனை முன்னர் பார்த்தோம்.
அதற்கு முன்னர் 1984 நடுப்பகுதியில் மணலாறுப்பகுதியிலிருந்த 42 ஊர்கள்
படையினரால் 48 மணிநேரத்தினுள் தமது வீடுகளிலிருந்து துரத்தப்பட்டனர்.
ஆரியகுண்டம்,கும்பகர்ணன்மலை,கொக்குச்சான்குளம்,கொக்குத்தொடுவாய்,வெடுக்கன்மலை
போன்ற ஊர்களிலிருந்த மக்களே படையினர் ஆமட்கார்களில் ஒலிபெருக்கிகள்
மூலமாக வெளியேற்றப்பட்ட மக்களாவர். அவர்கள் இன்றுவரை அவர்களது
ஊர்களுக்குத் திரும்பமுடியாத வகையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு
அவ்வூர்களில் அநேகமான ஊர்களின் பெயர்கள் சிங்களப்பெயர்களாக உள்ளன.
அத்தோடு திருக்கோணமலை – முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட காட்டுப்
பிரதேசம் துப்பரவாக்கப்பட்டு மணலாறு என்ற இடத்தினை மையமாக வைத்து
இரகசியக்குடியேற்றமொன்றினை 1984 இல் தொடங்கினார்கள்.
இக்குடியேற்றத்திற்கு தொடக்கத்தில் அநுராதபுர சிறையிலிருந்து 150
சிறைக்கைதிகளையும் அவர்களது குடும்பங்களையும் குடியேற்றினார்கள். பின்னர்
மேலும் 150 குடும்பங்களையும் குடியேற்றினார்கள்.
இத்திட்டத்தினை உண்மையில் அவ்வேளை யாரும் அறிந்திருக்கவில்லை என்பதே
உண்மையாகும். 1986 இன் இறுதிப்பகுதியில் ஈரோஸ் அமைப்பிற்கு இத்தகவல்
கிடைக்கப்பெற்றது. ”மணலாறு வெலிஓயாவாக மாறப்பேகிறது” ,”வடக்கு கிழக்கு
மாகாணங்கள் துண்டாடப்படுகின்றன” என்ற வாசகங்களுடன் திருக்கோணமலை
மாவட்டமும் முல்லைதீவு மாவட்டமும் பிரிக்கப்படுவது போன்ற படத்துடன் கூடிய
சுவரொட்டிகளை வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஈரோஸ் அமைப்பு ஒட்டியது.
1988 ஏப்ரல் 04 ஆம் நாள் மணலாறு என்ற இடம் “வெலிஓயாவாக“ மாற்றப்படுவதாக
சிறப்பு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. சிங்கள் மக்கள் அதிகளவில்
குடியேற்றப்பட்டார்கள். சிறப்புப் படையினர் (Special Forces)
அப்பிரதேசத்தில் ஜெனரல் ஜனகபெரேரா தலைமையில் நிலை நிறுத்தப்பட்டனர்.
“படையினர் பாதுகாப்பிற்கு மக்கள் , மக்கள் பாதுக்காப்பிற்கு படையினர்“
என்ற கோட்பாட்டினை உருவாக்கி ஜனகபுர,சிங்ஹபுர, வெலிஓயா, சம்பத்நுவர போன்ற
ஒவ்வொரு ஊரின் இடையிலும் சிறப்புப் படையின் முகாம் அமைக்கப்பட்டது.
குடியேற்றப்பட்ட மக்களுக்கு விவசாயத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும்
அரசினால் வழங்கப்பட்டன. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது படையினர்
நீர்த் தாங்கிகள் மூலமாக இலவசமாக நீர்விநியோகத்தினை மக்களுக்கச்
செய்தனர்.
திட்டமிட்ட செயற்பாடுகள் மூலமாக தற்போது தமிழ்பேசும் மக்களது உறவு
விரிசல் அதிஉச்சநிலைக்குச் செல்வதற்கு முன்னர் ஆட்சியாளர்களின் கபட
நோக்கினை உணர்ந்து தமிழ்பேசும் மக்கள் குறிப்பாக இருசமூகங்களின்
இளைஞர்கள் தம்மிடையேயான உறவினை வளர்த்தெடுப்பதற்கு உளப்பூர்வமான
நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக இல்லாவிட்டாலும் மொழி அடிப்படையிலேனும்
இணங்காவிடில் இரு சமூகங்களின் இருப்பும் எதிர்வரும் ஆண்டுகளில்
கேள்விக்குறியாக்கப்படலாம்.

Jawhary Abdul Azeez
உண்மையில் 1977---1994,ஆண்டுவரை இந்த நாட்டை ஆண்ட UNP, கட்சியினரின்
இனவாதிகளினது அட்டகாசம் தான் இவ்வாறு வடகிழக்கில் அரங்கேறியது,அதாவது
1977,ல்UNP ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதய ஜனாதிபதி JR ஜெயவர்தனாவின்
கிழட்டு நரித்தந்திரத்தால்தான் இந்த கையறு நிலையும் ,மிக மிக மோசமான காணி
சவீகரிப்பு நிலையும் மிக மிக. விவேகமாகவும், வேகமாகவும் ,கட்சிதமாகவும்
முன்னெடுக்கப்பட்டது,இது விஷயத்தில் தற்போதய விஷம் கலந்த பொல்லாட்சியும்
மிகத்தீவிரமாக உள்ளதை அவதானிக்க முடிகிறது, அத்துடன் காணிகள் அபகரிப்பு
விஷயத்தில் அந்தக்கொள்கையை நிலைநாட்டுவதில் மாறி மாறி வந்த எந்த ஆட்சியாக
இருந்தாலும் அவர்கள் இது விடயத்தில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்
என்பது சாசுவதம்வாய்ந்த உண்மையாகும்,
மேலும் இப்பொழுது தும் கூட வடகிழக்கில் கூட. தமிழ்,முஸ்லிம்களின்அதிக
காணிகள் விடுவிக்கப்பட்டாலும் மறுபுறம் இராணுவ பரிகரணம்,,முப்படையினரின்
விசேஷ படையணிகளை உருவாக்கி வடகிழக்கில் ஆங்காங்கே எமது காணிகள் பறிபோகும்
நிலைதான் தென்படுகிறது, இது வியத்தில் தமிழ்,முஸ்லிம் மக்கள் தமது
சொந்தக்காணிகளை விடுவிப்பதற்காக தமது சிந்தனா ரீதியான போராட்டத்தை
வலுப்படுத்தவேண்டும் ,வளப்படுத்தவேண்டும்,,,,தமிழர்களும் ,முஸ்லிம்களும்
ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடுவார்களா?????
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · மேலும் · 27 ஆக., 2018

Hafees Naleem
இன்ஷா அல்லாஹ் இதன் பின்னாவது ஒன்றுபடுவார்கள்.

Hafees Naleem
இதே போல்தான் சேருவிலையை அண்டிய பிரதேசங்களிலும் தெட்கு சிங்களவர்கள்
விமல் வீரவன்சவினால் திட்டமிட்டு குடியேற்றப்பட்டார்கள்.
உரையாடல் விவாதம் ஆயுதக்குழு ஒற்றுமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக