வெள்ளி, 20 செப்டம்பர், 2019

புலிகள் இலங்கை அனுப்பிய தமிழர் நல்லிணக்கம் குழு அனுபவம் மனிதநேயம் சிங்களவர் இன்பாக்ஸ் x

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 3 ஜூலை, 2018, முற்பகல் 10:09
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் வசந்தன்
ஒருமுறை இரு இன நிகழ்வாக வடக்கில் இருந்து தென்னிலங்கையான கொழும்பு காலி மாத்தறை போன்ற மாவட்டங்களுக்கு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு நானும் எங்கள் மன்றத்தின் சார்பில் 47 இளைஞர் யுவதிகள் ஒரு பேருந்தில் சென்றிருந்தோம் ......
இதற்கான ஒழுங்கமைப்பை அப்போதைய தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல்துறை
திருமறைக்கலாமன்றம்(போஸ்கொ சார்)
செய்திருந்தார்கள்
தென்னிலங்கை சிங்கள மக்களின் சார்பில் எங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அவர்களின் தேசிய மலரான செவ்வரளி கொடுத்து வரவேற்றார்கள் ...........
பெரும் திரளான சிங்கள இளைஞர் யுவதிகள் பௌத்த பிக்குகளும் கலந்துகொண்டனர் ..............
நாங்கள் அங்கே தங்கியிருந்த ஒரு வார காலமும் பலரின் வீட்டிற்கு அழைத்து போனார்கள் இசை நிகழ்சிகள் நடத்தினோம் எமது கலை பாரம்பரியம் விளக்கப்பட்டது அவர்களும் அவர்களின் நடனம் பண்பாட்டு கலாச்சாரம் போன்ற முக்கிய நிகழ்சிகளை நடத்தினர்......................
சாப்பாடு உறங்கும் இடம் எமது யுவதிகளுக்கான தனிப்பட்ட விடயங்களையும் கவனமெடுத்து பார்த்துகொண்டனர்................
கடைசியாய் நாங்கள் விடைபெறும் போது இந்த பாடலை சிங்களத்தில் மொழி பெயர்த்து பாடினோம்.................
அங்கே அழாதவர்கள் யாரும் இல்லை பௌத்த பிக்குகள் முதல் கொண்டு எல்லோரும் அழுதார்கள் சிங்கள பெண்கள் எங்களை கட்டிபிடித்து அழுதது எம்மால் மறக்கமுடியாது..
................
எங்கள் பேருந்து அவர்கள் கண்ணை விட்டு மறையும் வரை நாங்கள் மனிதத்தை மட்டுமே பார்த்தோம்..............
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்
மலரோடு மலர் இங்கு...
துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்
விண்ணோடு வின் சேரட்டும்
விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்.............
On this day
நேற்று, AM 8:38 ·

ஈழம் சமாதானம் முயற்சி விடுதலைப்புலிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக