வெள்ளி, 20 செப்டம்பர், 2019

ஆரியர் திராவிடர் மோதல் ஆதாரம் இல்லை தமிழறிஞர் ஆய்வாளர் கற்பனைவாதம் கட்டுக்கதை திராவிடம்



aathi tamil <aathi1956@gmail.com>

செவ்., 10 ஜூலை, 2018, பிற்பகல் 4:30






பெறுநர்: எனக்கு



‘மீண்டும் ஆரியரைத் தேடி’ திராவிடர்கள் புறப்பட்டு விட்டார்களா?


‘மீண்டும் ஆரியரைத் தேடி‘ திராவிடர்கள் புறப்பட்டு விட்டார்களா?


Dravida-arya history no scientific basis – DM.2

‘மீண்டும் ஆரியரைத் தேடி‘ புத்தக வெளியீட்டு விழா: ‘திராவிட, ஆரிய வரலாறுகளை நிரூபிக்க, போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை’ என, நுால் வெளியீட்டு விழாவில், தமிழ் அறிஞர்கள் கூறினர். சமூக இயங்கியல் ஆய்வு மையம் சார்பில், த. தங்கவேல் எழுதிய, ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ என்ற நுால், சென்னை நிருபர்கள் சங்க அரங்கில், நேற்று முன்தினம் 23-09-2015 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் எஸ். ராமச்சந்திரன் நுாலை வெளியிட்டார். ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, திரைப்பட இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்[1]. எழுத்தாளர் இனம்-மொழி இரட்டைக் குழப்பத்திலிருந்து மீளவில்லை என்று தெரிகிறது. மொழி வேறு, இனம் வேறு என்பதைப் புரிந்து கொண்டால் தான், தமிழர்கள் ஆரிய-திராவிட மாயைகள், கட்டுக்கதைகள், புராணங்கள் இவற்றிலிருந்து விடுபட முடியும்.


Dravida-arya history no scientific basis – DM – photo

ஆதாரங்கள் இல்லை : விழாவில், தமிழறிஞர்கள்பேசியதாவது[2]: இந்தியாவின் இன, பண்பாட்டு வரலாற்றை பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்கள், அவர்களின் பார்வைக்கேற்ப, இந்து, முஸ்லிம், பிரிட்டிஷ் நாகரிக வரலாறாக பிரித்து எழுதினர்[3]. அதில், இந்தியாவில், ஆரிய, திராவிட இனங்கள் இருந்தன; ஆரியர்கள், மத்திய ஆசியாவில் இருந்து வந்து, திராவிட நாகரிகத்தை அழித்து, தங்கள் நாகரிகத்தை பரப்பினர்; வேளாண்மை உள்ளிட்ட நாகரிகங்களை அவர்களே கற்பித்தனர் என, சொல்லி இருக்கின்றனர். ஆரியர்கள் என்போர், இந்தோ ஐரோப்பிய கூட்டு மொழிகளை பேசுவோர், உயரமாக வெள்ளை தோல் கொண்டோர் என்றும் கூறினர். குறிப்பாக, ஆரியர்கள், இந்து மதத்தின் வேதங்களை தோற்றுவித்தவர்கள் என்றும், அதன்படி வாழ்க்கை அமைத்துக்கொண்டவர்கள் என்றும் கூறினர். வேதங்களை தற்போதும் பயின்று வரும் பிராமணர்களே, ஆரியர்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினர். ஆனால், வேதங்களில் கூறப்படும் காலக்கட்டத்தில், இரும்பு, செம்பு உள்ளிட்ட உலோகங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களோ, மற்ற அறிவியல் கூறுகளோ, இதுவரை கிடைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட மொழி பேசுவோர், ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை[4]. மொழி பரவக்கூடியதாகவும், இனங்களில் கலக்க கூடியதாகவும் உள்ளது. வடஇந்திய தொல் குடிகள், தென் இந்திய தொல் குடிகள் என்ற இனங்கள் இருந்திருக்க வேண்டும் என, கூறுகின்றனர்[5]. ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லை. அடுத்தகட்ட ஆய்வுகள், மானுடவியல், தொல்லியல், அறிவியல், மரபியல் சார்ந்து செய்ய வேண்டி உள்ளது.


Dravida-arya history no scientific basis – DM

தென்னிந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளைதெளிவாக வெளியிட பயப்படுகின்றனர். வெவ்வேறு நாகரிகங்கள் கொண்ட, எகிப்து, இஸ்ரேல், மெசபடோமியா, இந்தியா உள்ளிட்ட இடங்களில், ஒரே மாதிரியான கறுப்பு, சிவப்பு மட்பாண்டங்கள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி, புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இந்திய வரலாற்றை பற்றி, இன்னும் பாகிஸ்தானில் உள்ள ஹரப்பாவை, உதாரணமாக சொல்லும் நம் ஆய்வாளர்கள், தற்போது வரை, தென்னிந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை தெளிவாக வெளியிட பயப்படுகின்றனர். இனக்கூறின் அடிப்படையில், ஆரிய, திராவிட நாகரிகம் குறித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பும், ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ என்ற நுால், ஆய்வாளர்களும், அரசியல்வாதிகளும் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். தென்னிந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வுகள் என்ன என்பதனையே அவர்கள் குறிப்பிடவில்லை. அவற்றின் முடிவுகளை தெளிவாக வெளியிட வேண்டும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அப்படியென்றால், தெளிவாக இல்லாமல் என்ன இருக்கிறது. செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை தாராளாமாக வெளியிடலாமே, இதிலென்ன பயம் இருக்கிறது? இப்பொழுது இவர் ‘மீண்டும் ஆரியரைத் தேடி’ என்று வெளியிட்டிருக்கிறாரே!!


Dravidians have different culture

ஓய்வு பெற்ற பிறகு மாற்றுக் கருத்துகளை வெளியிட இவர்கள்முன்வந்திருப்பது ஏன்?: விழாவில், தொல்லியல் அறிஞர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் ர. பூங்குன்றன், இந்திய அரசு தொல்லியல் துறை, துணை கண்காணிப்பு கல்வெட்டு ஆய்வாளர் க.கருப்பையா, இந்திய அரசு தொல்லியல் துறை தென்மண்டல, துணை கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் க.மூர்த்தீஸ்வரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படி ஓய்வு பெற்ற விற்பன்னர்கள், திடீரென்று மாற்றுக்கருத்துகளை சொல்லுவது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்வது விசித்திரமாக இருக்கிறது. பிஜேபி ஆட்சிக்கு வரும்போது எல்லாம் இப்படி திடீர் என்று, சில கோஷ்டிகள் கிளம்புகின்றன. அவை இந்துத்துவா சித்தாந்தத்திற்கு துணை போவது போலக் காட்டிக் கொள்கின்றன. ஆனால், ஆட்சி மாறியதும், மறுபடியும், அத்தகையோர் மாறிவிடுகின்றனர். திராவிட சித்தாந்தத்திலிருந்து அவர்களால் விடுபட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள், இருப்பினும் சபலம் இருக்கத்தான் செய்கிறது.


MGS Narayanan and Romila Thapar

ரோமிலா தாபர்[6], ஆர். எஸ். சர்மா[7] போன்றோர்ஆரியர்களைப் பற்றி தங்களது கருத்துகளை மாற்றிக்கொண்டுள்ளது: ரோமிலா தாபர், ஆர். எஸ். சர்மா போன்ற சரித்திராசிரியர்கள் ஆரியர்களைப் பற்றி தங்களது கருத்துகளை மாற்றிக் கொண்டுள்ளார்கள். அதாவது இனரீதியில் ஆரியர்கள், ஆனால், அம்மொழி பேசுபவர்கள் இருந்துள்ளார்கள், என்ற அளவிற்கு கருத்து மாறியிருக்கிறது. எம். ஜி. எஸ். நாராயணன் போன்றோர் ஆரியர் என்ற இனமே இல்லை என்ற அளவுக்கு பேச ஆரம்பித்துள்ளார். ஒருதடவை அவர் அவ்வாறு தனது கருத்தை சென்னையில் நடந்த தமிழக வரலாற்றுப் பேரவை மாநாட்டில் பேச, உடனே பி. ஜகதீசன் என்ற அந்த அமைப்பின் தலைவர், அதனை மறுத்து பேசினார். திருச்சியிலும் ஐராவதம் மஹாதேவவன் ஆரியர் / திராவிடர் இனமல்ல! தன்னுடைய பேச்சை முடித்தப் பிறகு, ஆராய்ச்சியாளடர்கள் “ஆரியர்” மற்றும் “திராவிடர்” என்ற இனவாதச் சர்ச்சைப் பிடிகளுக்குள் சிக்கிவிடாமல், மொழிரீதியிலான அலசல்களுக்கு மட்டும் உட்பட வேண்டும் என்று எச்சரித்தார்[8]. ஆனால், பி. ஜகதீஸனோ சிந்துகுறியீடுகள் தமிழ்தான் என்று மஹாதேவன் முடிவு செய்து விட்டார் என்று அறிவித்து விட்டார். அதுமட்டுமல்ல, இப்பொழுது, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை மாநாட்டில், இவ்வாறு இவர் பேசுவதும், அதற்கு பி. ஜகதீஸன் போன்றோர் ஆமாம் போடுவதும் வேடிக்கையாக உள்ளது[9]. திராவிடர்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய நாகரிகம், கலாச்சாரம், என்று தனியாக இருக்கிறது…..என்றெல்லாம் பேசியபோது, தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், அவர்கள் திராவிடர்கள் உள்ளார்கள் என்று தான் நம்புகிறார்கள். திராவிடர்கள் இருக்க வேண்டுமானால், ஆரியர்களும் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்பொழுதுதான், இரு இனங்களுக்கிடையில் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கும். திராவிட கழகம், பெரியார் திராவிட கழகம், பெரியார் திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், போன்றவை மேடைகளில் பேசிக்கொண்டே இருக்க முடியும். அரசில் நடத்த முடியும்.


P Jagadeesan and MGS Narayanan

அத்தகைய போலி சித்தாந்தங்களை நம்புகிறவர்கள்தமிழகத்தில் தான் இன்னும், இன்றும் இருக்கிறார்கள்: ‘திராவிட, ஆரிய வரலாறுகளை நிரூபிக்க, போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை’ என்று நூலாசிரியர் சொல்வதே வேடிக்கையான விசயம். ஏனெனில், இனவாத சித்தாந்தமே போலித்தனமான-விஞ்ஞான முறையில் தான் உருவாக்கப்பட்டது என்பது தெரிந்த விசயமாக இருக்கிறது. அதனால் தான் 1950களிலேயே, இனம் என்ற வார்த்தை பிரயோகம் இருக்கக் கூடாது என்று ஐக்கிய நாடுகள் சங்கம் முடிவெடித்து, அறிவித்தது. போஇலி-விஞ்ஞானத்தினால் உருவாகிய இனவெறி சித்தாந்தத்தினால், இரண்டு உலக யுத்தங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றால், கோடிக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், வீடுகளை-உடமைகளை இழந்துள்ளனர்,……ஆனால், அத்தகைய போலி சித்தாந்தங்களை நம்புகிறவர்கள் தமிழகத்தில் தான் இன்னும், இன்றும் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

© வேதபிரகாஷ்

25-09-2015

[1] தினமலர், திராவிட, ஆரிய வரலாற்றுக்கு அறிவியல்சான்றுகள் இல்லை‘, செப்டம்பர்.25, 2015 21.34.

[2] http://www.dinamalar.com/district_detail.asp?id=1349360

[3] சுதந்திரம் பெற்றபிறகு என் அத்தகைய பிரிப்பு முதலியவை மாற்றப்படவில்லை? அப்படியென்றால் அன்றிலிருந்து ஆதிக்கத்தில் உள்ள சரித்திராசிரியர்கள், அதனை ஏற்றுக்கொண்டே அவ்வாறு செய்தார் என்றாகிறது.

[4] இச்சித்தாந்தத்தையும் தமிழாரிசியர்கள் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

[5] இனரீதியில் மக்களைப் பிரிக்க வேண்டும் என்பவர்கள் தொல்குடிகளையும் பிரிக்கத்தான் செய்வார்கள். அதனை திசைக்கு என்று பிரித்தாலும், உடல் நிறம் மூலத்தாலு ஒன்றுதான்.

[6] Romila Thapar, Which of us are Aryans?, Seminar, New Delhi.

[7] R. S. Sarma, In search of Aryans, Orient Longman Publications, Hyderabad, 2001.

[8] திராவிட அழக வீரமணியும் விடவில்லை, விடுதலையில் விளாசித் தள்ளிவிட்டார் – ஆரியரும் திராவிடரும் வெவ்-வேறு இன மரபுகளைச் சேர்ந்-தவர்கள். வெவ்வேறு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆரியர் வாழ்வியல் முறை வேறு; திராவிடர் வாழ்வியல் முறை வேறு; ஆரியக் கலாச்-சாரம் வேறு; திராவிடப் பண்பாடு வேறு; இவை இரண்டும் எதிர் எதிர் நிலையில் நிற்பவை. எக்காலத்தும் இவை இரண்டும் ஒன்று கலப்பதற்கு வாய்ப்பே இல்லை!

[9]https://dravidianatheism.wordpress.com/2009/10/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/

Advertisements

Report this ad

Report this ad


Related


சங்க இலக்கியங்களில் ஆரியர் - திராவிடர்In "ஆரிய இனம்"

சிந்து வரிவடிவம், ஹரப்பன் திராவிடி மற்றும் காட்டுக் கழுதை!In "ஆரியர்"

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா?In "ஆரிய இனம்"

குறிச்சொற்கள்: ஆரிய இனம், ஆரிய கண்கள், ஆரிய ரத்தம், ஆரியன், ஆரியப் படையெடுப்பு, ஆரியர், ஆரியர்கள், இனம், இனவாத சித்தாந்தம், உதடு, ஐராவதம் மஹாதேவன், சரித்திரவரைவியல், திரவிட, திராவிடத்தீர்வு, திராவிடன், திராவிடர், பெரியார், வீரமணி

This entry was posted on செப்ரெம்பர் 25, 2015 at 9:38 முப and is filed under ஆரிய இனம், ஆரியன், ஆரியப் படையெடுப்பு, ஆரியர், இனம், இனவாதம், இனவெறி, ஐராவதம் மஹாதேவன், சங்க இலக்கியங்களில் ஆரியர், சங்க இலக்கியங்களில் திராவிடர், சரித்திரவரைவியல், சிந்து வரிவடிவம், சிந்துக் குறியீடுகள், திராவிட இனம், திராவிடத்தீர்வு, திராவிடன், திராவிடர், பெரியார், முந்தைய-திராவிடி, ஹரப்பன் திராவிடி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
2 பதில்கள் to “‘மீண்டும் ஆரியரைத் தேடி’ திராவிடர்கள் புறப்பட்டு விட்டார்களா?”

karuppusamy Says:3:51 பிப இல் செப்ரெம்பர் 30, 2015 | மறுமொழி


நூல் வெளியீட்டு விழாவில் பேசியவர்கள் கூறியவற்றி லிருந்து ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் ஆரியரைத் தேடி என்ற நூலுக்கு திரு வேதபிரகாஷ் மிக ஆழமான ஒரு திறனாய்வு செய்துள்ளார். பாராட்டப்பட வேண்டிய திறமை இது. திராவிடரிடமுள்ள இச் சீரிய பண்பு சில தமிழரிடமும் உள்ளதை இப்போதுதான் காண்கிறேன். முதலில் அந்நூலிலிருந்து சில குறிப்புகளைப் பார்ப்போம்.
“ ……………………………… இப்படிப்பட்ட தேவலோக மனிதர்கள்
(வெள்ளை நிற மனிதர்கள்) திடீரென்று வந்து சேர்ந்த போது அவர்களின் காலில் விழுந்து சரணடைந்து அவர்களை கோயிலில் வைத்து கும்பிடும் உணர்வுதான் அக்காலத்து திராவிட மக்களுக்குத் (சிந்துவெளி நாகரிக மக்களுக்கு) தோன்றியிருக்கும். திராவிட கலாச்சாரத்தில் ஆரியர் நுழைந்த கதை இதுதான். “




ஆசை வெட்கமறியாது என்பதற்கு கணையாழி ஆசிரியர் கஸ்தூரி ரங்கனின் (முஸ்தபா) மேற்கண்ட குறிப்பு நல்ல எடுத்துக்
காட்டாக உள்ளது. இதே போன்ற ஒரு கற்பனை உருவகத்தைத் தான் பல ஐரோப்பிய ஆர்வலர்களும் கொண்டுள்ளனர். நாகரிக வளர்ச்சியில் மிகவும் பிந்தங்கி யிருந்த அந்நியரான வெள்ளை நிற ஆரியரைக் கண்டு நகர நாகரிக மக்களாக விளங்கிய கருப்பு நிற திராவிடர் அவர்களை தெய்வமாகக் கருதி காலில் விழுந்து வணங்கினர் எனக் கூறுவது விஞ்ஞானத்திற்கு முற்றிலும் புறம்பானது. உண்மையில் வெள்லை நிற ஆரியர் கருப்பு நிற சிந்துவெளி மக்களின் புறக்குடிகளாக வாழ்ந்து சேவைத் தொழிலை மேற்கொண்டு வந்தனர் என்பதை தொல் எச்சங்கள் மூலம் அறிகிறோம். புறக்குடிகளாக தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்த இவ் வெள்ளையர்களை சிந்துவெளி நகர கருப்பு மாந்தர் ஒருவகையான அருவெறுப்புடன் நோக்கியிருப்பர் எனக் கூறுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.



குதிரைகளே ஆரியருடைய சிறப்பு என்பது கணையாழி இதழ் ஆசிரியர் உட்பட பலரின் கருத்தாகும். ஆரிய இனக் குழுக்கள் சிந்துவெளிப் பகுதியில் மட்டுமல்லாமல் மெசப்பொட்டாமியப் பகுதியிலும் கி.மு.2000லிருந்து புறக்குடிகளாக வாழ்ந்து சேவைத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் பாபிலோனியாவின் விவசாயக் குடிகளிடமிருந்து கூலியாகப் பெற்ற தானியங்களை எடுத்துச் செல்வதற்கு குதிரையைப் பயன்படுத்தினர். அதேவேளையில் அக்காலகட்டத்தில் பாபிலோனிய அரசுகளிடம் குதிரை பயன்பாட்டில் இல்லை; அரசர்கள் கழுதைகளையும் கோவேறு கழுதைகளையுமே பயன் படுத்தினர். கணையாழி ஆசிரியரின் கருத்துப்படி குதிரை ஓட்டிகளை பாபிலோனியர் மிகப் பெரிய மரியாதையுடன் நடத்தியிருக்கவேண்டும். ஆனால், புறக்குடிகள் பயன்படுத்திய வாகனம் என்பதால் அத்தகைய குதிரைகளில் தாங்கள் பயணிப்பது கௌரவக் குறைவான செயல்பாடாக பாபிலோனியர் கருதினர். புறக்குடிகள் பயன்படுத்திய குதிரைகளை அருவெறுப்பாகப் பார்த்த நாகரிகக் குடிகள் நிச்சயமாக அக்குடிகளையும் அவ்வாறே நடத்தியிருப்பர் என்பது திண்ணம். இப்பொருள் குறித்து விரிவாக இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.


ஆரிய இனக்குழுக்கள் தொடர்பான வேதங்களில் தான் கடவுளர்கள் வெள்ளையர்களாக உருவகப்படுத்தப் பட்டுள்ளனர். ரிக் வேதத்திற்கு முந்தைய சிந்துவெளி நகர மக்களின் புராணங்கள் எதையுமே இதுவரை யாரும் அடையாளம் கண்டு கூறியதில்லை. சிந்துவெளிப் பண்பாட்டுப் புரோகிதர்கள் புனைந்த புராணங்களாக எவற்றை முஸ்தபா (கணையாழி ஆசிரியர்) குறிப்பிடுகிறார் என்று புரியவில்லை. பிற்காலத்தில் வியாசர் புனைந்ததாகக் கூறப்படும் இந்து மதம் தொடர்பான புராணக் கதைகளில் கருப்பு நிறக் கடவுளர்களும் உண்டு. இப்புராணங்கள் பெரும்பாலும் மேற்காசியாவிலிருந்து குடியேறிய ஆரியரல்லாத பூசாரி அறிஞர்கள் புனைந்தவை என்பதை இந்நூலில் விரிவாக விளக்குகின்றோம். இப்புராண மரபில் காடுகளில் வாழக்கூடிய வெள்ளையினத்தினராகிய கந்தவர்களையும்
அவர்களின் பெண்பாலாரான அப்ஸரஸ்களையும் காண்கிறோம். மேற்காசியாவிலும் சிந்துவெளிப் பகுதியிலும் நாகரிகக் குடிகளைச் சார்ந்து புறக்குடிகளாக காடுகளில் வாழ்ந்த வெள்ளையின ஆரிய இனக்குழுக்கள், தொடக்ககாலத்தில் ஒப்பீட்டளவில் சுத்தமும் சுகாதாரமும் பேணாமல் வாழ்ந்திருப்பர். பின்னர் நாகரிகக் குடிகளிடமிருந்து சுத்தமாக வாழக் கற்றுக்கொண்ட சூழலில் இவ் வெள்ளை நிறக் குடிகள் கந்தர்வர்களாகவும் அப்ஸர்களாகவும் நோக்கப்பட்டுள்ளனர்.



ஆரியரைத் தேடி நூலின் தோற்றுவாயிலிருந்து மேலே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நூலை முழுவதும் வாசித்துவிட்டு இதை விமர்சிப்பதே சரியானதாகும்.

vedaprakash Says:1:08 முப இல் ஒக்ரோபர் 6, 2015 | மறுமொழி

பாரதிய இதிஹாஸ சங்கல சமிதி, 25 (பழைய எண்.9), வெங்கடாசலம் தெரு, பழைய மாம்பலம், சென்னை – 600 033 என்ற முகவரிக்கு புத்தகத்தை அனுப்பி வையுங்கள்.

விரிவான விமர்சனம் செய்யப்படும்.https://aryandravidian.wordpress.com/2015/09/25/in-search-of-aryans-again-by-dravidians/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக