வெள்ளி, 22 டிசம்பர், 2017

தமிழ்நாடு பெயர்மாற்றம் தீர்மானம் 1962 1964 தள்ளுபடி 1968 ஆனது சங்கரலிங்கனார்

aathi tamil aathi1956@gmail.com

அக். 14
பெறுநர்: எனக்கு
வரலாறு அறிவோம்: மதராசு மாகாணத்தை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றக் கோரி 73
நாட்கள் பட்டிணிப் போராட்டம் நடத்திய தியாகி சங்கரலிங்கனார் உயிரீகம்
செய்த நாள் 13 அக்டோபர் 1956.

இன்று தமிழ் நாடு என்று பெருமையுடன் நாம் அழைப்பதற்கு காரணம் யார் தெரியுமா??

தியாகி சங்கரலிங்கனார்!

மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு
”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட
ஒரு போராளி.

76 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன்
உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர்  விருதுநகரை அடுத்த மண்மலை மேடு
ஊரைச் சார்ந்தவர்.

காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 ஜூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் அவர்.
தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும்.
சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும்.
அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப் போல்
வாழ வேண்டும்.
தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும்
மதுவிலக்கு என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன் ஜூலை 27ந்தேதி சூலக்கரை
மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.அப்போது அந்த இடம்
விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால்
பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் விருதுநகர் தேசபந்து
மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அப்போதிருந்த காங்கிரஸ் அரசு
சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.

அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த
ஆரம்பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம்., அண்ணாத்துரை, காமராசர், ஜீவானந்தம்
உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை
விடுத்தனர். இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை.நாளாக நாளாகச்
சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. விருதுநகருக்குச் சென்று அவரைச்
சந்தித்துப் பேசினார் அண்ணா. அப்போது தொடர்ந்து மூன்று கடிதங்களை
எழுதினார் சங்கரலிங்கனார்.

“பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாகத் தவறான வழியில், கண்மூடித்தனமாகப்
போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன்
இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்” என்று ‘எச்சரிக்கையுடன்’
எழுதியிருக்கிறார்.

76 நாட்கள்வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. அக்டோபர் 10ந் தேதி அன்று
நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச்
செல்லப்பட்டார். 13.10.1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது.அப்போது
சென்னை மாகாணத்தில் இந்தச் செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு
அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக்
கோரிக்கைகளை முன்வைத்தன.

1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி
மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து
1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டத்
தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.

1967ல் ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக
மாறியது. 1968 சூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர்
மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு
பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இதையடுத்து 1.12.1968ல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக்
கொண்டாடப்பட்டபோது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்"
தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக