வெள்ளி, 13 நவம்பர், 2020

பார்ப்பனர் வேர்ச்சொல் பார்த்தல் அறிஞர் பாவாணர்

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 11 மே, 2019, பிற்பகல் 11:52
பெறுநர்: எனக்கு
பார்ப்பனர் வேர்ச்சொல் பார்த்தல் - பாவாணர் விளக்கம்

புலவர், ஆசிரியர், பூசாரியர், ஓதுவார், கணக்கர் எனப் பல்வேறு பெயர் பெற்றுக் கல்வித் தொழில் புரியும் இல்லற வகுப்பார் பார்ப்பார் ஆவர்.

நூல்களைப் பார்ப்பவர் பார்ப்பார் , அல்லது பார்பனர்.

பார்ப்பனன் என்னும் சொல் பிராமணன் என்பதன் திரிபன்று.

பார்த்தனன் - பார்க்கின்றனன் - பார்ப்பனன் என்னும் ‘அனன் ‘ ஈற்றுச் சொற்கள்,
பார்த்தான் - பார்க்கின்றான் - பார்ப்பான் என்னும் ‘ ஆன் ‘ ஈற்றுச் சொற்களின் மறு வடிவங்களாகவேயிருத்தல் காண்க.
(பக்கம் 174)
-------
குறித்த இடத்தில் போர் தொடங்குமுன் , அக்கம் பக்கத்துள்ள தனிப்பட்ட ஆக்களையும் ஆவைப்போல் அமைந்த இயல்புள்ள அறிஞரையும் ,பெண்டிரையும் நோயாளிகளையும் பிள்ளை பெறாத மகளிரையும் , அவ்விடத்தை விட்டகன்று பாதுகாப்பான இடத்திற் சேர்ந்துகொள்ளுமாறு முன்னறிவிப்பது மரபு.

”ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
என்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின் என
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின் ”
என்று புறநானூற்றுச் செய்யுள் (9) கூறுதல் காண்க.

பார்ப்பார் என்பது , ஆரியர் வருமுன் தமிழ்ப் பார்ப்பனரையும் , அவர் வந்தபின் பிராமணரையும் குறித்தது.
(பக்கம் 184)
------------
சான்று : பக்கம் 174 & 184.

”பண்டைத் தமிழ் நாகரீகமும்
பண்பாடும்”
ஞா.தேவநேயப்பாவாணர்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம் ,
தியாகராய நகர்,
சென்னை 600017.
தொலைபேசி :044 24331510

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக