ஞாயிறு, 15 நவம்பர், 2020

ஈழம் ஆனைக்கோட்டை 2600 ஆண்டுகள் பழமை தமிழி முத்திரை புகைப்படம் படங்கள்

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்5 ஆக., 2019, முற்பகல் 11:09
பெறுநர்: எனக்கு
தமிழ் கிரியேடர்ஸ் ▶ வரலாற்று பிரியர்கள்
ஆனைக்கோட்டை முத்திரை
ஆனைக்கோட்டை முத்திரையில் உள்ள எழுத்துப்பொறிப்பு இருவரிசையில் கிடைத்துள்ளது. அதன் முதல் வரிசையில் பெருங்கற்படைக்கால குறியீடுகளும் (சிந்துவெளிக்கு
றியீடுகள்), இரண்டாவது வரிசையில் அதற்கு இணையான தமிழி எழுத்துப் பொறிப்புகளும் உள்ளன். தமிழி எழுத்துப் பொறிப்புகளை டாக்டர் இந்திரபாலா அவர்கள் ‘கோவேந்தா’ என படித்துள்ளார். நடன காசிநாதன் அவர்கள் இது மிக மிக பண்டைய தமிழி எழுத்துப்பொறிப்பு என்பதால், இதன் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டு என்கிறார். இதன் இன்னொரு சிறப்பு, இதன் மேல்வரிசைக் குறியீடும் ‘கோவேதா’ என்ற கருத்தைக் கொண்டது என்பதுதான். எனவே தமிழி உருவாவதற்கு முன் இந்த பெருங்கற்படைக்கால குறியீடுகள் ஒலிவடிவம் அல்லது கருத்துவடிவம் கொண்ட ஒரு எழுத்தாக பயன்படுத்தப் பட்டுள்ளது எனலாம். (ஆதாரம்: இலங்கையில் தமிழர் – கா. இந்திரபாலா, பக்:105,328&329 & TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 33)
ஆனைக்கோட்டை முத்திரை (Anaicoddai Seal) என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம் பெற்ற அகழ்வாய்வு ஒன்றின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முத்திரை ஆகும். கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு அடக்கக் குழி ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்ட இம் முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த முத்திரை எதனால் செய்யப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்களே இருந்து வருகின்றன. பேராசிரியர் கா. இந்திரபாலா இந்த முத்திரையானது உலோக முத்திரை எனத் தமிழக இந்து பத்திரிகையில் 1981 இல் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தார். ஆனால், அவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. பொ. இரகுபதி (1987) இந்த முத்திரையானது வெண்கலத்தினால் (Bronze) செய்யப்பட்டது என்றுள்ளார். ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), அது உலோகத்தால் ஆனது என்றுள்ளபோதும், அது எந்த உலோகத்தினால், அல்லது உலோகக் கலவையால் ஆனது என்பதைக் குறிப்பாகக் கூறவில்லை. எதுவிதத்திலும் க. இந்திரபாலா 2006ஆம் ஆண்டில் எழுதியிருந்த நூலில், அது Steatite (Soapstone) ஆல் ஆனது என்றுள்ளார். முத்திரையின் கீழ் வரிசையில் மூன்று பிராமி எழுத்துக்களும், மேல் வரிசையில் மூன்று அடையாளங்களும் காணப்படுகின்றன. மேல் வரிசையிலுள்ள மூன்று அடையாளங்களுள் ஒன்று ரோம எழுத்தான C போன்ற அடையாளத்தின் வளைவு உச்சிப்புள்ளியில் ஒரு குற்றும் காணப்படுகிறது. மறறைய இரண்டு அடையாளங்களும், ஒரேமாதிரியாகத் தோற்றமளிக்கின்ற
ன.
இந்திரபாலாவின் வாசிப்பு
இதனை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா இம் முத்திரையில் கீழ் வரியில் அடங்கியுள்ள மூன்று எழுத்துக்களையும் இடப்பக்கத்தில் காணப்படும் எழுத்துக்கு மேலுள்ள புள்ளியையும் பிராமிப் பகுதியாகக் கொண்டுள்ளார். இதில் இடப்பக்கமிருந்து பார்க்கும்போது முதலாவது எழுத்து "கோ", இரண்டாவது "வே", மூன்றாவது "த". இது முத்திரையிடப் பயன்படுத்தும் அச்சு ஆதலால் இடப்படும் முத்திரையில் இடம் வலமாக மாறிவிடும் ஆதலால் எழுத்து வரிசை "கோ" "வே" "த" என்று அமையும். "த" வின் மேலுள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் கொண்டால் இச் சொல்லை "கோவேந்த" அல்லது "கோவேதன்" என இருவிதமாக வாசிக்கமுடியும் என இந்திரபாலா கூறுகிறார். இரண்டுமே திராவிடப் பெயராகவும், ஒரே பொருள் தருவனவாகவும் உள்ளன. "கோவேந்த" என்பதை "கோ" + "வேந்த" என இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு பகுதிகளுமே தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் மன்னன், அரசன் என்னும் பொருள்படுவனவே. சொல்லைக் கோவேதன் என்று எடுத்துக்கொண்டாலும் கூட இது போலவே அமையும். மேல் வரிசையில் சூல வடிவக் குறியீடு அடுத்தடுத்து இருமுறை இடம் பெற்றுள்ளது. இக் குறியீடுகள் ஒலிப்பையன்றிப் பொருளையே சுட்டுவனவாதலால் "கோ" என்பதைக் குறித்த சூல வடிவமே, அதே பொருள் கொண்ட "வேந்த" அல்லது "வேதன்" என்னும் சொல்லையும் குறித்தது.
இரகுபதியின் வாசிப்பு
பொ. இரகுபதி இதனைச் சற்று வேறுவிதமாக வாசித்துள்ளார். இவர், இந்திரபாலாவால் அனுஸ்வரமாகக் கொள்ளப்பட்டு பிராமியுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட புள்ளியை முதல் வரியின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார். இவர், கீழ் வரி "கோ" "வே" "த" என்பது "கோ" + "வேத்" + "அ" எனப் பிரிந்து "கோவேதனுடைய" என்னும் பொருள் கொடுக்கும் என்றும் இதற்கு இணையாக இரண்டு சூலக் குறியீடுகள் "கோ" "வேத்" என்பவற்றைக் குறிக்க, புள்ளி "உடைய" என்னும் பொருள்கொண்ட "அ" என்னும் உருபைக் குறித்தது என்கிறார்.
மதிவாணனின் வாசிப்பு
முனைவர் ஆர். மதிவாணன் அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.
-------------
A seal found during excavations in Anaicoddai in Eelam contained both Indus Valley letters and Tamili script
Annaicoddai Seal is a steatite seal that was found in Annaicoddai, Sri Lanka during archeological excavations of a megalithic burial site by a team of researchers from the Jaffna University. The seal contains some of the oldest inscriptions in Tamili mixed with Megalithic Graffiti symbols found on the island. Although many pottery fragments have been found in excavations throughout Sri Lanka and Southern India that had both varieties of Tamili and Megalithic Graffiti Symbols side by side, Annaicoddai seal is distinguished by having each written in a manner that indicates that the Megalithic Graffiti Symbols may be a translation of the Tamilii characters. Read from right to left, the legend is read as ‘Koveta’ (Ko-vet-a). Linguists read it as in South Dravidian or early Tamil indicating a chieftain or king. Similar inscriptions have been found throughout ancient Tamilakam, in modern day South India. Investigators disagree on whether Megalithic Graffiti Symbols found in South India and Sri Lanka constitute an ancient writing system that preceded the introduction and widespread acceptance of Tamili variant scripts or non lithic symbols. The purpose of usage remains unclear.
25.11.2004/tamilbrami_2.htm

கோவேந்தன் அகழ்வாராய்ச்சி உலோகம் எழுத்துரு விவாதம் பிராமி சின்னம் கல்வெட்டு













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக