வெள்ளி, 20 செப்டம்பர், 2019

சிந்துசமவெளி அகழ்வாராய்ச்சி அறிஞர்கள் ஆரியர் கற்பனை

aathi1956 aathi1956@gmail.com

சனி, 14 ஜூலை, 2018, முற்பகல் 10:43
பெறுநர்: எனக்கு
நிலா. வேங்கடவன் , ந.ம.நிரஞ்சன் குமார் மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
சிந்து சமவெளி நாகரிகமும் ஆரியர் படையெடுப்பும்...!
தினத்தந்தி நாளிதழ் செய்தி (2018.07.07): ““ ‘கோட்டா திம்பா’ என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் ‘தோலாவிரா’ எனும் (குசராத் மாநிலம் - கட்ச் மாவட்ட தலைநகர் புச்-இலிருந்து 200 சீர்கல் தொலைவில் - காதிர்பேட் தீவில் அமைந்துள்ள) சிற்றூரில் இந்திய தொல்லியல் ஆய்வகமும் காந்திநகர் ஐ.ஐ.டி. குழுவினரும் நடத்திய அகழ்வாராய்ச்சிப் பகுதியில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிந்து சமவெளி நாகரிக நகரம் இருந்ததும் அங்கு மிகப்பெரிய நீர் சேமிப்புக் கட்டமைப்பு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
‘சிந்து சமவெளி நாகரிக மக்கள் பாலைவனத்துக்குள் ஒரு நவீன நகரத்தையே உருவாக்கியுள்ளனர். தோலாவிரா கிராமம் பாலைவனத்தில் அமைந்திருந்தாலும் ஒரு காலத்தில் அது வளம்மிக்க , கலாச்சார பன்முகத்தன்மை மிகுந்த நகரமாக இருந்துள்ளது; ஒரு சர்வதேச வர்த்தக நகராகவும் திகழ்ந்திருக்கி
றது’ என்று தெக்கான் தொல்லியல் கல்லூரியின் துணைவேந்தர் வசந்து சிண்டே கூறுகிறார்.
சிந்துவெளி நாகரிகம் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக முனைவர் சமர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் சிண்டேவும் சிந்துசமவெளி நாகரிகம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்கிறார்.
மத்திய ஆசியாவில் இருந்து வந்த ஆரியர்கள் படையெடுப்பே, சிந்து சமவெளி நாகரிகம் அழியக் காரணம் என்று இங்கிலாந்து இராணுவ அதிகாரியும் தொல்லியல் ஆய்வாளருமான சர் எரிக் மார்டிமர் வீலர் குறியிருந்தார்.
அதை மறுக்கும் சிண்டே, இயற்கை சீற்றமே அந்த நாகரிகம் அழியக் காரணம் என்கிறார். சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை, தோலாவிரா நகரம் அழியக்காரணமாக இருந்திருக்கலாம் என்று அங்கு ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர்.””
ஏற்கனவே நாங்கள் வந்து,
{‘அருள்நிலா’ கட்டுரைகள் இந்த ‘ஆரியர் ’ கருத்தியலை ( Aryan Migration )மறுத்து எழுதிய முகநூல் பதிவுகள்,ஆரிய இனம் என்றோர் இனமுண்டா? 2016, மற்றும் 2017 சூன் 17 ; யார் ஆரியன்? - யார் திராவிடன்...? (1 செப்டம்பர், 2017 ) ....போன்றவை}
இந்தக் கருத்தை - அதாவது ‘ஆரியர்’ வந்து ஒரு இனத்தைச் சுட்டுமானால், ஒரு தவசத்திற்கு ‘ஆரியம்’ என்று வைக்கமுடியுமா?காட்டாக, தமிழன் என்று ஓர் இனம் ; அப்ப, ஏதாவது ஒரு பொருளுக்கு அல்லது தவசத்திற்கு ‘தமிழன்’ என்று பெயர் வைப்பார்களா??
அண்மைக்காலத்தில் வெளியான ‘பாலிமொழி அகரமுதலியில்’ ஆரியர் என்ற சொல், ஆசியாக்கண்டம் முழுக்கவும்,பல மொழிகளிலும் ‘உயர்ந்தவன்’, ’தலைமையானவன்’, ‘அரிய ஆற்றலுள்ளவன்’ என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது! மேலும் அந்த அகரமுதலி ‘ஆரியர்’ என்ற சொல்லின் வேர் ‘தமிழில் தான் உள்ளது’ என்று அறிவித்துள்ளது. அந்தவேர் >அருமை - அருமையர் -அரியவர் > ஆரியர் .
ஆக, ஆரியம் - உயர்வு என்ற பொருளைக்கொண்ட ஒரு பண்புப் பெயர். ‘பண்பு’ப் பெயரில் ஒரு இனம் இருக்க முடியுமா??
அதாவது, ஆரியர்கள் வந்து நம்மிடமிருந்த அறிவுத் தரப்பினர் - நச்சு எண்ணம் கொண்ட அறிவர்கள், கொடுங்கோல் மன்னர்களுடன் உறவு கொண்டு, மக்களுக்கு எதிராகப் பேசிய அறிஞர் தரப்புத்தான் ‘ஆரியர்’ களாக மாறினார்கள்; மற்றபடி அவர்கள் வேறு எங்கிருந்தோ வரவில்லை என்று குறிப்பிட்டிருந்தோம்.
இப்படி பல கோணங்களில், ஆரியர் என்ற சொல்லை , அதன் மூலக்கருத்தை ஆய்ந்து, அது ஒரு பண்புச் சொல் - அது ஒரு இனத்தைக் குறிக்க வாய்ப்பே இல்லை! இடையில் வந்த அரசியல் சூதாட்டம் கருதி அது நிலைத்து விட்டது என்ற கருத்துக்களைப் பதிவுசெய்திருந்
தோம்.
அக்கருத்துகளுக்கு அரண் செய்யும்வண்ணம் அடுக்கடுக்கான சான்றுகள் வந்துகொண்டுள்ளன. அதில் மேற்சுட்டிய (2018.07.07 தினத்தந்தி) நாளிதழ் செய்தியும் ஒன்று.
“ஆரிய மெய்யினம் (Aryan Race) எனும் கருத்து 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றியது” என்பார் வரலாற்றாய்வறிஞர் குணா (தமிழரின் தொன்மை -பக் 53)
ஆரிய இனக் கோட்பாடு முழுப்பொய்யானது, அடிப்படையற்றது! எப்படி மூல திராவிடமொழியின் எச்சங்கள் உலகில் எங்கு தேடினாலும் கிடைக்கவில்லையோ, அப்படியே ஆரிய இனம் என்ற கருத்தாக்கத்தின் சான்று அடிப்படைகள், உலகில் எங்கு தேடினாலும் ,இதுவரை கிடைக்கவில்லை; இனியும் கிடைக்காது!
‘திராவிடம்’ என்பது வர்ணநெறி மனுவியத்தின் (நச்சு ஆரியத்தின் ) நீட்சி; வர்ணநெறி மனுவியத்தின் மறுபக்கம். வர்ணநெறி மனுவியத்திற்கு இணையான தமிழர் இனப்பகை திராவிடம். வடுகர்கள், திராவிட வில்லையைத் தமிழர்கள் நெற்றியில் கட்டி விட்டிருக்கிறார்கள்.
ஒரு புரிதலுக்காகக் கூறுவதானால்,
இங்கு இருக்கிற சுப.வீரபாண்டியன
்களும் செந்தலை கவுதமன்களும் அவரன்னோரும் தான் இப்ப இருக்கிற (அ) நம்மில் உருவாகிவாகிவருகிற ஆரியர்கள்; இன்றைய திராவிடப் போர்வையில் இருக்கிற ஆரியர்கள் இவர்கள்தாம்.
திராவிடம், தமிழை ஒழித்துக் கொண்டே - கல்வியிலிருந்து - ஆட்சியிலிருந்து - மக்கள் பயன்பாட்டிலிருந்து - ...தமிழை நீக்கிக் கொண்டே, திராவிடம் தமிழுக்காக இருக்கிறது - தமிழுக்காகப் பாடுபடுகிறது என்ற தோற்றத்தைக் கொடுப்பதற்குப் பயன் பட்டவர்கள்/படுகிறவர்கள் பலர்! இதில் பேரா.நன்னன், திராவிட அணி, ‘ரொம்ப தமிழுக்குத் தொண்டு செய்கிறது’ என்பதாகக் காட்டப் பயன்படுத்திய கருவிகளில் முதன்மையானவர். பேரா.நன்னனுடைய வரிசையில்மற்றும் சில தமிழர்களும் அடங்குவார்கள் : சிலம்பொலி செல்லப்பன், சுப.வீரபாண்டியன், க.ப.அறவாணன்... போன்றவர்கள்.இவர
்களெல்லாம் திராவிடத்திற்கு, ஏதோ ஒருசில பயன்களுக்காக, இந்த இனத்தையே காட்டிக்கொடுக்கிற பணியைச் செய்தவர்கள்/செய்கிறவர்கள்.
-அருள்நிலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக