ஞாயிறு, 15 நவம்பர், 2020

பார்ப்பனர் அறுவகை தொழில் தொல்காப்பியம் உரை

 

aathi tamil aathi1956@gmail.com

5 ஜூலை, 2019, முற்பகல் 10:04
பெறுநர்: எனக்கு
பாண்டியராசன் வழக்கறிஞர் சட்டத்தரணி
# தமிழ்ப் பார்ப்பனர்.
# தொல்காப்பியத்தின் # பாலை நிலத்துக்குரிய வாகைத்திணையில்
”அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐ வகை மரபின் அரசர் பக்கமும்
இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறு இல் செய்தி மூ வகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்
பால் அறி மரபின் பொருநர் கண்ணும்
அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலை பெற்றது என்மனார் புலவர்”
என்கிறார் தொல்காப்பியர். (புறத்திணை இயல் 74)
இதில் “அறுவகைப்பட்டப் பார்ப்பனப் பக்கமும்” என்றுசொன்னதைக் கொண்டு
பார்ப்பனர்கள் உள்ளிட்ட வர்ணங்களை மனுவாதிகள் தான் தமிழ் மண்ணில் புகுத்தி விட்டனர் என்று பலரும் நினைக்கிறார்கள்.
அவர்கள் அப்படி நினைக்க முக்கியக் காரணம்,
மனுவாதி வர்ணத்தில் பிராமனர் உள்ளிட்ட
# நான்குவர்ணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு தொழில்கள் சொல்லப்பட்டுள்ளன.
அதே விதமான ஆறு தொழில்களையும்
தொல்காப்பியம் சொல்கிறது.
ஆனால் இந்த்த் தொல்காப்பியச் சூத்திரத்தில் உள்ள
ஒரு மாறுபாட்டைப் பலரும் கவனித்ததில்லை.
எல்லோருக்குமே ஆறுவகைதான் என்றால்,
அந்தச் சூத்திரத்தின் இரண்டாவது வரியில்
‘ஐவகை’ மரபின் அரசர் பக்கம்’
என்று அரசர்களுக்கு ஐந்து வகைகளை மட்டுமேதொல்காப்பியம் சொல்கிறதே,
அது எப்படி?
அரசர்களுக்கு ஐந்து வகை என்றால்,
இந்த வர்ணப்பகுப்பை மனுவாதிகள்தான்திணித்தார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
தொல்காப்பியம் கூறுவது மனுவாதி வர்ணம்தான் என்று எண்ணும் எத்த்னை பேர் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள்?
கேட்டிருந்தால், இந்தப் பகுப்பு, தமிழ்மக்களுக்கிடையே, தமிழ் மக்களுக்காக எற்படுத்தப்பட்டது என்பதைஅறிந்திருப்பார்கள்.
ஐவகை என்று அரசர்களுக்குச் சொல்லவே,
அது க்ஷத்திரியர்களுக்கான ஆறு தொழில்களைப்பற்றியது அல்ல என்று தெரிகிறது.
அது போலவே அறு வகை என்று பார்ப்பனர்களுக்குச்சொன்னது
வர்ணம் குறித்த பகுப்பல்லாத வேறு ஏதோ ஆறு வகைகளைப் பற்றிய பகுப்பு என்றும் தெரிகிறது.
இந்தச் சூத்திரத்துக்கு உரை எழுதியுள்ளநச்சினார்க்கினியார்,
ஆறு பார்ப்பியல் என்று சொல்லாமல், ஆறு வகை என்று தொல்காப்பியர் சொல்லியுள்ளதைச் சுட்டிக்காட்டுக
ிறார்.
அந்த வகைகள் என்னவென்றும் அவர் விளக்குகிறார்.
அவை மனுவாதி வர்ணாஸ்ரமத்தில் இல்லை.
அவரது உரையிலிருந்து, இந்தப்பகுப்பு என்பது
தமிழர்களது வாழ்க்கை முறையை ஒட்டி எழுந்த்துஎன்பது தெளிவாகிறது.
அவர் சொல்லும் விவரத்தை அறியும் முன் பார்ப்பனன்என்கிறாரே,
பார்ப்பனன் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்றுபார்ப்போம்.
பார்ப்பனர்களைக் குறிக்கும் வேறு சொற்களும்இருக்கின்றன.
அவற்றின் அர்த்தத்தையும் பார்ப்போம்.
சூடாமணி நிகண்டு தரும் விவரத்தின்படி,
பார்ப்பார் = வேதங்களைப் பார்ப்பவர்.
மறையவர் = மறை நூல் ஓதுதல் உடையவர்.
வேதியர் = வேதம் ஓதுதல் உடையவர்.
அந்தணர் = அழகிய தண்ணளி உடையவர்.
(வேதாந்தத்தை அணவியவர் என்பதுநச்சினார்க்கினியர் தரும் விளக்கம்)
இந்தப் பார்ப்பனர்களுக்கான தொழில்கள் ஆறு.
அவை
ஓதல், (கற்றல்)
ஓதுவித்தல், (கற்பித்தல்)
வேட்டல் (வேள்விகள் செய்தல்)
வேட்பித்தல் (வேள்விகள் செய்து வைத்தல்)
ஈதல் (தானம் கொடுத்தல்)
ஏற்றல் (தானம் பெற்றுக் கொள்ளுதல்)
இந்த ஆறு தொழில்களில் ’ஓதல்’ ஓதுவித்தல்’ என்றுசொல்லப்பட்
டுள்ளதே,
எதை ஓதினார்கள், எதை ஓதுவித்தார்கள்
என்று பார்க்கும் போது அதில் ஆறு வகை வருகிறது.
அந்த ஆறு வகைகள்
தலை, இடை, கடை என்று மூன்றாகப் பிரியும்.
இந்த ஆறு வகைகளைக் குறித்து நச்சினார்க்கினியர்தரும் விளக்கத்தைக் காண்போம்.
தமிழ் ஓதுதலில் அவர் சொல்லும் தலை, “தமிழ்ச்செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும்,ம
ார்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கவுதமனாரும்போலார் செய்தன தலை” என்கிறார்.
ஆகவே... தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் உள்ள பார்ப்பனர்கள் தமிழ் மறைகளை ஓதிய தமிழர்களே...
கிபி.14 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் இங்கு வந்த நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் சமஸ்கிருத வேதங்கள் வழிபாட்டு மொழியாக நடைமுறைக்கு வந்துள்ளன...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக