வெள்ளி, 22 டிசம்பர், 2017

பாணர் பட்டங்கள் பெயர்கள் இசைக்குடி பறையர் பறை பாவாணர்

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
எடுத்து அடிடா என் பாட்டன் பறையை..
இலக்கு 50 ல் # பதிவு_48 ... இனையத்தில் எங்கும் கிடைக்கப்பெறாத #
பறை_பாணர் பற்றிய # பாவாணர் கட்டுறை. முத்தமிழில் இசைத்தமிழ்,
நாடகத்தமிழ் வளர்த்த என் தாய் தமிழ் உறவுகளுக்கு சமர்ப்பனம்....
++++++
(பண்--->பாண்--->பாணர்):-
(தமிழ்நாட்டின் பழங்குடிகளுள் ஒரு
பிரிவினர். “பாணன், பறையன் துடியன்,
கடம்பனென்றி ந்நான்கல்லது குடியுமில்லை”
என்று (புறநா.335.) பழஞ் செய்யுள்
கூறுகின்றனது.
பாணர்களில் # ஆண்பாலரைச்
1.சென்னியர்,2.வயிரியர்,3.செயிரியர், 4.மதங்கர்,
இன்னிசைகாரர் பாணரென்ப’ என்று பிங்கல
நிகண்டும்,
# பெண்பாலரைப்’ 1.பாடினி, 2.விறலி,
3.பாட்டி, 4.மதங்கி, பாடல் மகடூஉ
பாண்மகளாகும்ஷ எனத் திவாகரமும்
கூறும்.
பண்ணிசைப்போர் பாணர்.
இவர்கள் இசைப்பாணரும், யாழ்ப் பாணரும்,
மண்டைப் பாணரும் என மூவகையினர்
எனத் தொல்காப்பியப் பொருளதிகார
உரையில் நச்சினார்க்கினியர் கூறுகின்றனர்.
---------(தொல்.பொருள்.91)
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அல்லது
திராவிடக் குலங்களுள் பாணர் குலமும்
ஒன்று. இது மிகப் பழமையான தென்பது
தொல்காப்பயித்தாலறியப்படும்.
பாணர் பாணைத் தொழிலாகக்
கொண்டவர். பாண் என்பது பாட்டு, பண்,
பாண், பாடு. பா என்பவை ஓரினச்
சொற்கள். சீவகசிந்தாமணியில் பாணியாழ்
(1500) பாண்வலை (2040) பாணுவண்டு (2447)
என்னும் தொடர் மொழிகளில் பாண்
என்னும் சொல் பாட்டு என்னும் பொருளில்
வந்துள்ளது.
சிலப்பதிகாரத்தும் (ப.349) பாண்-
பாட்டு என்று அடியார்க்குநல்லார்
கூறியுள்ளார்.
“பாணருளும் இசைப்பாணரும்
யாழ்ப்பாணரும் மண்டைப் பாணருமெனப்
பலராம்” என்று (தொல்.புறம்.36,உரை)
நச்சினார்க்கினியர் கூறுவர்.
இசைக்கருவிகள்: 1.தோற்கருவி,
2.துறைக்கருவி, 3.நரப்புக்கருவி, 4.கஞ்சக்கருவி,
5.மிடற்றுக் கருவி என் ஐவகையாகக்
கூறப்படும்.
இவற்றுள், மிடறு (தொண்டை)
என்பது இயல்பான வாய்ப்பாட்டாதலின்
இதனை நீக்கி ஏனைய நான்கையுமே
கருவியெனக் கூறுவர் சிலர்.
இந்நான்களுள்
கஞ்சம் (வெண்கலம்) தாளக்கருவி. இது
முதலிற் கருவிபற்றி வெண்கலத்தாற்
செய்யப்பட்டதையும், பின்பு
இனவிலக்கணத்தாற் பிறவற்றினால்
செய்யப்பட்டவற்றையும் குறிக்கும்.
தாளக் கருவியும் தனித்து இன்பம் தாராமையானம் அது முக்கியமானதன்று.
மேற்கூறியபிரிவாருள்
1.இசைப்பாணர் வாயப்பாடகரும்,
2.யாழ்ப்பாணர் நரப்புக்கருவியினரும்,
3.மண்டைப்பாணர் தோற்கருவியினரும
ாவர்.
துளைக்கருவி இயக்கும் குழற்பாணர்
மண்டைப் பாணருள் அடங்குவர். மண்டை-
பறை, குழலொடுகூடிப் பறையடிப்பதே
பெருவழக்கு.
இனி. நச்சினார்க்கினியர்
பாணரை மூவகையார் என்னாது பலர்
என்றதால், அதனுட் குழற்பாணரை
அடக்கினும் அமையும் சிலப்பதிகாரத்தில்,
“குழலினும் யாழினுங் குரல்முத
லேழும்
வழுவின் றிசைத்து வழித்திறங்
காட்டும்
அரும்பெறன் மரபிற் பெரும்பா
ணிருக்கையும்”
என்று இளங்கோவடிகளும்,
‘பெரும் பாண்-குழலர் முதலோர்’
(ப.139) என அரும்பதவுரைகாரரும்
கூறியிருப்பதால் குழற்பாணர் பிரித்துக்
கூறப்பட்டிலர்.
ஆகவே, இசைத்தொழில்
முழுமையுங்கொண்டு இக்காலத்து மேளக்
காரர்போல இருந்தவர் பணார் என்பது
பெறப்படும். “பாண்சேரிப் பற்கிளக்குமாறு’
என்னும் பண்டைப் பழமொழியும் இதனை
வற்புறுத்தும்.
திருவிளையாடற்
குராணத்திற் பாண்டியன் இசைப்புலவராகக்
கூறப்படும் பாணபத்திரரும்,
திருஞானசம்பந்தம் தேவாரப் பதிகங்கட்கு
யாழ் வாசித்த திருநீலக்கண்ட
யாழ்ப்பாணரும், பன்னீராழ்வாருள்
ஒருவரும் யாழறிஞருமான
திருப்பாணாழ்வாரும் பாணர் குலத்தவரே.
பாணருள், ஆடவன் பாணன் என்றும்,
பெண்டு, பாடினி, பாணிச்சி, பாட்டி, விறலி
என்றுங் கூறப்படுவர்.
வேளாளர் குலம் வேளாண் என்றும்,
சமணர் நெறி சமண் என்றும் கூறப்படுதல்
போல, பாணர் குலமும் பாண் என்று
கூறப்படுவதுண்டு. புறப்பொரள் வெண்பா
மாலையில்:,
“கிளை பாய்ந்து பண்ணிய
கேள்வியாழ் பாணும்” (சூ.144)
“அங்கட் கிணையன் துடியள்
விறலிபாண்” (சூ.16)
“பண்பாட்டு”
(சூ.137)
“பாண்கட னிறுக்கும்”
(புறம்.203)
என வந்திருத்தல் காண்க.
பாணருக்கும் சென்னியர், வயிரியர்,
செயிரியர், மதங்கர், இசைகாரர், பண்ணவர்,
(பண்டவர்). ஓவர், அம்பணவர் முதலிய பிற
பெயர்களுமுண்டு. இவற்றுள் பண்டர், ஓவர்
என்பன பாணருட் கீழ்மக்களைக்
குறிக்குமென்று பிங்கல நிகண்டு கூறும்.
மதங்கன்,அம்பணவன் என்னும் ஆண்பாற்
பெயர்கட்கு மதங்கி, அம்பணத்தி என்பன
முறையே பெண்பாற் பெயர்களாகும்.
அம்பணம் = யாழ் வாசிப்போன்.
“அரும் பெறன் மரபிற் பெரும்
பாணிருக்கையும்” என்று சிலப்பதிகாரத்தும்
“பெரும்பாணிருக்கையும்” என்று மதுரைக்
காஞ்சியிலும் (942) “அருட் பெரும்
பாணணாரை” என்று திருநீலகண்ட
யாழ்ப்பாணர் புராணத்தும் (3)
சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை எனப் பத்தும்
பாட்டினும் வந்திருப்பது கொண்டு,
சிறுபாணர், பெரும்பாணர் எனப்பாணர்
இருபெரும் பிரிவினரோ என்று ஐயுறவும்
இடமுண்டு.
பத்துப்பாட்டு முகவுரையில்,
“மேலைப் பாட்டும் (சிறுபாணற்றுப்
படையும்) இதுவும்
(பெரும்பாணாற்றுப்படையும்) பாணராற்றப்
படையாயிருப்பினும், அடிவரையறையிற்
சிறிதும் பெரிதுமாயிருத்தல் பற்றி அது
சிறுபாணாற்றுப் படையெனவும் இது
பெரும்பாணாற்றுப்படையெனவும் பெயர்
பெற்றன” என டாக்டர் உ.வே.சாமிநாதையர்
அவர்கள், எழுதியிருப்பது தெளிவான
தேயாயினும், பெரும்பாண்பெரும்பாணர்
என்று நூல்களில் வழங்குவதாலும்
சிறுபாணாற்றுப்படையில்.
“பொன்வார்ந் தன்ன புரியடங்கு
நரம்பின்
இன்குரற் சீறியாழ் இடவயின் தழீஇ”
எனச் சுருக்கமாகவும் சீறியாழ். (சிறு+யாழ்)
என்னும் பெயருடனும்,
பெரும்பாணாற்றுப்படையில் பச்சை, துளை,
போர்வை, வாய் கவைக்கடை, திவவு,
மருப்ப, நரம்பு முதலிய
உறுப்புகளையுடையதாக விரிவாகப்
பதினாறடிகளினும் யாழ்
கூறப்படுவதலானும், சிறுபாண் பெரும்பாண்
என்பவை கருவிபற்றிய குலப்பிரிவோ
என்னும் ஐயம் முற்றும் அகன்றபாடில்லை.
சென்னைப் பல்கலைக்கழக அகராதியினும்
பெரும்பாணர் பாணருள் ஒரு பிரிவினர்
எனக் குறிக்கப்பட்டுள்ளது.
பாணர் வாய்ப்பாட்டும் கருவியமாகிய
இருவகை இசையினும்
வல்லவராயிருந்தனர்.
சிலப்பதியாரத்திலுள்ள ‘பாடற் பாணர்’
(அந்தி.186) ‘குரல்வாய்ப் பாணர்’ (200)
என்னுந் தொடர்கள் வாய்ப் பாடகரைக்
குறிக்கும்.
கருவிகளில் தோற்கருவிகளெல்லாம்
# பறை என்னும் பொதுப் பெயராற்
குறிக்கப்படும் தொல்காப்பியத்தில்.
“தெய்வம் உணாவே மாமரம் புட்
பறை” (தொல்)
என்னும் கருப்பொருட் சூத்திரத்துள்ளும்,
“அனிச்சப்பூக் கால்களையாள்
செய்தாள்
நுகப்பிற்கு நல்ல படாஅ பறை”
-----(குறள்.115)
என்னும் திருக்குறளினும் பறை என்பது
தோற்கருவிப் பொதுப் பெயராயுள்ளமை
காண்க. ‘மணப்பாறை” ‘பிணப்பறை’,
‘பறைசாற்றினான்’ முதலிய வழக்குகளில்
பறை என்பது பல்வேறு தோற்கருவிகளைக்
குறித்தது.
பறைகளை அடிப்பவர் # பறையர்
எனப்பட்டனர். இப்பெயர் இக்காலத்துப்
பிணப்பறை யறைபவரை மட்டுங்
குறிக்கின்றது. பண்டைக் காலத்தில்
மண்டை என்னும் பெயர் பறைக்கு
வழங்கிவந்த மறுபெயராகும்.
பறைகளடிக்கும் பாணர் மண்டைப்பாணர்
எனப்பட்டனர். மண்டையோடு போன்று
மண். மரம், பித்தனை முதலியவற்றறாற்
செய்து தோற்கட்டிய பறைகளை
மண்டையென்றது ஒருவகை உவமையாகு
பெயர்.
மண்டையென்பது இக்காலத்தில்
மொந்தையென்று திரிந்து அவ்வடிவாயுள்ள
மட்கலயத்தைக் குறிக்கின்றது. தவலை
என்பதன் மறுவடிவாகிய தபேலா என்னும்
இந்துத்தானிச் சொல் ஒரு
நீர்ப்பாத்திரத்தையும் ஒரு பறையையும்
குறித்தல் காண்க. கோவில் மேளத்தைக்
குறிக்கும் தகல்(தவுல்) என்னும் பெயரும்
இதன் திரிபுபோலும்.
பல்வகைப் பறைகளையும்
அடித்துக்கொண்டு ஒரே குலமாயிருந்த
மண்டைப்பாணர் பிற்காலத்துத் தொழில்,
கருவி, ஒருக்கம் முதலியவற்றின்
வேறுபாட்டால் பல்வேறு பிரிவாய் பிரிந்து
போயினர்.
“துடியன் பாணன் பறையன்
கடம்பன்என் றிந்நான் கல்லது குடியுமில்லை:
(புறம்.335)
என மாங்குடிகிழார் தொழிற் குடிமக்களை
நால்வகைப்படுத்துக் கூறியுள்ளனர். துடி
உடுக்கு.
++++++++
இன்னும் இரண்டு பதிவுகளோடு நிறைவடையும், ப"றை"யர் 50 பதிவுகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக