வெள்ளி, 20 செப்டம்பர், 2019

இமயமலை வடக்கெல்லை இலக்கியம் சான்று ஆதாரம் மண்மீட்பு


aathi1956 aathi1956@gmail.com

செவ்., 10 ஜூலை, 2018, பிற்பகல் 1:51
பெறுநர்: எனக்கு
புறநானூறு – அரிய செய்தி - 1
6 -  தமிழ்நாட்டின் எல்லைகள்
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தெடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்
காரி
க்கிழார், புறநா.6 : 1 – 4
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே
குமட்டூர்க்  கண்ணனார், பதிற். 11 : 23 – 25
கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை …
பரணர், பதிற். 43 : 6 – 8
தென்குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல
குறுங்கோழியூர் கிழார், புறம்.17:1-8 தென் திசையில் கன்னியையும் வட திசையில் இமயத்தையும் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் கடற் பரப்பையும்  எல்லைகளாகக் கொண்டு இவ்விடைப்பட்ட நிலம் விளங்கும். இங்கு, குன்றும் மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப் பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபடவும் தீயன போகவும் கோல், செங்கோலாகவும் உரிய இறைப் பொருளுண்டு நடுவுநிலையுடன் தம் சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர் நின் முன்னோர், அவ்வாறிருந்து மண் முழுதும் ஆண்ட அன்னவர்தம் மரபினைக் காத்தவனே.
குண குட கடல் என்றாற்போலக் குமரிக்கண் கடல் கூறப்படாமையால், குமரி கடல்கோட்படுதற்கு முன்னையது இப்பாட்டென்பது தெளிவாகும்.
மேலும் காண்க: தொல்காப்பியம் – சிறப்புப் பாயிரம். இமயம்
வடதிசை யதுவே வான் தோய் இமயம் 132 புறநா.

*"வடதிசை யதுவே வான்தோய் இமயம்
தென்திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ, இம்மலர்தலை உலகே."
(புறநானூறு : பாடல் : 132)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக