வெள்ளி, 22 டிசம்பர், 2017

மருதம் சொல்லாய்வு திணை வேர்ச்சொல் மருது மல்


aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு
அழகன். விம , 4 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
மருதம் பெயர் காரணம்:
மல் = வளம். "மற்றுன்றுமாமலர
ிட்டு" (திருக்கோ.178)
மல் - மல்லல் = 1. வளம் ."மல்லல்வளனே." (தொல்.788). 2. அழகு.
"மல்லற்றன்னிறமொன்றில்" (திருக்கோ.58, பேரா.) 3.பொலிவு(சூடா.).
மல் - மல்லை = வளம். "மல்லைப்பழனத்து
" (பதினொ. ஆளுடை. திருவுலா.8).
மல் - (மர்)-மருது=ஆற்றங்கரையும்பொய்க
ைக்கரையும் போன்ற நீர்வளம் மிக்கநிலத்தில் வளரும் மரம்.
ஒ.நோ: வெல் - வில்-(விர்) - விருது =வெற்றிச் சின்னம்.
"பருதி.....விருது மேற்கொண்டுலாம்வ
ேனில்"
(கம்பரா. தாடகை.5)
மருது - மருதம் = பெரிய மருது, மருது, மருதமரம் வளரும் நீர்வள நிலம்,
வயலும் வயல் சார்ந்தஇடமும், நீர்வளமும் நிலவளமும் மிக்க அகநாடு.
"அறலவிர் வார்மணல் அகலியாற் றடைகரைத்
துறையணி மருது தொகல்கொள வோங்கி"
(அகம். 97)
"வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரின்"
(புறம்.52)
"பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
தேங்கொண் மருதின் பூஞ்சினை முனையின்
காமரு காஞ்சி துஞ்சும்
ஏமஞ்சால் சிறப்பினிப் பணைநல் லூரே."
(புறம்.351)
"மருதுயர்ந் தோங்கிய விரிபூம்பெருந்த
ுறை"
(ஐங்.33)
"கரைசேர் மருத மேவி"
(ஐங்.74)
"திசைதிசை தேனார்க்குந் திருமருதமுன்றுறை"
(கலித்.27)
"மருதிமிழ்ந் தோங்கிய நளியிரும் பரப்பின்
மணன்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு"
(பதிற்.23)
"வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை"
(சிலப்.14:72)
"......................................................காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த"
(குறுந்.258)
இம் மேற்கோள்களிலெல்லாம்,மருதமரம் ஆற்றையும் பொய்கையையும்
வயலையுமேஅடுத்திருந்ததாகக் கூறப்பட்டிருத்தல் காண்க.
(தமிழர் வரலாறு பாவாணர் பகுதி-1 பக்கம் 101,102).
நீர் வளம் மிக்கம் இடத்தில் வளரும் மரத்தின் இயற்பெயர் மருதம்.மருத
மரத்தின் பெயர் அம்மரம் வளரும் வயல்வெளி சார்ந்த இடத்திற்கு ஆகி வந்தது
இடவனாகு பெயராகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக