வெள்ளி, 13 நவம்பர், 2020

குணா பேட்டி ஏரணம் நூல் மற்றும் தன்னைப் பற்றி

 

aathi1956 aathi1956@gmail.com

திங்., 6 மே, 2019, பிற்பகல் 5:48
பெறுநர்: எனக்கு
Gunaseelan Samuel
மே 5, 2019 அன்று சென்னையில் ‘ஏரணம்’ எனும் நூல் வெளியிட்டபோது நான் ஆற்றிய ஏற்புரை:
தலைவர் அவர்களே!
பெரியோர்களே!
தாய்மார்களே!
அறிஞர் பெருமக்களே!
இனிய தமிழ் நெஞ்சங்களே!
நான் எழுதிய ‘ஏரணம்’ எனும் நூல் இன்று வெளியிடப்பட்டது. அத்துடன் என் முந்தைய நூல்களான ‘வள்ளுவத்தின் வீழ்ச்சி’யின் மூன்றாம் பதிப்பும், ‘முன்தோன்றி மூத்தகுடி’யின் இரண்டாம் பதிப்பும், ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்!’ இன்னொரு பதிப்பும் அச்சேற்றப்பட்டு
ள்ளன.
இந் நூலை எழுதிக்கொண்டிரு
க்கும்போதே மதிப்பிற்குரிய ஆம்பூர் க. எ. மணவாளன், அருட்கண்ணனார், பாவலர் செம்பியன், ‘தமிழோசை’ ஆசிரியர் தமிழாலயன் ஆகியோர் என் பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவி, நான் சொல்லி வந்துள்ள கருத்துகளைப் பிறரிடம் சொல்ல விரும்பினர். அதற்கு நான் ஒப்பினேன். அவர்களுடைய அருமுயற்சியால்தான் ‘ஏரணம்’ இன்று அரங்கேறியுள்ளது.
வேற்று மாநிலத்தில் வாழ்பவன் நான். அருட்கண்ணனார் அவர்களை மூன்று முறைதான் நேரில் பார்த்திருக்கிற
ேன். அவரோடு நெடுநேரம் கலந்துரையாடும் வாய்ப்பும் எனக்கு இதுவரை கிட்டவில்லை. பாவலர் செம்பியன், தமிழாலயன் ஆகியோருடனும் அதே கதைதான். இருந்தும், என்னையும் அவர்களையும் பிணைக்கின்ற ஈர்ப்பாற்றல்தான் என்ன? வேறென்ன? தமிழரினத்தின் பாலும் தமிழ் மண்ணின்பாலும் கொண்டிருக்கும் உள்ளார்ந்த இனப் பாசமே எங்களை இணைக்கிறது; பிணைக்கிறது.
கி. பி. 250ஆம் ஆண்டளவில் களப்பாளர் எனும் கருநாடக வடுக அநாகரிகர்கள் தமிழகத்தின்மீது படையெடுத்தனர். அவர்களுக்குப் பிறகு வேறு பிற வடுகப் படையெடுப்புகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றால், தமிழகம் நிலைகுலைந்தது. தமிழர்களின் பேரரசுகளும் கொற்றங்களும் கொடிகளும் ஒழிந்த நிலையில், வந்தேறி வடுக அரசுகள் தமிழரினத்தை அடிமைப்படுத்தின. அந்த வடுகப் படையெடுப்புகளால் வந்த குழப்பங்கள் தணிந்தபின், ஏதோ ஒரு வகை குமுக அமைதி நிலவத்தான் செய்தது. பின்னர், விசயநகரத்துக் கம்பண்ணன் (1378) படையெடுப்புகளும் வந்தன. அவற்றால் தமிழகம் மேன்மேலும் நிலைகுலைந்தது; அமைதி கெட்டது. மதுரை நகரை மட்டுமே பிடித்தாண்ட சுல்தான்களின் ஆட்சியை ஒழிக்க உதவுவதெனும் சாக்குப் போக்குடன் வந்த விசயநகர வடுகர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர்; முதலில்,. பாண்டிய மன்னனின் வைப்பாட்டிகளுக்குப் பிறந்த பிள்ளைகளை முன்னிறுத்தி ஆள முற்பட்டனர்; அடுத்து அந் நாட்டை நேரடியாக ஆளத் தொடங்கினர். அதனால் வந்த நாயக்கர் ஆட்சியின் போது நிலைமை மேன்மேலும் சீர்கெட்டது; தறிகெட்டது. நாயக்கர்கள் தாங்கள் அமைத்த பாளையப்பட்டுகளை வைத்து மக்களைச் சூறையாடினர். இந் நிலையில், தடியெடுத்தவனெல்
லாம் தண்டல்காரனானான்.
நாயக்க வடுகரால் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மக்கள், ஏதோ ஒருவகை அமைதி கிட்டாதாவென ஏங்கித் தவித்தனர். இந் நிலையில், ‘இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன? எங்களை அமைதியாக வாழவிட்டால் போதும்’ எனும் மனநிலை தமிழர்களைத் தொற்றிக்கொண்டது. இதனால், தமிழர்களிடம் எஞ்சியிருந்த இன ஓர்மையும் மெல்ல மங்கி மறைந்தது. மராத்தியரின் ஆட்சிக்காலத்திலும், கருநாடக நவாபுகளின் ஆட்சிக்காலத்திலும், ஆங்கிலேயரின் நெடிய ஆட்சிக்காலத்திலும் ‘இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன?’ எனும் அதே மனநிலைதான் நீடித்தது.
தமிழரிடம் இன ஓர்மையே அற்றுப்போன வரலாற்றுச் சூழலில் பிறந்ததுதான் என் தலைமுறை. மைசூர் மன்னராட்சிக்கு உட்பட்டிருந்து தமிழ்ப் பகுதியான கோலார்த் தங்கவயலில் பிறந்து வளர்ந்தவன் நான். ஏழாம் வகுப்பு வரையில் தமிழ்வழியில்தான் படித்தேன். நல்லவேளை, என் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்மொழி யின்பால் பற்றை விதைத்தனர். தமிழ்மொழியின்பால் பற்று கொண்டிருந்தேனே தவிர, ‘தமிழன்’ எனும் இன ஓர்மை அப்போது என்னிடமும் இல்லை.
ஆங்கிலேயர் காலத்து இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய மிகப் பெரிய தொழில்நகரம் கோலார்த் தங்கவயல். இந்தி(ய)ப் பேராயக் கட்சி கடைவிரித்த ‘இந்தியத் தேசிய’ ஓர்மையும், தங்கச்சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் வாயிலாக இந்தி(ய)ப் பொதுவுடைமைக் கட்சி புகட்டிய ‘வருக்க’ ஓர்மையும், கிறித்துவச் சமயப் பரப்பலால் வந்த சமய ஓர்மையும், அம்பேத்கரின் ‘பட்டியல் சாதிக் கூட்டமைப்பு’ (Scheduled Castes Federation) ஊட்டிய சாதி ஓர்மையும் மட்டுமே நான் வளர்ந்த சூழலில் விளங்கிய ஓர்மைகளாகும். தமிழர்கள் 95 விழுக்காட்டினராயிருந்த கோலார்த் தங்கவயலில் நிலவிய அது போன்ற சூழல், ‘தமிழர்’ எனும் தேசியஇன ஓர்மை தங்கவயல் தமிழரிடம் இல்லாமல் செய்தது. அப்படியிருந்தும், பொங்கல் விழா போன்ற பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. அவற்றின் ஊடே தமிழ்மொழி உணர்வு தங்கவயலில் ஓரளவு வளரத்தான் செய்தது. தமிழ்நாட்டிலிருந்து வந்த திராவிட அரசியலாரும் தமிழைப்பற்றி மட்டுமே பேசிச் சென்றனரேயன்றித், தமிழர் ஒரு தனித் தேசிய இனம் என்று சொல்லவேயில்லை. மேலும், திராவிடக் கழகமோ திராவிட முன்னேற்றக் கழகமோ அங்குப் பெரிதாக வளரவில்லை. பாவாணரின் தனித்தமிழ் இயக்கமான உலகத் தமிழ்க் கழகம் சிறிதளவு வளர்ந்தது. மொழி தூய்மையைப் பற்றியும் மொழி மீட்சியைப் பற்றியும் மட்டுமே அது பேசியது; ‘தமிழர் ஒரு தனித் தேசிய இனம்’ எனும் இன ஓர்மையைப்பற்றி அவ்வளவாகப் பேசவில்லை.
உயர்நிலைப்பள்ளியில் இருந்தபோது தமிழரசுக் கழகத்தின்பால் நான் கொண்ட ஈர்ப்பால் என்னிட மிருந்த தமிழுணர்வு மேலும் ஊட்டம் பெற்றது. கல்லூரி வாழ்க்கையின்போது நான் பற்றுகொண்டிருந்த பொதுவுடைமைக் கட்சி, தமிழுக்கும் தமிழரின் இன ஓர்மைக்கும் எதிராயிருந்தது.
தமிழ்மொழியின்பால் மட்டும் பற்று கொண்டிருந்த எனக்குத் ‘தமிழன்’ எனும் இன ஓர்மை வந்ததே ஒரு தனிக் கதை.
வேலூரில் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டுத் தங்கவயலில் செங்கொடித் தொழிலாளர் சங்கம் நடத்திவந்த உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்தேன். பின்னர்க் கருநாடகத்தின் தலைநகரான வெண்களூருக்குச் சென்று இந்தியத் தலைமைக் கணக்காயர் அலுவலகத்தில் ஓராண்டு பணிபுரிந்தேன். அதையடுத்து இந்தியத் தலைமை வங்கியில் சேர்ந்து இருபத்தைந்து ஆண்டுக்காலம் பணியாற்றினேன். மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சிச் சார்புடன் வேற்று மாநிலத்தில் வாழ்ந்ததால் எனக்குள் இயல்பாகவே இருந்த தமிழ்மொழிப் பற்றை வெளிக்காட்ட முடியவில்லை. மார்க்சியக் கோட்பாட்டிலும் மெய்யியலிலும் எனக்கிருந்த தெளிவும் ஆழமும் அக் கட்சியிலிருந்த கன்னடர், துளுவர், தெலுங்கர், மலையாளிகள் ஆகியோரைவிடச் சற்று மேம்பட்டே இருந்தது. ஆயினும், தமிழன் என்பதாலும், பிராமணன் அல்லாதவன் என்பதாலும் திட்டமிட்டு மட்டம் தட்டப்படுவதை என்னால் பட்டறிய முடிந்தது. மேலும், கன்னட இனவெறியும் சாதிவெறியும் அக் கட்சிக்குள் கோலோச்சின. இந்தச் சூழலில், ‘தேசிய இனங்களுக்குத் தனிநாட்டுரிமை’ (The Right of Nations to National Self-Determination) எனும் இலெனினியக் கோட்பாடு என்னை வெகுவாக ஈர்த்தது. தமிழர் ஒரு தனித் தேசிய இனம் எனும் ஓர்மையை நோக்கி அதுவே என்னை ஆற்றுப்படுத்தியது.
அந்த இலெனியக் கோட்பாட்டை அடாது விடாது ஊன்றிப் பயின்ற நான், ‘இந்தியா ஒரு தேசம் ஆகாது; அஃது ஒரு பலபட்டறை அரசேயன்றித் தேசம் ஆகாது; இந்துத்துவமே அதன் உயிர்நாடி’ என்றெல்லாம் சுற்றியிருந்த தமிழரல்லாத் ‘தோழர்களிடம்’ படித்துப் படித்துச் சொல்லி வழக்குரைத்தேன்; முட்டி முயன்று பார்த்தேன். ஒரு பயனும் இல்லை. இடையில், நக்சல்பாரி உழவர்க் கலகம் வந்தது; மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி அதனால் உடையத் தொடங்கியது. நானும் நக்சல்பாரிகளின்பால் சாய்ந்தேன்; அங்கும் அதே தேசிய இனக் கோட்பாட்டைச் சொல்லிப் பார்த்தேன். தெலுங்கரும் வங்காளிகளுமே அதன் தலையில் இருந்ததால், என் குரல் எடுபடவில்லை. இதற்கிடையில், இடங்கைப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து 1968ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டேன். அதற்குப் பின்தான் எழுதத் தொடங்கினேன். வேற்றுமாநிலத்தில் இருப்பதால், முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதிக்கொண்டிருந்தேன்.
இந் நிலையில், ஐரோப்பியச் சூழலில் பிறந்த மார்க்சியத்தைச் சீனச் சூழலுக்கும் வரலாற்றுக்கும் இசைய சீனமயமாக்கியதைப்போல் மார்க்சியத்தைத் தமிழ்மயமாக்க முயன்றேன். இந்திரா காந்தி கொணர்ந்த நெருக்கடிநிலையி
ன்போது வெண்களூர்ச் சிறையில் அடைப்பட்டபோதுதான் (1976ஆம் ஆண்டுதொட்டுத்தான்) தமிழில் எழுதலானேன். சிறையிலேயே மூன்று நூல்களைக் கலப்பிலாத் தமிழில் எழுதினேன். அவற்றைக் கொள்வாரில்லை. அந்தத் தோல்விக்கான காரணம் அப்போது புரியவில்லை.
காலப்போக்கில் உண்மை புரிந்தது. தமிழ்நாட்டுப் பொதுவுடைமைக் கட்சிகள் தமிழர் தலைமையில் இல்லை; வடுக, பிராமணிய நலன்களை அகத்தில்கொண்டு ‘புரட்சி’ எனும் பெயரில் தமிழரினத்தைக் கீழறுப்பதே அக் கட்சித் தலைமைகளின் ஒற்றை நோக்கும் போக்குமாயுள்ளது என்பதே நான் கண்ட அந்த உண்மை. மேலும், தேசிய இனங்களுக்கு இடையிலான நெடிய போராட்டங்களே உலக வரலாறாய் விரிந்து கிடப்பதைக் கண்டுகொண்டேன். மார்க்சியமாவது, உலகநேயமாவது! எல்லாம் வெற்று மாய்மாலங்கள் என்பது அப்போது புரிந்தது.
இந் நிலையில், போகும் திசையறியாது ஈ. வெ. இராமசாமி நாயக்கரின் நூல்களையும் அம்பேத்கரின் படைப்புகளையும் விழுந்து விழுந்து படித்ததேன். தமிழர்களை ஏய்த்து முடக்கி அடக்கியாளத் தெலுங்கு வடுகர்கள் இட்டுள்ள ஒரு பொறியே ‘திராவிடம்’ எனும் மாய்மாலம் எனும் ‘ஞானம்’ அப்போதுதான் பிறந்தது. அதுவே கருவாகிக் குழவியாகிப் பிறந்து தவழ்ந்து தட்டுத்தடுமாறி நடைபயிலத் தொடங்கி ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்!’ எனும் குறுநூலாக வெளிப்பட்டது.
சோவியத் ஒன்றியத்திற்குச் சென்று வந்த ஈ. வெ. கி. சம்பத், தேசிய இனங்களைப்பற்றிய கருத்துகளை ஏந்திவந்தார். தி. மு. க. விலிருந்து வெளியேறிய அவர் ‘தமிழ்த் தேசியக் கட்சி’யைத் தொடங்கினார். மொழிவழி தேசியத்தின் அடிப்படையில் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னாட்சித் தமிழகத்தைக் காண்பதே அதன் நோக்கமெனச் சொல்லப்பட்டது. அதை அடைவதற்காகச் சுண்டுவிரலையும் அசைக்காத சம்பத், அடுத்தத் தாவலில் பேராயக் கட்சியில் அடக்கமாகிவிட்டார். அவர் ஒரு தெலுங்கர். மேலும், தமிழரின் இனப்பகையாகிய ஈ. வெ. இராமசாமி நாயக்கரின் அண்ணன் மகன்ஆவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை எதிர்ப்பதற்காக அவர் எய்த கடுதாசிக் கணையே அவரது ‘தமிழ்த் தேசியம்’. அந்தத் ‘தமிழ்த் தேசியம்’ என்மேல் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆயினும், ‘‘திராவிடத்தால் வீழ்ந்தோம்!’ எனும் கட்டுரையை வடிப்பதற்கு முன்னரே தேசிய இனங்களுக்குத் தனிநாட்டுரிமை’ எனும் இலெனினியக் கொள்கையை அடியொற்றித் ‘தமிழ்த் தேசியத்’தைப்பற்றி எழுதிவந்தேன்.
‘எதிரிதான் உன் எதிர்மறை ஆசான்’ என்றார் மாசேதுங். உலகளாவிய உண்மை இது. கன்னட ரிடமும் தெலுங்கரிடமும் மலையாளிகளிடமும் வங்காளிகளிடமும் இந்திக்காரரிடமும் ‘தமிழர் ஒரு தனித் தேசிய இனம்’ என வெள்ளந்தியாக ஒரு பேச்சுக்குச் சொன்னபோது, அவர்கள் தமிழையும் தமிழரையும் நஞ்சென வெறுப்பதையும் இளக்காரமாகப் பேசுவதையும் பட்டுத்தான் தெரிந்துகொண்டேன். காலமும் சூழலும் எனக்குப் புகட்டிய எதிர்மறைப் பாடம் இது. தமிழர் தேசிய ஓர்மை என்னிடம் கால்கொள்ள இதுவே முதற்காரணமானது.
தமிழர்கள் பலரிடம் தமிழ்மொழியின்பா
ல் பற்று உண்டு. மலையாளிகளைப் போன்றோ, வங்காளிகளைப் போன்றோ, குசராத்தியரைப் போன்றோ, தெலுங்கரைப் போன்றோ, கன்னடரைப் போன்றோ ‘தமிழராகிய நாம்’ ஒரு தனித் தேசிய இனமெனும் இன ஓர்மை அண்மை வரையில் அவர்களிடம் இருந்ததில்லை. ‘இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?’ எனும் போக்கே அவர்களிடம் இருந்தது.
ஆனால், திராவிடத்தின் உச்சந்தலையில் ஓங்கியடித்தபின், தமிழரிடமும் ‘தமிழர்’ எனும் இன ஓர்மை தோன்றியுள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. ‘திராவிடம்’ எனும் பகையைத் தமிழர்கள் அடையாளம் கண்டுகொண்டதால் வந்த விளைவு இது.
தமிழரின் மெய்யியலையும் மண்ணையும் வரலாற்றையும் மீட்பதிலேயே தமிழரினத்தின் விடிவு உண்டு எனும் தெளிவு வந்தபின், ஐரோப்பியர்கள் இட்டுக்கட்டிய ஆரிய-திராவிட வரலாற்றியலைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டுத் தமிழர் வரலாற்றியலைப் படைக்க வேண்டும் எனும் எண்ணம் எனக்கு வந்தது. கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலும் இருட்டடிப்புகளுக்கு இடையிலும் பயன் பாராது பாடாற்றியே தீருவது எனும் நெஞ்சுரமும் அத்துடன் சேர்ந்து நின்றது. தமிழ்மொழியை மட்டுமே வைத்துத் தமிழரை ஒன்றுபடுத்த எண்ணிய முந்தைய முயற்சிகள் தோற்றன; ‘திராவிட’ மயக்கத்தாலும் ஊடுருவலாலும் பயனற்றுப் போயின. மேலும், ‘தமிழ்’ என்றால் தெலுங்கனும் வந்து ஒட்டிக்கொள்கிறான்; குழிபறிக்கிறான். அதனால், ‘தமிழ்த் தேசியம்’ என்பதைத் ‘தமிழர் தேசியம்’ என்று மாற்றிக்கொள்ள நேர்ந்தது.
ஈ. வெ. இரா.வின் ‘திராவிடம்’ தெலுங்கரின் வஞ்சகச் சூழ்ச்சி என்பது புரிந்துவிட்டது. ‘வலங்கையர்’ என்றும் ‘இடங்கையர்’ என்றும் பிரித்து வைத்தே ஒருகாலத்தில் வடுகர்கள் நம்மை ஆண்டனர். தமிழர்கள் இன்று விழித்துக்கொண்ட பிறகும் சாதிச் சண்டைகளை மூட்டித் தொடர்ந்து பிரித்தாளப் பார்க்கின்றனர். இருந்தும், அவர்கள் புனைந்துரைத்த ‘திராவிடம்’ மரணப்படுக்கையில் கிடக்கிறது. திரிவடுகர்கள் அதனால் நெருப்பிலிட்ட புழுபோல் துடிக்கின்றனர். பு த்தத்தைக் கட்டியழும் ‘தலித்தியத்’தையும் பிராமணிய வழிநிற்கும் ‘சத்திரியத்’தையும் ஏவல் விட்டாவது தப்பிப் பிழைக்கலாமென இந்துத்துவ-திராவிடக் கூட்டணி பெரும்பாடு படுகிறது.
‘இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன?’ எனும் மனநிலை மங்கி மடிந்து தமிழர் தேசிய இன ஓர்மை வளர்ந்து வருவதைத்தானே இந்த நிலை காட்டுகிறது?
தமிழர் இனம் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாதெனும் நோக்குடன் வடுகமும் இந்தியமும் இந்துத் துவமும் காய் நகர்த்துகின்றன. இந் நிலையில், தமிழருக்கும் தமிழர் மண்ணுக்கும் இரண்டகம் செய்தாவது வயிற்றைக் கழுவிக் கொள்ளலாமெனக் கருதுபவர்கள் ‘போலித் தமிழ்த் தேசியம்’ எனும் கந்தல்கொடியைச் ஏந்தி வருகின்றனர்; வந்தேறிகளுக்குக் கூலிப்படைகளாக அணிவகுத்து நிற்கின்றனர். ‘ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்’ என்பதைப்போல் திராவிடத்தில் ஒரு காலும் ‘தமிழ்த் தேசியத்தில்’ ஒரு காலுமாக வைத்துக் கொண்டு அவர்கள் ஒப்புக்குத் ‘தமிழ்த் தேசியம்’ பேசுகின்றனர். ‘திராவிடம்’ எனும் நச்சுமரத்தின்மேல் வேரில்லா ஒட்டுண்ணியாய் படர்ந்து கிடக்கின்றனர்.
‘தமிழன் ஒருவனின் தலைமையில் ஆட்சியமைப்போம்!’ என்பதே அவர்களின் ஓலம். ஒப்புக்கு - அதாவது, பெயரளவுக்கு மட்டும் - தமிழன் ஒருவன் தலைமையில் இருப்பானாம்; அவன் மடியில் கிடக்கும் தெலுங்கர்களும் பிறரும் தத்தம் அரசியல், பொருளியல் சுரண்டலைத் தங்குதடையின்றித் தொடரலாமாம். திராவிட எடுபிடிகளின் தெகிடுத்தத்தம் இது.
இத் தெகிடுதத்தம் இனியும் செல்லாது. இன ஓர்மைகொண்ட தமிழரும் தமிழரின் இனநலன்களும் மட்டுமே தமிழர்நாட்டில் உச்சிமுதல் அடிவரையில் கோலோச்ச வேண்டும். திராவிடமோ இந்தியமோ இந்துத்துவமோ எந்த வடிவில் வந்தாலும் அதை இனம் கண்டு விரட்டியடிக்கும் அறிவாற்றலை நம் இளந்தலைமுறை பெற்றுவிட்டது.
வாரன் ஏச்ட்டிங்சின் (Warren Hastings) தூண்டுதலால் கொல்கொத்தா ‘உச்சநயன்மை’மன்றத்தின் நடுவராயிருந்த சர். வில்லியம் சோன்சு(Sir William Jones) தோற்றுவித்த ‘வங்கத்து ஆசியக் கழகம்’ (Asiatic Society of Bengal 1784) வங்காளப் பிராமணர்களோடு கூடிக்குலவி இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ‘இந்திய வரலாற்றை’ எழுதியது. பிராமணரும் பணியாக்களும் அதைத் தம்வயமாக்கிக் கொண்டனர். ‘இந்தியா’ எனும் சிறைக்குள் தளைப்பட்ட தேசிய இனங்களின் வரலாறுகளை அவர்கள் மூடிமறைத்தனர்.
குப்புற கவிழ்ந்து கிடக்கும் அந்த ‘இந்திய வரலாற்றைப்’ புரட்டிப் போட வேண்டும் எனும் உள்ளக்கிடக்கை ‘ஏரணம்’ எனும் நூலின் வழியாகவும் வெளிப்படுகிறது. முன்னுரையிலேயே நூலைப் படைத்த நோக்கத்தைச் சொல்லியிருக்கிறேன்; இப்போது அதை ஓரிரு வரிகளில் சொல்கிறேன். ஏரணத்தை விளக்கியது போக, புத்தம் ஈன்றெடுத்ததே பிராமணியமென இந் நூல் சொல்கிறது; அலெக்சாண்டரின் படையெடுப்புக்குப் பின் வந்த இந்தியக் கிரேக்கப் பேரரசின் காலத்திலும், குசானப் பேரரசின் காலத்திலும் நிகழ்ந்த இனக் கலப்பைப்பற்றியும் நூல் விளக்குகிறது; அரிசுட்டாட்டில், பிளாட்டோ ஆகிய கிரேக்க அறிவர்கள் கற்பித்த நிறவெறிக் கோட்பாட்டைக் குரங்குப்பிடியாய்ப் பற்றிக்கொண்டதால் வந்ததே பிராமணியத்தின் வரணக் கொள்கை என்றும் இந் நூல் சொல்கிறது. இந்த மெய்ம்மைகள் ‘இந்திய’ வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போடவல்லவை.
மேற்கண்டவை மெய்யா பொய்யாவென்பதை அலசி ஆராய்ந்து திறனாய வேண்டுமென்பது என் பணிவான வேண்டுகோள். அவற்றை மறுத்துரைக்க எண்ணினாலும், தமிழரின் உண்மையான வரலாற்றை மீட்டெடுக்கும் ஒற்றை நோக்குடன் செய்தால் நல்லது.
‘ஏரணம்’ எனும் இந் நூலையும் பிற மூன்று நூல்களையும் அச்சேற்ற அரும்பாடுபட்ட குணாவிய அறக்கட்டளையினருக்கும், இந் நூலை வெளியிட்ட ஆருயிர் நண்பர் ஆம்பூர் க. எ. மணவாளன் ஐயா அவர்களுக்கும், இந் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய தமிழர் தேசியப் பாவலர் செம்பியன் அவர்கட்கும், நூலைப் பற்றிய மதிப்புரை வழங்கிய முனைவர் விசயகாந்து அவர்கட்கும், நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த கருத்தாளர் அவர்கட்கும் நன்றி நவில்கிறேன். நூலை வெளிக்கொணர ஓர் இலக்கம் உருவா கொடையளித்த அமெரிக்கா வாழ் தமிழன்பர் நடராசன் பழனியப்பன் அவர்கட்கும் பிற நன்கொடையாளர்களு
க்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளே
ன். இந் நூல் வெளிவர பல்லாற்றானும் துணைநின்ற எல்லாத் தமிழ்நெஞ்சங்களுக்கும் நன்றி கூறுகிறேன். ‘வள்ளுவத்தின் வீழ்ச்சி’யின் மூன்றாம் பதிப்புக்கும், ‘முன்தோன்றி மூத்தகுடி’யின் இரண்டாம் பதிப்புக்கும், ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்!’ நூலின் இன்னொரு பதிப்புக்கும் அழகிய அட்டைப்படம் வடிவமைத்துத் தந்த அல்போன்சு பிளோராவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள
்கிறேன்.
இந் நிகழ்ச்சியில் பங்கெடுத்துச் சிறப்பித்த தமிழ்நெஞ்சங்களுக்கும் நன்றியும் வணக்கமும் கூறி அமைகிறேன்.
குணா
1 மணி நேரம் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக