வெள்ளி, 22 டிசம்பர், 2017

கோசர் கோளர் கைகோளார் செங்குந்தர் பாவாணர் அம்பாசமுத்திரம் இளங்கோய்க்குடி

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N மற்றும் தமிழன் நந்தா உடன் உள்ளார்.
# பகுதி-5 (செங்குந்தர்_கைகோளர்)
# கோசர் கட்டுறை @# பாவாணர்...
பெரும்புலவர் ரா. இராகவையங்கார், இடங்கை வலங்கை என்பன படைவகுப்புகள்
என்றும், அவற்றைச் சேர்ந்த கோளர் கைக்கோளர் என்னப்பட்டனர் என்றும்
கூறுவர். இடங்கை வலங்கை என்பன படை வகுப்புகளேயன்றி, அரசன்
அமர்ந்திருக்கும
்போதும் செல்லும்போதும் இடத்திலும் வலத்திலும் இருக்குமாறும்
செல்லுமாறும் குறிக்கப்பட்ட குலங்களையே குறித்தலானும், இடங்கையைச்
சேர்ந்தவர் வலங்கையையும், வலங்கையைச் சேர்ந்தவர் இடங்கையையும்
சேராமையானும், அது பொருந்தாதென்க.
கை என்பது படைவகுப்பாதலின், உறுதியான ஒழுக்கத்தைக் கைகொண்டவர் கைக்கோளர்
என்பதும் பொருந்தாது.
"அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்"
(குறள். 501)
என்னும் முறைபற்றியோ, வேறுவகையிலோ, # மறம் உண்மை பணிவு நன்றியறிவு,
அன்பு, கடைப்பிடி, வலிமை முதலிய பண்பிற் சிறந்தவராக வேந்தரால்
தெரிந்தெடுக்கப்பெற்ற கைக்கோளர், தெரிந்த கைக்கோளர் என்னப்பட்டனர்.
"பராந்தகன் தெரிந்த கைக்கோளர்,"
"சுந்தரசோழர் தெரிஞ்ச கைக்கோளர்",
"பாண்டிய குலாசனி தெரிஞ்ச கைக்கோளர்"
எனக் கல்வெட்டில் வருதல் காண்க.
அரசரின் முழு நம்பிக்கைக்குரி
யவராயிருந்த கைக்கோளர் அரண்மனையிலும் உவளகத்திலும் அகப் பரிவாரமாகவும்
அமர்த்தப் பெற்றனர் என்பது,
"நம்பிராட்டியார் நேரியன் மாதேவி
யகப்பரிவாரத்துக் கைக்கோளன் சோறுடையா
னருக்கனான அன்பார பாணதி ராயன்"
(S. I. I. Vol. No, 700) எனவரும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம்.
கோளர் குடியிருந்த பல வூர்கள் அவர் குடியாற் பெயர் பெற்றிருந்தன.
கொடுங்குன்றத்திற்கு அருகில் திருக்கோளக்குடி என்றொரு மலையடியூர்
உளதென்றும் "கோளர் இருக்குமூர் கோள்களவு கற்றவூர்" என்றும்
காளமேகப்புலவர் தனிப்பாட்டில் 'கோளர்' என்பது குடிப்பெயர் என்றும்,
பெரும்புலவர் ரா. இராகவையங்கார் கூறுவர்.
பாணன் என்னும் குடிப்பெயர் பாண் என்று குறுகுவதுபோல், கோளன் என்னும்
குடிப்பெயரும் கோள் என்று குறுகும். இக் குறுக்கம் பெரும்பாலும்
பாண்சேரி, கைக்கோட் படை எனப் புணர்மொழிப் பெயர் களிலேயே நிகழும்.
"இப்படிச் சம்மதித்து விலைப்பிரமாணம் பண்ணிக் கொடுத்தோம் ஆதிசண்டேச்சுர
தேவர்க்கு, திருநெல்வேலிக் கைக்கோட் சேனாபதிகளோம்." (S.I.I. Vol.V No,
118) எனவரும் கல்வெட்டுப் பகுதியைக் காண்க.
சில சொற்களில் ளகரம் சகரமாகத் திரிகின்றது. இதற்கு உளி-உசி, தூளி-தூசி
என்பன எடுத்துக்காட்டு. இம்முறையில் கோளன் என்பதும் கோசன் எனத்
திரிந்ததாகத் தெரிகின்றது. பின்பு, தேசம்-தேயம் என்பதுபோல் கோசன்-கோயன்
என்றாயிருத்தல் வேண்டும். பாண், கோள் என்னுங் குறுக்கங்கட்கேற்ப, கோயன்
என்பது கோய் என்று குறுகுதலும் இயல்பே.
"கோயன் பள்ளி என்பது கருவூரையடுத்துள்ளது. இதனாற் கோசன் என்னும் பெயர்
கோயம் என வழங்கப்பட்டதென்று உணரலாம்.
கோயன் புத்தூர் என்பதும் இப்படிப்பட்டதேய
ாம், இக் கோயர்குடி கோய் எனவும் வழங்கப்பட்டதென்பது இளங்கோய்க்குடி என்ற
பெயரான் அறியலாம்.
முள்ளி நாட்டு இளங்கோய்க்குடி (அம்பாசமுத்திரத்தின் பெயர்) என்பது சாசனம்
(Top. List. Tinnevelly Dist. Nos. 28, 29 பார்க்க). "இளங்கோ படையரசன்
முனையதரன்" (S. I. I. VI. No. 538 of 1909) எனத் தஞ்சையைச் சேர்ந்த
கோவலூர்ச் சாசனத்து வருதலான், இக் குடிவழக்குண்மை உணரப்படும்.
திருநெல்வேலியைச் சார்ந்த கடையம் உள்ள நாடு கோய்நாடு என வழங்கப்படும்."
எனப் பெரும்புலவர் ரா. இராகவையங்கார் எழுதி யிருப்பது பொருத்தமே. (கோசர்,
பக். 54, 55)
ஆயின், "கோசர் என்னும் சொல்லே நாளடைவிற் கோளர் என மரீஇயினதென்று
நினையலாம்." (கோசர் பக். 57) என்று அவர் தலைகீழாகக் கூறியிருப்பது
பொருந்தாது. ளகரம் சகரமாகத் திரிதலன்றிச் சகரம் ளகரமாகத் திரிதலில்லை.
தூளி, தூசி என வரு தலும் நினைக" என அவர் எடுத்துக்காட்டியிருப்பதே
அதற்குச் சான்றாம்.
ஆகவே, கோசர் என்று கடைக்கழகச் செய்யுட்களிலும், கோளர் என்று பிற்காலச்
செய்யுளிலும், கைக்கோளர் என்று கல்வெட்டுகளிலும், குறிக்கப்பெற்றவர்
ஒரேவகுப்பினர் என்று துணியத்தகும்.
பண்டைச் செய்யுட்களில் கோசர் என்ற வடிவமே காணப்பெறுவதால், அதுவே
முந்தினதாகும் என்று ஒருபாலர் கருதலாம். உலக வழக்கு செய்யுள் வழக்கினும்
முந்தியதென்றும், செய்யுள் வழக்குச் சொல்லெல்லாம் மூலவடிவத்தைக்
காட்டாவென்றும், தெரிந்துகொள்க.
நீ என்னும் முன்னிலை யொருமைப்பெயரின் மூலவடிவம் நீன் என்பதே யாயினும்,
முன்னதே செய்யுள் வழக்காகவும் பின்னது உலக வழக்காகவும் இருத்தல் காண்க.
(பதிவு 10 ல் இது 5 மீதம் தொடரும்..)
(செங்குந்தர்_கைகோளர் நண்பர்கள் என் பதிவுகளை நன்கு புரிந்து
இருமுறையேனும் தேவை எனில் படிங்க,உங்களை தவறாக இதுவரை குழப்பியவனை
அறிவாயுதம் கொண்டு அடிங்க)
நேற்று, 02:38 PM ·

செங்குந்த முதலியார் கைக்கோளார் கைக்கோளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக