வெள்ளி, 22 டிசம்பர், 2017

கோசர் செங்குந்தர் கைகோளார் தொடர்பு ஒட்டக்கூத்தர்

aathi tamil aathi1956@gmail.com

அக். 12
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N மற்றும் தமிழன் நந்தா உடன் உள்ளார்.
# பதிவு_10 .. (பாவாணர் கட்டுறை வழியில் கோசர் பதிவுகள் முற்றும்)
++++++
பின் குறிப்புகள் :
1. 'கோயன்புத்தூர்' என்பது 'கோவன்புத்தூர்' என்பதன் திரிபாகவும்
இருக்கலாம். கல்வெட்டுகளில் உள்ளது 'கோவன்புத்தூர்' என்னும் வடிவமே.
வகரம் யகரமாகத் திரிதல் இயல்பு.
எ-டு : கோவில் - கோயில்.
இனி, யகரம் வகரமாகத் திரிதலுமுண்டு.
எ-டு : சேயடி - சேவடி.
இது. கோயன் - கோவன் என்னும் திரிபிற்குச் சார்பாகலாம்.
2. முத்தமிழ் நாட்டிலும் கோசர் இருந்தனர். அவருட் சிலர் துளுநாட்டைக்
கைப்பற்றினர். அதனால் கோசர்நாடு துளு நாடெனப்பட்டது. இது, 'சேரர்,
கொங்கு' என்பது போன்றதே.
3. அன்னி மிஞிலியின் தந்தை கண்ணை கோசர் ஒருசிலர் பிடுங்கிய கொடுமை
பற்றிக் கோசர் எல்லாரையும் அயலார் என்று கொள்ளமுடியாது. வாய்க்காலில்
விழுந்த மாங்கனியைத் தின்ற சிறுமியைக் கொன்ற நன்னனும் தமிழனே.
4. செங்குந்தர் குடிப்பிறந்த ஒட்டக்கூத்தர் போன்ற கழகக்காலக் கோசருள்ளும்
தமிழ்ப்புலவர் ஒருசிலர் இருந்தனர்.
5. இற்றைக் கைக்கோளரும் செங்குந்தரும் கடுகளவேனும் அயன்மயுடையவரல்லர்;
அங்ஙனமே கழகக்காலக் கோசரும்.
6. மோரியப் படையெடுப்பிற்கு முன்பே கோசர் தமிழகத் திருந்தனர். ஆதலால்,
அவர் மோரியரொடு வந்தவரல்லர்.
- தென்மொழி, பொங்கல் மலர் 1960
பாவாணர் வழி கோசர் பதிவுகள் நிறைவடைந்தது..... நன்றி நன்றி....
(-------முற்றும்-------)
@ # தமிழ்தேசிய_பாலை_வாணர் கூட்டமைப்பு....
4 மணி நேரம் · பொது

கைக்கோளர் கைக்கோளார் கைகோளர் முதலியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக