வெள்ளி, 22 டிசம்பர், 2017

கூட்டு வேளாண்மை ஊடுபயிர் சுழற்சிமுறை புதுமுயற்சி யோசனை விவசாயம்

aathi tamil aathi1956@gmail.com

அக். 13
பெறுநர்: எனக்கு
மேகநாதன் முனுசாமி
வணிகத்தில் மட்டும் கூட்டணி அல்ல விவசாயத்திலும் கூட்டணி இருந்தால் லாபம் ஈட்டலாம்.
=================================
"ஒன்றாக வளரக்கூடிய கூட்டுப்பயிர்கள் "
ஒவ்வொரு பயிருக்கும் கூட்டாளிங்க கூட்டம் இருக்கு. இந்தக் கூட்டாளி
யாருனு தெரிஞ்சா உங்க காட்டுலயும் லாப மழை பொழியும்
மாந்தோப்பு:
வெங்காயம், தக்காளி, பப்பாளி, கொய்யா மற்றும் காலிஃப்ளவர் போடலாம்.
வாழைத் தோப்பு:
கருணைக்கிழங்கு, வெள்ளரி, செவந்திப் பூ, கத்திரி மற்றும் மிளகாய் போடலாம்.
பலா தோப்பு:
கத்திரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பயறு வகைகள் விதைக்கலாம்.
கொய்யா தோப்பு:
தட்டப் பயறு, பட்டாணி, பீன்ஸ் மற்றும் பயறு வகைகள் பயிரிடலாம்.
சப்போட்டா தோட்டம்:
தட்டப்பயறு, துவரை மற்றும் கொத்தவரை சாகுபடி செய்யலாம்.
தென்னந்தோப்பு:
தென்னை சாகுபடி செய்யும்போது, கூடவே, பாக்கு மரத்தையும் நட்டு வைங்க.
பாக்கும், தென்னையும் அண்ணன், தம்பி மாதிரி.
தென்னை மரத்தைத், தவிர, காலியாயிருக்கற இடத்துல மகோகனி, வேங்கைனு
விதவிதமா வளர்க்கலாம்.
கம்பு தோட்டம்:
துவரை, எள், தட்டைப்பயறு கலந்து விதைக்கலாம்.
கரும்பு தோட்டம்:
உளுந்து, தட்டைப்பயறு விதைக்கலாம்.
சுடர்
19 மணி நேரம் · பொது
நீங்கள், சபரி நாதன் மற்றும் 25 பேர்
Kumarimainthan Perianadar
அக்கம்பக்கத்து நிலவுடைமையாளர்களை அணுகி 100, 200 ஏக்கர் அளவில் ஒரு
கூட்டுப் பண்ணை அமைத்து அவர்களிடமிருந்த
ோ பிறரிடமிருந்தோ மூலதனம் பெற்று அதனை ஒரு சிறிய பங்கு நிறுவனமாக பதிந்து
அதில் நீர்வளத்துக்கு ஏற்ப பயிர்கள் வளர்த்து விளைபொருட்களைப் பகுதி
முடிந்த பொருட்களாக்கிச் சந்தைக்கு விடலாம். ஆட்டு மாட்டுத்
தொழுவஙகளையும் அறிவியல் முறைப்படி உருவாக்கி பால் முதல் சாணம் இறைச்சிவரை
அதே போல் வருமானமாக்கலாம். ஒரு சிறு குளம், அதிலிருந்து மீன்வளம் மட்காத
குப்பைகளிலிருந்து ஒரு சிறு குன்று அதில் முருங்கை, இலவு போன்ற
மென்மரங்கள் வளர்த்து காசு பார்பதோடு நிலத்தடி நீரையும் மேம்படுத்தலாம்.
10% பரப்புக்குக் குறையமல் காடு, அதில் மா, முந்திரி போன்ற
பயன்மரங்களையும் தேக்கு தோதகத்தி, கோங்கு வேங்கை போன்ற தடிமரங்களையும்
வளர்க்கலாம். அண்மையிலுள்ள பண்ணைகளின் காட்டுப்பகுதிகளை அண்டை இடங்களில்
வருமாறு இணைத்தால் மான் முயல் போன்றவற்றை வளரவிட்டு அறுவடை செய்யலாம்.
காட்டுப் பகுதியில் வற்றாதவாறு நீர்த்தொட்டிகளை வைத்தால் நீர் குடிக்க
வரும பறவைகள் இடும் எச்சத்தால் பன்மரப் பெருக்கம் கட்டுக்கடங்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக