வெள்ளி, 20 செப்டம்பர், 2019

வன்னியர் பறையர் க்கு சமமாக வெள்ளாளர் 12சதவீதம் census 1891

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்ஞாயி., 8 ஜூலை, 2018, பிற்பகல் 9:42
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah, துரை. இராஜகுமரன் மற்றும் 12 பேருடன் இருக்கிறார்.
விகிதாச்சார பிரதிநிதித்துவத்தில் வெள்ளாளர்:
அன்புமணி சமீபத்தில் அளித்த பேட்டியிலும் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை வழியுறுத்தியுள்ளார். பறையர்களுக்கு 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பிலும் வன்னியர்களுக்கு 1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் மக்கட்தொகை எவ்வளவு என தகவல்கள் உள்ளன.
அனைத்து வெள்ளாளருக்கும் 1955க்கு பிறகு கணக்கெடுப்பு இல்லை. அதனால் கீழுள்ள இரண்டு கணக்கெடுப்புகளையும் கொண்டு வெள்ளாளரின் விழுக்காடு எவ்வளவு என்பதை பார்ப்போம்.
1. அனைத்து வெள்ளாளருக்கும் ஆன கணக்கெடுப்பு என்றால் 1891ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 22,54,073 உள்ளதோடு அதன் பிறகு அனைத்து வெள்ளாளர் கணக்கெடுப்பு கிடைக்கவில்லை.
2. ஆனால் 1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் சில வெள்ளாளர் உட்பிரிவுகளின் இதர பிற்படுத்தப்பட்
டோரில் உள்ள சில பிரிவுகளுக்கான கணக்கெடுப்பு உள்ளது.
1891 கணக்கெடுப்பின் படி வெள்ளாளர் 22,54,073, வன்னியர் 22,42,499, பறையர் 22,10,988 உள்ளனர். 1981 கணக்கெடுப்பில் வன்னியர் 12% என்றும் 2011 கணக்கெடுப்பில் பறையர் 12% விழுக்காடு என்றும் உள்ளதால் 1891 கணக்கெடுப்பில் வன்னியர் பறையரை விட சில ஆயிரங்கள் கூட இருந்த வெள்ளாளர்கள் இன்று 12.5 விழுக்காடு இருப்பர் என அனுமானிக்கலாம். எனில் தமிழ்நாட்டு மக்கட்தொகையில் தோராயமாக எட்டில் ஒருவர் வெள்ளாளராகவும் எட்டில் மற்றொருவர் வன்னியராகவும் எட்டில் மற்றொருவர் பறையராகவும் உள்ளனர். கருணீகர் போன்றோருக்கான கணக்கெடுப்பு தனியே இல்லை. சைவ வெள்ளாளர் சங்கத்தின் கீழ் கருணீகரும் வருகின்றனர். எனில் 1891ல் கருணீகர் வெள்ளாளர் என்றே கொடுத்திருக்க வேண்டும் என அனுமானிக்கலாம்.
மேலுள்ளவற்றை கொண்டு 1981 கணக்கெடுப்பில் உள்ள சில வெள்ளாளர் உட்பிரிவுகளின் மக்கட்தொகையை பார்ப்போம். கீழுள்ள படத்தில் இருக்கும் கணக்கெடுப்பு பட்டியலில் 69 விழுக்காட்டில் உள் விழுக்காடாக சில இதர பிற்படுத்தப்பட்
ட இனக்குழுக்களுக்கு மட்டும் 69 விழுக்காட்டில் உள் விழுக்காடு கொடுக்கப்பட்டுள்ளது. இதை தற்கால மக்கட்தொகைக்கு மாற்றும்போது இதிலுள்ள உள் விழுக்காடோடு 0.69 பெருக்கி அதை 7.22 கோடிக்கு ஏற்ப மாற்றவேண்டும்.
எடுத்துக்காட்டுக்கு 6.8 உள் விழுக்காடு கொண்ட கொங்கு வெள்ளாளருக்கு 6.8 * 0 .69 * 7.22 என கணக்கிட்டால் வரும் விடை இலட்சங்களில் இருக்கும். அதன்படி கொங்கு வெள்ளாளர் மக்கட்தொகை 6.8 * 0.69 * 7.22 = 33.88 லட்சங்களை தாண்டியுள்ளது.
கொங்குவெள்ளாளர், சோழிய வெள்ளாளர், வீரக்கொடி வெள்ளாளர், கருணீகர், சோழிய செட்டி, வெள்ளாஞ்செட்டியார், நாங்குடி வெள்ளாளர் இவர்களை மட்டும் கணக்கிட்டால் 9.6 உள் விழுக்காடு வருகிறது. இதை மொத்த தமிழ்நாட்டு விழுக்காட்டுக்கு மாற்றனும் என்றால் 0.69 பெருக்கினால் 6.624% வரும். இதை 2011 கணக்கெடுப்பில் உள்ள தமிழ்நாட்டு மக்கட்தொகை 7.22 கோடி பெருக்கினால் வரும் 47.825 லட்சங்கள் மக்கட்தொகையே மேலுள்ள 7 வெள்ளாளர் பிரிவுகளின் 2011 மக்கட்தொகை எனலாம்.
_______________
ஆக கொங்குவெள்ளாளர், சோழிய வெள்ளாளர், வீரக்கொடி வெள்ளாளர், கருணீகர், சோழிய செட்டி, வெள்ளாஞ்செட்டியார், நாங்குடி வெள்ளாளர் இந்த 7 பிரிவுகள் மட்டும் 47.825 லட்சங்கள் வருகின்றனர்.
_________________
மற்ற பிற்படுத்தப்பட்ட வெள்ளாளர்களின் மக்கட்தொகையும் பொதுப்பட்டியலில் உள்ள வெள்ளாளர் தொகையும் 1981 கணக்கெடுப்பில் இல்லை என்றாலும். 1891 கணக்கெடுப்பை வைத்து பார்க்கும் போது வெள்ளாளர் வன்னியர் பறையர் மட்டுமே தலா 1 கோடியை நெருங்கி இருப்பர் என கூற இயலும். - தென்காசி சுப்பிரமணியன் (Rajasubramanian Sundaram Muthiah )

மக்கட்தொகை கணக்கெடுப்பு சாதி வேளாளர் பிரிவு பட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக