வெள்ளி, 13 நவம்பர், 2020

நடிப்பு பற்றிய நூல் அவிநயம் இலக்கியம் ஓலைச்சுவடி கலை

 

aathi1956 aathi1956@gmail.com

சனி, 16 மார்., 2019, பிற்பகல் 6:34
பெறுநர்: எனக்கு
Annamalai Sugumaran
நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர் என்று அன்றொருக்
காலத்தில்
சிவாஜி கணேசனைக் குறிப்பிடுவது வழக்கம்
ஆனால் உண்மையி லேயே நடிப்புக்கு இலக்கணம் வகுத்த ஒரு நூல் தமிழில் இருந்திருக்கிறது
இடைச் சங்க காலத்தில் தோன்றிய இலக்கண நூல் அவிநயனார்
எழுதிய அவிநயம் ஆகும்.
இந்நூலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. சிற்சில
நூற்பாக்கள் மட்டும் கிடைக்கின்றன.
அவிநயம் என்பது நாடக மாந்தர் குறிப்பால் உணர்த்தும் முகக்குறிப்பாகும். இது இது இருபத்து நான்கு வகைஅபிநயங்களை விவரிக்கிறது .அவை
வெகுண்டோன் அவிநயம்,
ஐயமுற்றோன் அவிநயம்,
சோம்பினோன் அவிநயம்,
களித்தோன் அவிநயம்,
உவந்தோன் அவிநயம்,
அழுக்காறுடையோன் அவிநயம்,
இன்பமுற்றோன் அவிநயம்,
தெய்வமுற்றோன் அவிநயம்,
ஞஞ்ஞையுற்றோன் அவிநயம்,
உடன்பட்டோன் அவிநயம்,
உறங்கினோன் அவிநயம்,
துயிலுணர்ந்தோன் அவிநயம்,
செத்தோன் அவிநயம்,
மழைபெய்யப்பட்டோன் அவிநயம்,
பனித்தலைப்பட்டோன் அவிநயம்,
வெயிற்றலைப்பட்டோன் அவிநயம்,
நாணமுற்றோன் அவிநயம்,
வருத்தமுற்றோன் அவிநயம்,
கண்ணோவுற்றோன் அவிநயம்,
தலைநோவுற்றோன் அவிநயம்,
அழற்றிறம்பட்டோன் அவிநயம்,
சீதமுற்றோன் அவிநயம்,
வெப்பமுற்றோன் அவிநயம்,
நஞ்சுண்டோன் அவிநயம் என்பன
உண்மையிலேயே நடிப்பிற்கும் இலக்கணம் வகுத்த மொழி நம் தமிழ் மொழி !
அதுவும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே !
இன்றயத் திரைப்படத்துறையினருக்கு இந்தச் செய்தி உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
15/3/18
ஆசீவகம் பகுதி 5 தயாராகி வருகிறது .
ஓலைச் சுவடிகளைத் தேடியப்படலமும் தொடரும்
எல்லாம் தாத்தா ஆனசூழல்தான்
பொறுத்தருள்க !
15 மார்ச், 2018, பிற்பகல் 8:25 · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக