வெள்ளி, 20 செப்டம்பர், 2019

இராசராசன் சிலை மீட்ட பொன்மாணிக்கவேல் பற்றி

aathi1956 aathi1956@gmail.com

திங்., 2 ஜூலை, 2018, பிற்பகல் 5:44
பெறுநர்: எனக்கு
Gnanabharathi Chinnasamy
ஐஜி பொன்மாணிக்க வேலு அவர்களை எனக்கு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அவர் SPECIAL INVESTIGATION TEAM.ல் இருந்த போதே தெரியும்.
உடுமலை வெடிகுண்டு வழக்கை நானும் ஜி.நடராஜனும் சண்முகவேலும் நடத்தினோம்.
அந்த வகையில் அவரோடு எனக்குப் பரிச்சயம் உண்டு..
அதனடிப்படையில் அவருடைய உடல்மொழியில் இருந்து என்னால் ஒரு விஷயத்தை நிச்சயமாகச் சொல்ல முடியும்..
அது...அவருடைய உடல் மொழியில் இருந்து குற்றவாளி யார் என்பதை அவர் முடிவு செய்து விட்டார் என்பது தான் அது...
நேர்மைக்கும் துடிப்பான நடவடிக்கைக்கும் பெயர் போன அவரை குற்றவாளியை கைது செய்து சிலைகளை மீட்க இருந்த கட்டத்தில் வேறு துறைக்கு மாற்ற முடியும் என்றால் அது அரசியல் செல்வாக்குள்ள உள்ள ஒரு களவாணியினால் மட்டுமே முடியும் என்பதில்சந்தேகமேஇல்லை.
இல்லையேல் அவரை இந்த கிரிட்டிகலான நேரத்தில் மாறுதல் செய்வது சிந்தித்துக் கூடபார்க்க முடியாத காரியம் என்பதை அனைவரும் அறிவார்கள்.அதிலும் இதுவரை கிணற்றில் போட்ட கல்லாய் கிடந்த வழக்கில் ராஜராஜன் சோழன் சிலையை கண்டுபிடித்து பிரமாண்டமான Breakthrough செய்துள்ள சமயத்தில் அவரை வேறு துறைக்கு மாற்றுவதைப் பற்றி சமூக அக்கறையுள்ள ஒருவராலும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது.
அவருடைய டிரான்ஸ்பர் தான் குற்றவாளி யார் என்பதைக் காட்டிக் கொடுக்கும் சிறந்த தடயமாகி விட்டது என்பது தான் விநோதம்.
இப்போதுசட்டத்தின் பிடியில் இருந்து அந்தக்களவாணி தற்காலிகமாக தப்பித்துக் கொண்டாலும் சிலைகள் விற்று அவன் கொள்ளை அடித்ததைக் கூட மன்னித்து விடலாம்.ஆனால் தங்கள் கோயில்களில் உள்ளது தங்கள் தெய்வங்களின் உண்மையான விக்ரங்கங்கள் என்று நம்பித் தொழுத கோடானகோடி இந்துக்களை அவன் நம்பிக்கை மோசம் செய்ததை மட்டும் ஒருநாளும் இந்துக்களால் மன்னிக்க முடியாது..
அவன் அடையாளம் மக்களுக்கு தெரியும் போது அவனை ரோட்டோர மரத்தில் கட்டி வைத்துத் தோலை உறிக்காமல் விட மாட்டார்கள்..
அதிலும் அது அவனே தான் என்று ஐஜி சூசசமாகக் கோடிட்டுக் காட்டினால் கூடபோதும்.
அவ்வளவு தான்..
அந்த நாள் உடனடியாக இல்லாவிட்டாலும் கண்டிப்பாய் வந்தே தீரூம்..

இடமாற்றம் போலீஸ் காவல்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக