வெள்ளி, 20 செப்டம்பர், 2019

எயினர் உணவு இலக்கியம் மறவர் வேட்டுவர் தொடர்பு

aathi1956 aathi1956@gmail.com

திங்., 9 ஜூலை, 2018, முற்பகல் 11:57
பெறுநர்: எனக்கு
Suresh N மீனவன் ராஜகுலம் மாவலி வாணாதிராயன் உடன்.
# எயினர் உணவுமுறை (எயினர்
# பாலைத்திணை மக்கள்)
வெண்மையான பற்களை உடைய எயினர் குலப் பெண்கள், எறும்புகள் சேர்த்து வைத்திருக்கின்ற புல்லரிசியைத் தேடிச் சேர்ப்பார்கள். மான்களைக் கட்டியிருக்கின்ற விளாமரத்தின் அடியிலே அகழ்ந்திருக்கின்ற உரலில் அந்த நெல்லைக் கொட்டி உலக்கையால் அதனைக் குற்றிக் கொழித்தெடுப்பர்.
பின்னர் கிணற்றில் சிறிதளவு ஊரியிருக்கின்ற உவர்நீரை முகந்து பானையில் ஊற்றி அடுப்பிலே வைத்து உலைவைப்பர். குற்றியெடுத்த புல்லரிசியை உலையிலிட்டுச் சமைத்துச் சோறாக்குவார்கள். அச்சோற்றை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்பர். இவ்வுணவை வந்த விருந்தினருக்கும் கொடுப்பர். இத்தகைய செய்தியினை,
“நுண்புல்அடக்கிய வெண்பல் எயிற்றியர்
பார்வையாத்த பறைதாள் விளவின்
நீழல் முன்றில் நிலவுரல் பெய்து
குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று
வல்லூற்று உவரி தோண்டித் தொல்லை
முரவு வாய்க்குழிசி முரி அடுப்பேற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல்” (94-100)
- எனப் பெரும்பாணாற்றுப்படை தெளிவுறுத்துகிறது.
++
பதிவு>> # வெ_பார்கவன்_தமிழன் ..
+++
மேலும்,
1.எயினர் #பாலை ...
2.எயினர் #வில்லவர் ..
(அம்பெய்துவதால்)
3.எயினர் பாலை என்பதால் கொற்றவை எனும் #காளி வழிபாட்டு மரபினர்..
4.சங்கப்பாடல் எதும் எயினரை #களவு செய்தவராக குறிப்பிட்டு பாடவில்லை...
5.அம்பெய்தும் # வேட்டுவரே எயினர் எனப்படுவர்,மறம் மிகுதியால் #வேட்டுவரே மறவர் எனப்படுவர் என்பார் ஐயன் @# பாவாணர் ...
+++
# கொற்றவை ..
# காடுகிழாள் ..
# பழையோள் ..
# துர்க்கை ..
#காளி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக