வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ஒரே கல்லில் மூவேந்தர் சின்னம்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 3 ஜூலை, 2018, பிற்பகல் 10:19
பெறுநர்: எனக்கு
ஒரே கல்லில் மூவேந்தர் சின்னம்
சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில்,
கி.பி., 1192ம் ஆண்டு தொண்டியில்
இருந்த காளிகோவிலை, காளிகணத்தார்
என்போர் நிர்வகித்தனர்.
அங்கு வாழ்ந்த உய்யவந்தான் சுந்தரன்
ஆன வல்லப சமஞ்சிதனான பரசமய
கோளரி என்பவரிடம் நிலம்
வாங்கி ஊருக்குப் பொதுவாக குளம்
வெட்டினர். அதற்கு, "காளிகணத்தான்
குளம்' என்று பெயர்
வைத்து காளி உருவத்தையும்
பொறித்தனர். குளம் அமைத்ததைக்
கூறும் கல்வெட்டில், மூவேந்தர்
சின்னமான வில், புலி, மீன்
பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டில்,
தொண்டிக்கு "பவித்திரமாணிக்கப்
பட்டினம்' என்ற பெயர்
இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.
பவித்திர மாணிக்கம் என்றால்
"தூய்மையான மணி' என்று பொருள்.
அக்காலத்தில் வணிக முக்கியத்துவம்
வாய்ந்த, செல்வ வளம் மிக்க
காயல்பட்டினம், பெரியபட்டினம்
போன்ற ஊர்களுக்கும்
பவித்திரமாணிக்கப்பட்டினம்
என்று பெயர் விளங்கியது. இந்த
கல்வெட்டில் சேரர், சோழர்
சின்னங்களும் பொறித்துள்ளதற்கு,
சரித்திர ரீதியான காரணங்கள் உள்ளன.
வீரபாண்டியனுக்கும், அவன் தாயாதியான
விக்கிரம பாண்டியனுக்கும்
அரசுரிமைப் போர் நடந்தது.
வீரபாண்டியனுக்கு இலங்கை
படைத்தலைவர்களான இலங்காபுரித்
தண்டநாயகன், ஜகத்விஜயத்
தண்டநாயகன் ஆதரவு தந்தனர்.
மூன்றாம் குலோத்துங்க சோழன்
படைத்தலைவன் திருச்சிற்றம்பலம்
உடையான் பெருமான் நம்பிப்
பல்லவராயனும்
விக்கிரமபாண்டியனுக்கு ஆதரவாகப்
போரிட்டு வென்று, விக்கிரம
பாண்டியனை அரியணையில்
அமர்த்தினான். இலங்கைப்
படைத்தலைவர்களின் தலைகள்
மதுரைக்கோட்டையில்
தொங்கவிடப்பட்டன. சேர நாடு சென்ற
வீரபாண்டியன், சேரன்
துணையோடு மூன்றாம்
குலோத்துங்கனிடம் அடைக்கலம்
புகுந்தான். தன் இரு மக்களுக்கும்
வீரகேரளன், பரிதி குலபதி என்று சேரர்,
சோழர் பெயரை வைத்தான். "மூன்றாம்
குலோத்துங்கன், வீரபாண்டியனைப்
பாண்டிய நாட்டின்
ஒரு பகுதிக்கு அரசன் ஆக்கினான்.
அதனால், தன்னை அரசனாக்கிய சோழர்
சின்னத்தையும், உதவிய சேரர்
சின்னத்தையும் தன் கல்வெட்டில்
வீரபாண்டியன் பொறித்திருக்க
வேண்டும்'
என்று ஈரோடு கொங்கு ஆய்வு மைய
ஆய்வாளர் புலவர் ராசு தெரிவித்தார்.
(ஒரு வேண்டுகோள்: அந்த சின்னத்தின் படம் தேவை; இணையத்தில் இல்லை; தொண்டி செல்லமுடிந்தவர்கள் படமெடுத்து தர வேண்டுகிறேன்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக