வெள்ளி, 22 டிசம்பர், 2017

வைக்கம் போராட்டம் ஆலயநுழைவு பிராமணர் ஐ விட ஈவேரா பங்கு மிக குறைவு

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
சாதித்த பினராயி விஜயனும்.. திராவிட கண்ணீர் துளிகளின் கட்டுக்கதைளும்!
 சமூகம், பாலா டூன்ஸ்  Comments Off
கேரள அரசையும் முதல்வர் பினராயி விஜயனையும் தமிழர்கள் கொண்டாட வேண்டும்.
ஒரு புறம் நமக்கு தீர்க்க வேண்டிய தண்ணீர் பஞ்சாயத்தில் துரோகம்
செய்தாலும், மறு பக்கம் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடந்தேறி வந்த
திராவிடத்தின் கோவணத்தை உறுவி முச்சந்தியில் அம்மணமாய்
நிறுத்தியிருக்கிறார்கள்.
ஆறு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் உட்பட 36 பேர் பிராமணர் அல்லாதோராக
கோயில் அர்ச்சகர் பணிக்கு நியமனம் செய்திருக்கிறது கேரள கம்யூனிஸ்ட்
அரசு. அவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ‘வெற்று கோஷம்’ போட்டுக்
கொண்டிருக்கவில்லை. சமூக நீதி, திராவிடம், ஆரியம் என்று அரசியல் செய்து
கொண்டிருக்கவில்லை. ஆனாலும் செய்து முடித்திருக்கிறார்கள்.
பாராட்டக்கூடிய ஒன்று தான்.
கேரளாவிற்குள் ‘இந்துத்துவா தேரை’ ஓட்டி அதிகாரத்தை பிடித்து விடாலாம்
என்று பாரதிய ஜனதா பார்ட்டிகள் படையெடுத்துக் கொண்டிருக்கும்
இவ்வேளையில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எல்லாம் கொண்டு வந்து
சிவப்பை காவியாக்க, இடதை வலதாக்க முயலும் இந்த வேளையில் ‘பிராமணரல்லாத 36
பேர்களை’ அர்ச்சகராக நியமித்து ‘சொல்லி அடித்து’ எதிர்வினையாற்றியுள்ளது
கேரள அரசு.
ஆனால் இங்கே உள்ள ‘திராவிட மடத்தை’ச் சேர்ந்தவர்கள் ஏன் சில கம்யூனிஸ்ட்
தோழர்கள்கூட ‘பெரியாரின் வைக்கம் போராட்டம்’ தான் அதற்கெல்லாம் காரணம் என
எழுத தொடங்கியிருக்கிறார்கள். போகட்டும்.
வைகோவின் கடிதமும்கூட அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. அதில்
ஈ.வெ.ராமசாமி ‘நாயக்கர்’ என சாதியைக் குறிபிட்டிருந்ததில் தவறில்லை
என்பதே என் கருத்து. இருப்பதை, உண்மையைக் கூயிருக்கிறார். அவ்வளவே!
( குறிப்பு: ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்று பெரியாருக்கு வைகோ சாதியை
பயன்படுத்தியது தவறு என்பது அவர்களின் மண்டையில் ஏற வேண்டும் என்ற
காரணாத்தாலயே இக்கட்டுரையில் எழுத்தாளர் அதை அப்படியே
பயன்படுத்தியிருக்கிறார். பின்னர் அது நீக்கப்படும்-ஆசிரியர் )
ஆனால் இந்த ‘வைக்கம் போராட்டம்’ பற்றி திராவிடர்கள் அனைவருமே ஒரு
வரலாற்று திரிப்பை செய்துகொண்டு வருகிறார்கள். வைக்கம் போராட்டத்திற்கு
ஈ.வெ.இராமசாமி நாயக்கர் சென்றுதான், அந்த போராட்டம் வெற்றி
அடைந்ததாகவும், சமூக நீதி பெற்றதாகவும், அவர் மட்டுமே அதை எதிர்த்து
பிரச்சாரம் செய்தார் என்றும் ‘வரலாற்றை’ எழுதிக் கொண்டார்கள்.
‘திரிக்கும்’ அதிகாரம் அவர்கள் கையில் இருந்ததல்லவா!
முதலில் அந்த வைக்கம் போராட்டத்திற்கு போவோம்.
வைக்கத்தில் உள்ள சோமநாதர் கோவிலைச் சுற்றி இருக்கும் தெருக்களில்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு நடக்க அனுமதியில்லை என்ற நிலை. இதை அங்கே இருந்த
ஸ்ரீநாராயன குருதர்ம பரிபாலன சபையின் அமைப்புச் செயலாரும், காங்கிரஸ்
பேரியக்கத் தலைவர்களில் ஒருவருமான டி. கே மாதவன் எதிர்த்து போராட்டம்
நடத்துகிறார்.
அதில் பெரும் பங்கெடுத்தவர்களில் ஒருவர் ஜார்ஜ் ஜோசப். இந்த ஜோசப்
மதுரையைச் சேர்ந்த தமிழர். ஆனால் தொழில் நிமித்தம் அங்கேயே
தங்கிவிட்டவர். கே.பி.கேசவ மேணன் என்பவரும் ஒருவர்.
ஒரு கட்டத்தில் காந்தியை சந்தித்து இப் பிரச்சனையைப் பற்றி கூறுகின்றனர்.
ஜார்ஜ் ஜோசப்பை முன்னிறுத்தி போராட்டம் வேண்டாம். மத முத்திரை விழும்,
அதனால் மற்றவர்களை முன்னிருத்தி போராட்டத்தை தொடருங்கள் என்றுகூறி
போராட்டத்திற்கு ஆதரவை தருகிறார். அதன் பேரில் மாதவனும், கேசவ மேணனும்
முன்னின்று போராட்டத்தை வலுவாக்குகிறார்கள்.
திருவிதாங்கூர் சமஸ்தானம் கடுமையான எதிர் நடவடிக்கையை எடுக்கிறது. ஜார்ஜ்
ஜோசப் உட்பட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது. தொடர்ந்து
போராட்டத்தை முன்னெடுத்தாக வேண்டும். என்ன செய்யலாம் என
விவாதிக்கின்றனர்.
அதனால் பக்கத்தில் இருக்கும் சமஸ்தானங்களில் உள்ள காங்கிரஸ் பேரியக்க
நிர்வாகிகளுக்கு எல்லாம் கடிதம் அனுப்பி, அந்த போராட்டத்தை தொடர்ந்து
முன்னெடுக்க வேண்டுகோள் விடுக்கின்றனர். அப்படியான கடிதம் சென்னை
ராஜதானி, மைசூர் சமஸ்தானம் உட்பட திருவிதாங்கூர் சமஸ்தானத்தை அண்டி
இருந்த அனைத்து சமஸ்தானத்தின் காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் செல்கிறது.
அப்படியான கடிதம் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கும் வந்தது. அப்போது (1924-25)
அவர் தந்தை பெரியாராக இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக
இருக்கின்றார். அதன் பேரில் அவரும் கலந்து கொள்ளவேண்டிய கட்டாயம்.
பக்கத்தில் இருந்த மைசூர் சமஸ்தான காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள்
எல்லாம் கலந்து கொள்கிறார்கள். மகாத்மா காந்தியும் ஆதரவு
தெரிவித்துவிட்டார். போகாவிட்டால் காந்தியின் அதிர்ப்திக்கு ஆளாக
வேண்டியிருக்கும். அதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை நிர்வாகியாக
அவரும் செல்கிறார்.
அங்கே வைக்கத்தில் அந்த போராட்டம் யாருக்கு எதிராக என்றால்
நம்பூதிரிகளுக்கு எதிராக. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நம்பூதிரிகளின் நண்பர்.
அப்பா வேங்கடப்ப நாயக்கர் வர்த்தக நடமாட்ட உறவு ஒருபுறம், தவிர அந்த
காலத்தில் ரயிலிலும், வண்டிகளிலும் சென்னை ராஜதானி நிர்வாக
சந்திப்பிற்காக வரும் செல்வந்தர்களும், நம்பூதிரிகளும் ஈரோட்டில் இறங்கி
தங்கி வருவது வாடிக்கை. அந்த வகையில் இராமசாமி நாயக்கர் நம்பூதிரிகளின்
நண்பர்.
இப்படி இருக்க, ‘வைக்கம் போராட்டத்திற்காக’ நாயக்கர் அங்கே செல்கிறார்.
அவரை வாழ்த்தி, வரவேற்பு கொடுத்து அழைத்து சென்றது நம்பூதிரிகள்தான்.
அதாவது, யாருக்கு எதிரான போராட்டம் நடத்தப் போகிறாரோ! அவர்கள் வீட்டிலேயே
தங்கி, விருந்துண்டு, பிறகுதான் போராட கிளம்புகிறார். அப்போது, ‘நடப்பது
எங்களுக்கு எதிரான போராட்டமாயிற்றே’ என அவர்கள் கேட்க, இது கட்சி தலைமை
பதவியில் இருப்பதால் தவிர்க்க முடியாது, ஒரு அடையாளத்திற்கான போராட்டம்
தான் என்கிறார் இவர்.
அப்படியான அடையாளப் போராட்டத்தில் தான் அவர் கைது செய்யப்படுகிறார்.
சிறையில் இருக்கிறார்.
அதே காலகட்டத்தில்,விருதுநகரில் இளைஞராக இருந்த காமராஜர் உள்ளிட்ட பல
நிர்வாகிகளும் சென்று அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
அவர்கள் கைதானார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. அப்போது அவர் பெரிய
நிர்வாகி கிடையாது.
ஆக, மற்ற சமஸ்தான, ஜில்லா காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் போராடியதைப்
போலதான், பிரச்சாரம் செய்ததைப் போலத்தான், கைதானதைப் போலத்தான்
ஈ.வெ.இராமசாமி நாயக்கரும் போராடினார். பிரச்சாரம் செய்தார். கைதானார்.
அவர் மட்டுமே முன்னிற்கவில்லை. அவரும் முன்னின்றார்.
அவ்வளவுதான்.(உடனே நாயக்கரை கொச்சைப்படுத்தி விட்டதாக வரக்கூடாது.
தமிழகத்தில் அவரது போராட்டமும் பிரச்சாரமும் வேறு. வைக்கம் விசயத்தை
மட்டும் இங்கே பேசுவோம்)
இதில் ‘நாய்க்கரைப்’ போலவே, டி.கே. மாதவனும், கே.பி. கேசவமேணனும், ஜார்ஜ்
ஜோசப்பும் போராடி, பிரச்சாரம் செய்து, கைதாகி அதிக நாள் சிறையில்
இருந்திருக்கிறார்கள்.
‘நாயக்கரைப்’ போலவே, இராஜகோபாலாச்சாரி, டாக்டர் வரதராஜலு, அய்யாமுத்துக்
கவுண்டர், எம். பெருமாள், சவாமி சர்தானந்தி, என சமஸ்தான தலைவர்களில்
இருந்து வினோபாஜி, மெகாத்மா காந்தி என ஏராளமான தலைவர்கள் வரை அங்கே
நேரில் சென்று போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையிலே இவர்கள் ‘வைக்கம் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு’ என
பேசுவதாக இருந்தால் மதுரை ஜார்ஜ் ஜோசப்பைத்தான் பிரபலப்படுத்தியிருக்க
வேண்டும். அப்படி செய்வது ‘சமூக நீதி’ ஆகாதே. அதனால், பின்னாளில்
பெரியாராகிப் போன இராமசாமி நாயக்கரை மட்டுமே முன்னிலைப்
படுத்திவிட்டார்கள்.
‘பெரியார் கலந்துகொண்டு போராடி வெற்றி பெற்றார்’ என்பதெல்லாம்
இட்டுக்கட்டியது. அவர் கலந்து கொண்டதற்குப் பிறகும் இந்த போராட்டம்
நீடித்து…கடைசியாகத்தான் முடிவுக்கு வந்தது.
ஆக அங்கே இருந்த ‘நம்பூதிரிகளின்’ துணையோடும், இங்கே அதிகாரத்திற்கு வந்த
திராவிட அரசியலாலும் தான் இந்த போராட்ட வரலாறு ‘திரிந்து’ ‘பெரியார்
மட்டுமே’ போராடியதாக மாற்றப்பட்டது. அங்கே நடந்தது ‘தந்தை பெரியாரின்’
போராட்டம் அல்ல. காங்கிரஸ் பேரியக்கத்தின் போராட்டம். அதுதான் உண்மை.
அதற்காக அவர் பங்கேற்றதையும், போராடியதையும், சிறை சென்றதையும்
நிராகரிக்கவோ, கொச்சைப்படுத்தவோ நாம் முனையவில்லை. அவர் மட்டுமே
போராடினார் என்பதை மறுத்து அவரும் பங்கேற்றார் என்கிறோம். அவ்வளவுதான்.
அடுத்து இவர்களின் ‘சமூக நீதி’ வென்ற கதையையும் பார்ப்போம்.
1924-25 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஈ.வெ.இராமசாமி
நாயக்கர் பிறகு ‘கசப்பு’ ஏற்பட்டு விலகி, நீதிக் கட்சியில் இணைகிறார்.
1925-லிருந்து 1937 வரை தமிழகத்தின், அதாவது சென்னை ராஜதானியின் ஆளும்
கட்சியாக (பிரீமியர்) நீதிக் கட்சிதான் இருந்தது. அந்த கட்சியின்
முதல்வர்தான் ராஜாங்கம் செய்து வந்தார். 12 ஆண்டுகள் அந்த நீதிக்
கட்சியில் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் செல்வாக்கு மிக்கவராகவே இருந்தார்.
அதிகாரம் படைத்தவராகவே இருந்தார். மறுக்க முடியாது.
அப்படியென்றால் அந்த 12 ஆண்டு காலத்தில் நீதிக் கட்சியின் அமைச்சரவையில்
யாராவது ஒரு தாழ்த்தப்பட்டவர் இந்து அறநிலையத்துறை அமைச்சராக
இருந்ததுண்டா.? அல்லது முக்கிய அமைச்சர் பதவியில் இருந்ததுண்டா?.
அல்லது நீதிக் கட்சியை வழிநடத்தும் தலைமையில் இருந்தார்களா? அதற்கு
இராமசாமி நாயக்கர் குரல் கொடுத்தாரா? அப்படிச் செய்தால்தான் நான் இந்த
நீதிக் கட்சிக்குள் இருப்பேன். இல்லை என்றால் விலகி விடுவேன் என்றாரா?
இப்படி ஏதுமே இல்லை. 12 ஆண்டுகள்! சமூக நீதி பற்றி பேசிய நீதிக்
கட்சியின் ஆட்சியில், அதுவும் ஈ.வெ.இராமசாமி அவர்கள் செல்வாக்கு
வைத்திருந்த கட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஒரு அதிகாரத்தையும்
பெற்றுக் கொடுக்கவில்லை.
அடுத்து 1937-க்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தேர்தலில் பங்கேற்கிறது.
இராஜாஜி முதல்வர் பதவிக்கு வருகிறார். அவர் கல்விக் கொள்கையில் எடுத்த
முடிவு, அதனால் ஏற்பட்ட எதிர்ப்பு அனைத்தும் ஏற்புடையதல்ல. ஏற்கவுமில்லை.
அதே நேரத்தில் அவர்தான் தன்னுடைய அமைச்சரவையில் முதன் முதலாக V.M.
முனுசாமி என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை அமைச்சராக்குகிறார்.
அப்போது பழனி கோயிலுக்கு முதல்வர் இராஜியும், அந்த அமைச்சர் முனுசாமியும்
செல்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர் கோயிலுக்குள் வருவதா என்ற எதிர்ப்பு.
அவரையும் அனுமதித்தால்தான் கோயிலுக்குள் வருவேன் என இராஜாஜி.
கடைசியில் அனுமதிக்க வேண்டியதாயிற்று.
இது சனாதனவாதிகளால் பெரும் பிரச்சனையாக வெடித்து காந்தி வரையிலும்
பஞ்சாயத்து சென்றது. அவரும் இராஜாஜியை கேட்கிறார்.
“நாம் வெள்ளையனை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடுகிறோம். சமூகத்தில்
ஒரு அங்கமாக, பெரும்பாண்மையாக தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள்.
அவர்களையும் சேர்த்துக் கொண்டால்தான் சரி. ஆனால் நம்மீது அவர்களுக்கு
அவநம்பிக்கை இருக்கிறது. அதை போக்க வேண்டும். அதற்காக தான் நான் அப்படி
செய்தேன்” என்ற பதிலை கூறுகிறார்.
அதன் பிறகுதான் இந்தியா முழுவதும் ‘‘ஆலய பிரவேசம்” போராட்டம் விரிவு
படுத்த கட்சிக்கு உத்தரவிடுகிறார் காந்தி. அதுவும் கட்சிக்குள் இருந்த
பிராமணர்கள் தலைமையில் அந்த போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடக்க
வேண்டும் என்று.
அதன் பேரில் மதுரை வைத்தியநாதய்யர், திருச்சி ஆலஷியம் அய்யங்கார்
உள்ளிட்ட பல பிரமுகர்கள் தலைமையில் ஆங்காங்கே அப்படியான போராட்டம்
நடத்தப்பட்டது. இதனால் பல பிரமண பிரமுகர்கள், அவர்கள் சாதியில் இருந்த
விலக்கி வைக்கப்பட்ட அநீதிகள் நடந்தது.
பின்னாளில் தலையெடுத்த ‘பெரியாரிய’ கொள்கை அப்படியான பிராமண தலைவர்களை
எல்லாம் துவேசத்தோடவே பார்க்க வேண்டியதாயிற்று. அவர்கள் சாதிக்குள்ளும்
இல்லாமல், இந்தப் பக்கமும் இல்லாமல் போயிற்று அவர்களின் உண்ணதமான
உழைப்பு.
அந்த காங்கிரஸாரின் உழைப்பு, பிராமண தலைவர்களின் தலையில் நடந்த ‘கோயில்
நுழைவு போராட்டம்’ எல்லாம் வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அந்த
போராட்டங்கள் போலி என்றால், பின்னாளில் எழுந்த திராவிட அரசியல்
முழக்கமும் போலி என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். போகட்டும்.
பிறகு 1954 வாக்கில் காங்கிரஸ் கட்சி சார்பாக பெருந்தலைவர் காமராசர்
முதல்வர் பதவிக்கு வருகிறார். அவரது அமைச்சரவையில் பரமேஸ்வரன் என்ற
தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை ‘இந்து அறநிலையத்துறை’ அமைச்சராக நியமித்தார்.
எந்த கோயிலுக்குள் அவர்கள் நுழையக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்ததோ, அதே
கோயில்களுக்கான துறை அமைச்சராக உள்ளே நுழைந்தார். இந்த பெருமை மிக்க
செயலை காமராஜர் எங்கேயும் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை.
அதன் மூலம் வாக்கு அரசியலையும் செய்யவில்லை. சத்தமின்றியே நடந்தது அவரின் புரட்சி.
அதே போன்று உள்துறை, பொதுப்பணி துறை உள்ளிட்ட அதி முக்கிய துறைகளை
‘கக்கன்’ என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தியாகிக்கு கொடுத்து
கொண்டாடினார். எங்கேயும் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை.
அதன் பிறகு 1967-ல் ‘சமூக நீதி’ புரட்சி! பேசி அதன் மூலம் அதிகார
பீடத்திற்கு வந்தது திராவிட கட்சிகள். தி.மு.க என்றும், அ.தி.மு.க
என்றும் மாறி மாறி கடந்த 50 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து விட்டார்கள்.
‘பெரியார்’ இருந்த போதே அண்ணா, அடுத்து கருணாநிதி முதல்வர் பதவியில்
அமர்ந்தார்கள். அப்போதாவது பெரியார் சொல்லியிருக்கலாம், ஒரு
தாழ்த்தப்பட்டவரை, இந்து அறநிலையத்துறைக்கோ, அல்லது உள்துறை அமைச்சர்
பதவியிலோ போடுங்கள் என்று. ஒரு வேளை பெரியார் சொல்லி, அதை அவரின் ‘கொள்கை
வழி தம்பிகள்’ கேட்கவில்லையா? தெரியவில்லை.
இதுதான் திராவிடவாதிகள் பேசிவந்த ‘சமூக நீதி’யின் அவலம்.!
எங்களுக்கெல்லாம் ‘பார்ப்பண துவேசத்தை’ சொல்லிக் கொடுத்து, அவர்களின்
தியாகத்தை இருட்டடிப்பு செய்து கொண்டு நீங்கள் மட்டும் அதே
பார்ப்பணர்களை, ‘சமூக நீதிகாத்த வீரங்கணைகளாக’ பார்த்தீர்கள்.
உங்கள் வீட்டு ஆலோசணைகளுக்கும், அதிகார தரகுக்கம் பார்ப்பண தலைமை
தேவையாக்கிக் கொண்டீர்கள். கேட்டால் கொள்கை வேறு. நட்பு வேறு என
குழப்பியடித்தீர்கள்.
இறுதி வரை எங்கள் வீட்டுப் பெண்களுக்குத்தான் தாலியறுப்பு புரட்சியை
செய்தீர்கள். உங்கள் வீட்டுப் பெண்களுக்கு தாலியறுத்துக் கொள்ளவில்லை.
மஞ்சள் கயிறு, மாங்கல்யமாக கோயிலை சுற்றிவர வீட்டீர்கள்.
உங்களின் வாரிசுகளுக்கு, உலகத் தலைவர்களின் பெயர்களை எல்லாம் வைத்து
கொண்டாடிய நீங்கள், கடைசிவரை டாக்டர் அம்பேத்கரின் பெயரை மறந்துகொண்டே
இருக்கிறீர்கள். அது அவர்களுக்கான பெயர் மட்டுமே?
எத்தனை திராவிட தலைவர்களின் பிள்ளைகளுக்கு டாக்டர் அம்பேத்காரின் பெயரை
வைத்திருக்கிறீர்கள்? அதுதான் உங்களின் சமூக நீதிப் பார்வை. அவ்வளவுதான்
உங்களின் ‘பெரியார் கொள்கை’!
பெரியாரின் கொள்கைகளை மேடையில் முழங்கிக் கொண்டே ‘சாதிக்குள்ளேயே
திருமணம்’ என சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள் இன்றும்.
அதனால்தான்,
`பெரியாரின் இந்த புரட்சி தான் கேரளாவில் வெடித்து மலர்ந்தது’ என்று
வெட்கமில்லாமல் சொல்லிக்கொள்ளாதீர்கள் என்கிறோம்..!
(இதில் இடம்பெற்றிருக்கும் பல கருத்துகள் வைக்கம் போராட்டத்தில்
பெரியாரின்- காங்கிரஸ் கட்சி பங்கு குறித்தும் அக்கட்சியின் மூத்த
நிர்வாகியும் செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுசாமி பட இடங்களில்
பேசியும் இருக்கிறார்.)
-பா.ஏகலைவன்.
பத்திரிகையாளர்
8939899113

திராவிடம் திராவிட கட்சிகள் பார்ப்பனர்

https://www.linesmedia.in/சாதித்த-பினராயி-விஜயனும்/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக