வெள்ளி, 20 செப்டம்பர், 2019

காட்டுப்பள்ளி துறைமுகம் அதானி கைக்கு போனது எப்படி


aathi1956 aathi1956@gmail.com

வியா., 5 ஜூலை, 2018, பிற்பகல் 11:04
பெறுநர்: எனக்கு
சென்னையிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் பல மீனவ கிராமங்களை உள்ளடக்கிய அழகான அந்த பகுதியின் பெயர் காட்டுப்பள்ளி.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளடங்கும் அந்த அழகான மீனவ கிராமங்கள் கார்ப்பரேட் கழுகு கண்களை உருத்திக்கொண்டிருக்க, ஆளும் மத்திய காங்கிரஸை நாடுகிறது அந்த கார்ப்பரேட் கழுகு.

பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பு என்ற பொய்யான ஆசை வார்த்தைகளை அள்ளித்தெளித்து அங்கே துறைமுகம் அமைத்தால் ஏற்றுமதி இறக்குமதியில் இந்திய பொருளாதாரத்தை சிறப்பான நிலைக்கு உயர்த்திவிடலாம் என்ற மாயை தோற்றத்தை உருவாக்கி அந்த மீனவ கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் இறங்கியது ஆளும் அதிகார அரசுகள்.

தமிழின பண்பாட்டு தொன்மை வாய்ந்த அந்த கடற்கரை மீனவ கிராமங்களின் வாழ்வாதாரமே அந்த வங்கக்கடலை நம்பித் தான்.
மீன் வளங்கள் செழுமையான அந்த கடல்பகுதியை புகழிடமாக நம்பி மகிந்து வாழ்ந்து வந்த அந்த மீனவ மக்களிடம் துறைமுகம் கட்டிக்கொள்ள இந்த இடம் அரசாங்கத்தால் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது என்ற செய்தி இடியாய் அவர்கள் தலையில் இறங்கியது.

தங்கள் வாழ்வாதார நிலத்தை விட்டுத்தர மறுத்து மீனவர்கள் ஒன்று கூடி கண்ணீரும் கம்பலமுமாக போராட்டங்களை அறிவிக்கிறார்கள், எப்போதும் போல அதிகார வர்க்கத்தின் காதுகள் அம்மக்களின் அவலக்குரல்களை கேட்காமல் காதுகளை இறுக மூடிக்கொண்டது.

ஊடகங்களும் அந்த மீனவ மக்களின் நில ஆக்கிரமிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட தவறிவிட்டது.
பணம் பாதாலம் வரை பாயும் என்பது போல ஊடகமும் அதற்காகவே ஊமையாகியிருக்கலாம்.

அப்போது தமிழகத்தை ஆண்டுவந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காங்கிரசுடன் கைகோர்த்திருந்ததால் ஈழ இன அழிப்பை சத்தமில்லாமல் முடித்தது போல் மிக சுலபமாக வேலை முடிந்தது
மீனவ மக்களும் அந்த கிராமங்களை விட்டு வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டனர்.

இத்தனைக்கும் காரணம் மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்திய நிறுவனமான Larsen & toubro (L&T).

மத்திய காங்கிரஸின் அரசின் துணையோடும் மாநில திமுக அரசின் ஒத்துழைப்போடும் நிலம் கையகப்படுத்தப்பட்டு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆசியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாக காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் கப்பல் கட்டுமான தளமும் கட்டி முடிக்கப்பட்டது.

எல்லாம் சிறப்பாக செய்து முடித்த அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் போதாத காலம் துறைமுகம் திறந்து சில காலத்திலே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருந்தது.

மத்தியில் பாஜகவும் மாநிலத்தில் அதிமுக ஆட்சியும் அமர்ந்ததால் அந்நிறுவனம் நினைத்தது போல் தொழில் வளத்தை பெறுக்கமுடியவில்லை.

காரணம்...திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட துறைமுகம் என்பதால் துறைமுகத்திற்கு செல்லும் சாலையை சீரமைத்து தராமல் அதிமுக முடக்கிப்போட்டது.

இன்னொரு புரம் கார்ப்பரேட் முதலை அதானியின் கொத்தடிமையான மோடியின் ஆதரவோடு அந்த துறைமுகத்தின் தொழில்வளர்ச்சியை முடக்கி நளிவடையச்செய்து கைப்பற்றிக்கொள்ள முனைப்போடு இருந்தது அதானி குழுமம்.

தொழில் வளத்தை விரித்தியடைய செய்யமுடியாத காரணத்தாலும் ஆளும் அதிகார வர்க்கத்தின் மிரட்டல்களாலும் பெரும் நட்டத்தை தாக்குபிடிக்க முடியாத L&T துறைமுகத்தை 2500 கோடிக்கு மிரட்டி வாங்கியது அதானி குழுமம்.

இதற்கு முற்றுமுதல் இடைத்தரகராக செயல்பட்டது அதானியின் கைப்பாவை மோடி என்பது தான் ஆணித்தனமான உண்மை.

அதானிக்கு கைமாறிய பிறகு முடக்கி வைப்பட்டிருந்த தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு ஏகோபித்த லாபத்தில் தற்போது சிறப்பாக இயங்கிவருகிறது காட்டுப்பள்ளி துறைமுகம்.

தற்போது அதனை சுற்றியுள்ள பகுதிகள் இன்னும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
சேலத்தில் தொடங்கும் எட்டுவழிச்சாலையின் எல்லை அதானியின் இந்த துறைமுகத்தின் நூழைவாயிலாக கூட இருக்கலாம்.

L&T குழுமத்தின் கீழ் துறைமுகம் இயங்கிய வேலையிலாவது அங்கிருந்து விரட்டப்பட்ட தமிழர்களுக்கு துறைமுகத்தில் சில வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டது.

அதானியின் கைக்கு துறைமுகம் சென்றபிறகு அங்கு வேலை செய்த தமிழர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு காவலாளி முதல் தலைமை அதிகாரிகள் வரை வட இந்தியர்கள் பணியத்தப்பட்டுவிட்டனர்.

இதில் கொடுமை என்னவென்றால்
அந்த கடற்கரை பகுதியின் பூர்வகுடி தமிழ் மீனவர்களின் நிலங்களை பரித்ததுமல்லாமல் துறைமுகத்தின் அருகில் கூட மீன்பிடிக்க உரிமை மறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்படுவது தான் வேதனையிலும் வேதனை.

சொந்த நிலத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்ட அந்த மீனவர்களின் குலதெய்வ கோயில் அதே நிலப்பரப்பின் அருகில் மிகப்பெரிய வனப்பகுதியில் இப்போதும் இருக்கிறது.
பல வனவிலங்குகள் வாழ்ந்துவந்த அந்த வனப்பகுதியும் அழிக்கப்பட்டு தற்போது விருவிருப்பாக இயங்கிவரும் இன்னொரு துறைமுகத்தை பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

கார்ப்பரேட் பாஜக மோடி தனியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக