வெள்ளி, 13 நவம்பர், 2020

கேரளா தண்ணீர் தடுத்தல் ரயில் மூலம் குடிநீர் ஏமாற்று

 

aathi tamil aathi1956@gmail.com

சனி, 22 ஜூன், 2019, முற்பகல் 10:34
பெறுநர்: எனக்கு
பதிவாளர்: Nambikai Raj
1.'கேரளாவில் வெள்ளம் வர காரணம் முல்லை பெரியாறு அணைதான். அந்த அணையின் நீர்மட்டத்தை குறைக்கனும் ' - கடும் வெள்ளத்தில் கேரளா மூழ்கிக்கொண்டிர
ுந்தபோது பினராயி விஜயன் கோர்ட்டுக்கு போய் இப்படி சொல்லி முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைப்பதில்தான் குறியாக இருந்தார்.
தனக்கு ஒரு கண்ணு போனாலும் எதிரிக்கு இரண்டு கண்ணும் போகட்டும் என்ற குரூர புத்தி.
2. உச்சநீதின்ற உத்தரவை மீறி முல்லை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளதாக கூறி கடந்த வாரம் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கேரளா மீது தொடுத்துள்ளது.
3. கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அந்த ஆற்றுநீரை கேரளா பக்கம் திருப்பிவிட முயற்சித்துவருவதும் இதே கேரளாதான்.
4. காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தே தீர வேண்டும் என தமிழகமும், புதுச்சேரியும் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தபோது கர்நாடகாவோடு சேர்ந்துகொண்டு காவிரிநதிநீர் ஆணையம் அமைக்க வேண்டியதில்லை என பதில் மனு தாக்கல் செய்த மாநிலம் கேரளா.
5. தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமான முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்பதையே தொடர்ந்து 30 ஆண்டுகளாக சொல்லி வரும் மாநிலம் கேரளா.
6. முல்லை பெரியாறு அணையை நிர்வகிக்கும் பொறியாளர் அலுவலகம் மற்றும் அவர்களின் குடியிருப்பு பகுதிக்கு இப்போதுவரை மின்சாரம் தராமல் காழ்ப்புணர்ச்சியோடு நடந்துகொள்ளும் மாநிலம் அது. முல்லை பெரியாறு அணை பகுதிக்கு மின்சாரம் வழங்க தமிழக அரசு 2002ல் கேரளாவுக்கு செலுத்திய 1.5 கோடி டெபாசிட் தொகை இன்னும் கேரள மின்வாரியத்திடமே உள்ளது. ஆனால் முல்லை பெரியாறு அணைக்கு மட்டும் மின்சாரம் இல்லை. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளுக்
கு மட்டும் கேரள அரசால் மின்சாரத்தை கொடுக்க முடிகிறது.
முல்லை பெரியாறு, சிறுவாணி, காவிரி என தொடர்ந்து தமிழகத்தின் குடிநீர் ஆதாரங்களை தடுத்துவிட்டு சென்னைக்கு இப்ப ஒரு ரயில்ல குடிதண்ணீர் ஏத்தி அனுப்பி வைக்கிறேன்னு காம்ரேடுகளின் கலியுக புருஷன் பினராயி விஜயன் சொல்லுவாராம். அதுக்கு உடனே நம்ம ஊர் எதிர்கட்சி தலைவர் நன்றி சொல்வாராம்.
ஏன்னா பினராயி அந்தளவுக்கு மனிதாபிமானி.
கேரள வெள்ள நிவாரண நிதியா துபாய் 700 கோடி பணம் கொடுக்கவிருப்பதா பொய் சொல்லி ஏமாற்றிய ஆளுதான?

11 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி

கந்தசாமி அதியமான் மற்றும் 81 பேர்
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்...
கருத்து
படத்தை இணை ·
நண்பர்களைக் குறிப்பிடவும்

Aathimoola Perumal Prakash
தமிழக எல்லைக்குள் வந்து செண்பகவல்லி அணையை உடைத்துவிட்டு சென்றதும் இதே கேரளாதான்.
தண்ணீர் கேட்ட தமிழனை வெந்நீர் ஊற்றிக் கொன்றதும் இதே கேரளாதான்.
பிடித்திருக்கிறது

மலையாளி அணை கம்யூனிஸ்ட் சென்னை தட்டுப்பாடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக