திங்கள், 25 டிசம்பர், 2017

சாதவாகனர் நாணயம் தமிழ் சொற்கள் பொருள்

aathi tamil aathi1956@gmail.com

அக். 15
பெறுநர்: எனக்கு
Logan K Nathan
சாதவாகனர் வெளியிட்ட நாணயங்களில் உள்ளது தமிழா அல்லது தெலுங்கா?
உஜ்ஜைனி முதலிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சாதவாகனர் காலத்து
நாணயங்களில் இருக்கும் மொழி தமிழ் அல்ல என்றும், அது தெலுங்கு
என்றும்..பழம் திராவிடம் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் திரிபு
செய்கிறார்கள். ஆனால் தமிழ் மொழிதான் அந்த நாணயங்களில் இடம்பெற்றுள்ளது
என பல ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்.
பிராகிருதம் - "சிறீ சதகணிச ராணோ வசிதி புதச"
தமிழ் - "அரசனகு வசிதி மகனகு திரு சதகணி கோ"
அரசன், மகன், திரு என மொழிபெயர்க்கப்பட்ட சொற்கள் தமிழ்ச் சொற்கள்.
இவை தெலுங்கில் கிடையாது.தெலுங்
கு அகராதியில் கூட கிடையாது. மேலும் அப்போது (2000 ஆண்டு களுக்கு முன்)
தெலுங்கு மொழி உருவாகவில்லை. ஆனால், தமிழில் சங்க காலம் முதல் இன்று வரை
தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. சகரம் கெட்டு, அகரமாக மாறுவது தமிழ்
இலக்கணப்படி அமைந்துள்ளது. எ.கா. சமணர் - அமணர். மேலும் தமிழுக்கு உரிய
தமிழி /தமிழ் பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவே, சாதவாகனர்
நாணயங்களில் உள்ளது தமிழே.
Silver coin of king Vashishtiputra Satakarni (c. 160 CE). Obv: Bust of king.
Prakrit legend in the Brahmi script: "Siri Satakanisa Rano ...
Vasithiputasa": "King Vashishtiputra Sri Satakarni"
Rev: Ujjain/Sātavāhana symbol left. Crescented six-arch chaitya hill
right. River below.
Early Tamil legend in the Tamil Brahmi script: "Arah(s)anaku
Vah(s)itti makanaku Tiru H(S)atakani ko" - which means "The ruler,
Vasitti's son, Highness Satakani" - -ko being the royal name suffix
நாணயங்களின் ஒருபுறம் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் "சிறீ சதகணிச
ராணோ வசிதி புதச " என்றும், மறுபுறம் தமிழி /தமிழ் பிராமி எழுத்தில்
"அரசனகு வசிதி மகனகு திரு சதகணி கோ" என்றும் எழுதப்பட்டுள்ளது. சகர
ஒலிக்கு பதில் அகரம் உள்ளது.

RajaswiDharmavathi
தோழர், "தமிழ் ப்ராமி (பிராமி) என்ற ஒன்று கிடையவே கிடையாது! ப்ரம்மி
என்பது ஸாம்ராட் அசோகன் காலத்தியது(கிமு 183)! அப்போது தமிழில்
வட்டெழுத்துக்கள
ே இருந்திருக்க வேண்டும்! சமஸ்கிருதமே கூடத் தன் எழுத்துக்களைத் தமிழின்
வட்டெழுத்துக்களில் இருந்துதான் செதுக்கிக் கொண்டது! அதன்முன் அதற்குப்
பெயரே "எழுதாக் கிளவி"தான் ஐயா!
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 1 மணிநேரம் முன்பு
Logan K Nathan
நீங்கள் சமஸ்கிருதத்தையும், தமிழ் பிராமி என்பதையும் ஒன்றாக நினைத்து
குழப்பிக் கொண்டுள்ளீர்கள்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 1 மணிநேரம் முன்பு
Guruvayurappadhasan Sundararaman
எழுதாக்கிளவி - வேதம் செய்யா மொழி ஓத்து என்ற பெயர்களும் உண்டு
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 26 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
பிராமி எனும் சொல் ஆங்கிலேயரான பியூலர் உருவாக்கிய சொல். தமிழி என்பதே சரி.

நூற்றுவகன்னர் ஈரைம்பதின்மர் தமிழ்மொழி காசு எழுத்துரு தமிழி பிராமி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக