வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மொத்தம் எட்டு 8வழி சாலைகள் வரவுள்ளன

aathi1956 aathi1956@gmail.com

சனி, 14 ஜூலை, 2018, முற்பகல் 9:35
பெறுநர்: எனக்கு
Veeraa VK
தமிழ் நாட்டில் விவசாய நிலங்களை அழித்து பாரத் மாலா திட்டத்தின் 9 சாலைகள்
சென்னை - சேலம் சாலை போல, க்ரீன் பீல்ட் என்று சொல்லக்கூடிய புதிய 8 வழி சாலைகள் 570 கிமீ அளவிற்கு 8 சாலைகள் வர இருக்கிறது. இதற்காக 43,000 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இது அனைத்துமே பெருமளவு விவசாய நிலங்களை அபகரித்து தான் செய்லபடுத்தப்படும். காரணம் விவசாயிகளிடம் நிலத்தை பறிப்பது எளிது என்கின்றனர் அதிகாரிகள். இந்த சாலைகள் அனைத்தும் மத்திய அரசின் NHAI கட்டுப்பாட்டில் வந்துவிடும்
ஒன்பது சாலையின் விவரங்கள் :
1. சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் வே,
2. கரூர் - கோயம்புத்தூர் சாலை
3. மேலூர் இருந்து திருப்பத்தூர் - புதுக்கோட்டை வழியாக தஞ்சாவூர் வரை
4. கும்பகோணம் - சீர்காழி சாலை
5. மஹாபலிபுரம் - பாண்டிச்சேர சாலை
6. ஓட்டாஞ்சத்திரம் - கமலாபுரம் சாலை (திண்டுக்கல் - ஒடிஞ்சாத்ரம் - பொள்ளாச்சி வழியாக)
7. மதுரை - தனுஷ்கோடி
(பரமகுடி - ராமநாதபுரம் 4 வழியாகவும் அங்கிருந்து தனுஷ்கோடி வரை இரண்டு வழி ) தனுசுகோடி முதல் தலைமன்னார் வரையிலான பாலம் உற்பட
8. சென்னை - சித்தூர் சாலை
9. ஓசூர் வட்ட சாலை (பெங்களூரு சேட்டிலைட் சுங்க சாலையின் பகுதியாக)
இது அனைத்தும் BIMSTEC கூட்டமைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியான பாரத்மாலா திட்டத்தின் கீழ் வருகிறது. இது அனைத்தும் கனிம வளங்கள் மற்றும் துறைமுகத்துடனான போக்குவரத்துக்காக காட்டப்படுகிறது

வழிச்சாலை சாலை திட்டம் நாசகார கார்ப்பரேட் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக