வெள்ளி, 22 டிசம்பர், 2017

கோசர் தமிழர் போர்க்குடி வேளிர் உடன் பகை இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N மற்றும் தமிழன் நந்தா உடன் உள்ளார்.
# பதிவு_8 .. பாவாணர் கட்டுறை... (வேளிர்_கோசர்_செங்குந்தர்_கைகோளர்)
கோசர் மட்டுமன்றி உண்மை சொல்வோரெல்லாம் வாய்மொழிவாயர் எனப்படுவர்.
"வாய்மொழிவாயர் நின்புகழேத்த" என்று பதிற்றுப்பத்துள் வருதல் காண்க (37,
2).
கோசர் பலவிடத்துப் பிறரால் வெல்லப்பட்டமை பண்டை இலக்கியத்தினின்
தெரியவருதலால், "அந்நியராற் கொல்லப்படத் தக்க எளியரல்லர்" என்று கூறுவது
பொருந்தாது, அவரெல்லாரும் அத்தகைய வலியரெனின், மூவேந்தர் அவர்முன்
எங்ஙனம் நாடாண்டிருக்க முடியும்?
இளையரே பொருதற்குச் சிறந்தவராதலாலும், 'இளையர், மழவர்' முதலிய
இளமைகுறித்த பெயர்கள் போர்மறவர்க்குப் பழஞ்செய்யுட்களுள் வருவதாலும்,
இளைஞரான கோசரே, இளங்கோசர் என்னப்பட்டனரென்றும், அவருள் மூத்துப் போர்த்
தொழிலினின்றும் நீங்கி இக்காலத்து ஓய்வுபெற்ற பொருநர் (ex-service men)
போல் ஊர்க்குள் வதிந்தவரே "ஊர்முது கோசர்" என்னப்பட்டனர் என்றும்,
கொள்வதே மிகப்பொருத்தமாம்.
கோசர் தமிழரே என்பது இதுகாறும் கூறியவற்றால் தெரிதலால்,
1.பழையன், 2.அதகன், 3.ஞிமிலி, 4.அகுதை, 5.திதியன், 6.குறும்பியன்,
7.ஆதனெழினி, 8.தழும்பன் முதலிய குறுநிலமன்னரும் படைத்தலைவரும் பொருநரும்
தமிழரே என்று தெளிக. அவர் பெயரெல்லாம் தூய தமிழ்ச்சொல்லா யிருத்தலையும்,
அவர் என்றேனும் வேற்றுமொழி பேசியதாக எங்கேனும் சொல்லப்படாமையும்,
நோக்குக.
எத்தொழிலையும் இருவகுப்பார் செய்துவரின், அவர்க்குள் இகலும் இசலிப்பும்
ஏற்படுவது இயல்பே. கோசர்க்கும் வேளிர்க்கும் போர்த்தொழில் ஓரளவு
ஒத்திருந்தமையின், அவரிடைச் சிறிது பகைமை ஏற்பட்டிருக்கலாம்.
இதுபற்றிக் கோசரை வடநாட்டாரெனக் கொள்வது பொருந்தாது. ஆரிய வருகைக்குமுன்
நாவலந்தேய முழுவதும் தமிழரும் அவர் வழியினரான திரவிடருமே
குடியிருந்ததினால், வேளிரைப்போன்றே கோசரும் பனிமலை (இமயம்)வரை
பரவியிருந்திருக்கலாம். ஆதலால், கோசம் என்னும் சூள்முறையை வடநாட்டார்
கையாண்டமை, அதன் அயன்மையைக் காட்டாது.
கோசர்க்கும் வேளிர்க்கும் போர்த்தொழில் ஓரளவு பொதுவாயிருந்த தேனும், அது
கோசர்க்கே சிறந்திருந்தமை
"இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கட் கோசர்"
(அகம். 90)
"வளங்கெழு கோசர் விளங்குபடை"
(அகம். 205)
"... ... ... ... ... ... ... ... ... ... வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலின ரெறிந்த அகலிலை முருக்கிற்
பெருமரக் கம்பம் போல"
(புறம். 169)
"மெய்ம்மலி பெரும்பூட் கோசர்"
(அகம். 15)
"கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்"
(மதுரைக். 778)
"அமர்வீசு வண்மகிழ் அகுதைப் போற்றிக்
காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர்"
(அகம். 113)
"... ... ... ... ... ... ... ... ... வெல்கொடித்
துனைகா லன்ன புனைதேர்க் கோசர்"
(அகம். 251)
என வருபவற்றால் அறியப்படும்.
இதனால், கோசர்
"உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது"
(762)
என்னுங் குறட்கு இலக்கான மூலப்படையைச் சேர்ந்த அல்லது தொல்வரவான பூட்கை
மறவரும், படைத்தலைவருமாவர். # வேளிர் உழுவித் துண்ணும் வேளாண்
வகுப்பைச்சேர்ந்த குறுநில மன்னரும் பண்ணையார் (மிராசுதார்) என்னும்
பெருநிலக் கிழாருமாவார்.
இனி, கோசர், அத்திகோசம் (யானையெறிகோசம்), வீரகோசம் (ஆளெறிகோசம்) என
இருவகையராகவும் சொல்லப் பெறுவர். படைக்குச் சிறந்ததும் விலங்கிற்
பெரியதும் யானையென்று கொண்டு, அதனையே போர்க்களத்தில் எறிந்துகொல்வோர்
யானையெறிகோசத்தார். அஃது ஒரு விலங்கென்று இழித்து மறவரையே கொல்வோர்
ஆளெறிகோசத்தார்.
"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது"
(குறள். 772)
"கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்"
(குறள். 774)
"வேந்தூர் யானைக் கல்ல
தேந்துவன் போலான்றன் இலங்கிலை வேலே"
(புறம். 301)
"கறையடி யானைக் கல்ல
துறைகழிப் பறியா வேலோன் ஊரே"
(புறம். 323)
"ஆனை யாயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி"
(இலக். வி. 839)
என்பன யானையெறி கோசத்தானைப் பற்றியன.
"தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால்
யானை யெறிதல் இளிவரவால்-யானை
ஒருகை யுடைய தெறிவலோ யானும்
இருகை சுமந்து வாழ்வேன்"
(தொல். புறத்திணை. 5 உரை)
என்பது ஆளெறி கோசத்தானைப்பற்றியது.
இச்செய்யுட்களெல்லாம் தமிழ் # மறவருட் சிறந்தாரைக் குறிப்பதல்லது. ஒரு
வேற்றுநாட்டு வகுப்பாரை விதந்தோ கிளந்தோ குறியாமை காண்க.
++++
தமிழ்தேசிய # பாலை_வாணர் கூட்டமைப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக