வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கரிகாலன் முன்னோர் கடல் காற்று அறிந்து கப்பல் செலுத்தியதாக இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

புத., 4 ஜூலை, 2018, முற்பகல் 10:54
பெறுநர்: எனக்கு
Suresh N, ராஜா முத்துராஜா அம்பலக்காரன் மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
புறநானூறு - 66. நல்லவனோ அவன்!
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் படும்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை.
துறை : அரச வாகை.
நளியிரு # முந்நீர் # நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!
பொருளுரை:
காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின்
# வழித்தோன்றலே!
செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே!
மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில்,
முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ?
++++
இப்பாடலில் ஒரு விடயத்தை உணரலாம்,
# கரிகாலனை காற்றின் இயல்பை அறிந்து,
முந்நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் #வழித்தோன்றலே! எனப்பட்டுள்ளது...
#முந்நீர்(கடல்) நாவாய்(படகு) எனப்பட்டுள்ளது...
+++
இங்கனம்,
# சிவன்_படவன்_அகமுடையார் ..
# வெட்டு_மாவலி_வாணாதிராயன் ..
# சந்திராதித்த_குலம் ...
மாலை வணக்கம் சொந்தங்களே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக