வெள்ளி, 22 டிசம்பர், 2017

பாணர் இசை ஆடல் நாடகம் தையல் மீன்வர் என பல தொழில் பறையர் தொடர்பு பாவாணர்

aathi tamil aathi1956@gmail.com

அக். 11
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
இலக்கு 50 ல் # பதிவு_49 ...
(பாணர்,கூத்தர் கட்டுறை 2
@# பாவாணர் )
++++++++
பாட்டிற்குக் கூத்து துணைத்தொழிலாதலின், பாணர் கூத்தும் ஆடிவந்தனர்.
1.வயிரியர், 2.செயிரியர், 3.மதங்கர் என்னும் பெயர்களும், விறலி என்னும்
பெண்பாற்பெயரும் கூத்துப் பற்றியனவே
# கூத்தரைக் குறிக்கும் கண்ணுளர், கண்ணுளாளர் என்னும் பெயர்களும்
பாணர்க்குரியன. கண்ணுள் என்பது கண்ணை உள்ளே வைத்தாற்போல் நுணுகி நோக்கும்
நுண்வினைக்கூத்து.
சிலப்பதிகாரத்தில் (ப.169) “கண்ணுளாளர்- மதங்கர், ஆவார் பெரும்பாணர்” –
என்னு அடியார்க்கு நல்லார் கூறியிருப்பதை நோக்குக. விறலி என்பவள் விறல்பட
ஆடுபவள். விறலாவது மனத்தின் இயல்பு புறத்தே தோன்றச் செய்யும் திறம். இது
வடமொழியிற் சத்துவம் எனப்படும். கணவன் பாணனும் மனைவி விறலியுமாயிருந்
து இருவரும் இசைந்து அரசரிடம் சென்று பாடியாடுவது பெருவழக்கு.
பாணர்க்குச் சிறுபான்மை தையல் தொழிலுமுண்டு,
சிலப்பதிகாரத்தில் (இந்திர விழா.32) ‘துன்னகாரர்’ என்னும் பெயர்க்குப்
பாணர் என்று பொருள் கூறியுள்ளார் அரும்பதவுரைகாரர். துன்னம் – தையல்.
“பாணர்க்குச் சொல்லுவதும் ……………… தை…………”
என்று காளமேகரும் பாடியுள்ளார்.
பாணர்க்குரியது பெரும்பாலும் இசைத் தொழிலாதலின், பல்வகைப் பறைகட்கும்
(அல்லது மேளங்கட்கும்) தோற்கட்டுதல் அவர் வினையே என்பது சொல்லாமே
விளங்கும்.
இசைத்தொழில் பாணரெல்லார்க்கும் எக்காலத்தும் இசையாமையின், அவருள் ஒரு
சாரார் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டனர்.
“பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோல் கொள்வல் பாண்மகன் தலைவலித்
தியாத்தநெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண்கொளீ இக்கொடுவாய் இரும்பின்
மடிதலை புலம்பப் பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை” (283-7)
என்று பெரும்பாணாற்றுப்படையிலும்
“மீன்சீவும் பாண்சேரி”
என்று மதுரைச்காஞ்சியிலும் கூறியிருத்தல் காண்க.
பாணரென்பார் குலமுறைப்படி (இன்று ஆதிதிராவிடர் என்று அழைக்கப்படுவாரு
ள் ஒரு சாராராகிய) # பறையரேயாவர் . இஃது மேற்சினந்திருக்கும்போது அது
தணிக்கவந்த யாழ்ப்பாணை நோக்கிப்
“புலை ஆத்தின்னி போந்ததுவே” (திருக்கோ.386)
என்று வெகுண்டுரைப்பதில் பாணர் ஆவின்(பசுவின்) இறைச்சியை உண்பதாகக்
குறித்திருத்தலாலும், அதற்கப் பாணன் புலந்துரைப்பதில் (387)
“வில்லாண் டிலங்கு புருவம் நெறியச்செவ்
வாய்துடிப்புக் கல்லாண் டெடேல்கருங் கண்சிவப்
பாற்று கருப்பதன்று பல்லாண் டடியேன் அடிவலங்
கொள்வன் பணிமொழியே”
என்று தன்னை மிகவும் தாழ்த்திருப்பதா
லும் அறியப்படும்.
காலஞ்சென்ற எம்.சீனிவாச ஐயங்கார் அவர்களும் தமது ஆராய்ச்சி நூலில் பாணர்
பறையருள் ஒரு பிரிவினர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
பாணர் இங்ஙனம் தாழ்ந்த வகுப்பிராயிருந்
தும், # முத்தமிழுள் # இசை, # நாடகம் என்னும் இரண்டையும் வளர்ப்பவர்
அவராதலாலும், இசையில் (சங்கீதத்தில்) தமிழர்களும் தமிழரசர்க்கும் இருந்த
பேரார்வத்தினாலும், ஆரிய வொழுக்கம் ஆழ வேரூன்றாத பண்டைக்காலத்தில்
குலப்பிரிவினைப் பிற்காலத்திற்போல் அவ்வளவு முறுகாமையானும் அவர்க்குச்
சென்ற விடமெல்லாம் சிறப்பும் அரசர் அவைக்களங்களிலும் அரசியர் அந்தப்
புரங்களிலும் தடையில்லா நுழைவும் இருந்தன.
அறிவாற் சிறப்பேயன்றிப் பிறப்பாற் சிறப்பு அக்காலத்தில் இருந்திலது.
அரசரைப் “பாணர் ஒக்கல்” என்று திருக்கோவை (400) கூறும்; ஒக்கல்=இனம்
“குரல்வாய்ப் பாணரொடு திரிதருமரபின் கோவலன் போல”
“பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து”
என்று, பெருஞ்செல்வனும் பெருங்குடி வணிகனுமான கோவலன் பாணரொடு
கூடித்திரிந்தமை சிலப்பதிகாரங் கூறும்.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியைப் பாடிய புறப்பாட்டில்.
“பாண்சுற்றம் சூழ்வதாக நினது நாட்காலத்து மகிழ்ந்திருக்கும் ஒலக்கம்”
என்று கூறியுள்ளார்.
பாணர் அரசிடம் சென்று பாடி யாழ் வாசித்து அவர்க்கு இன்ப மூட்டுவதும்,
அவர்மீது அரசியர்க்குள்ள ஊடலை(கோபத்தை) த் தணிப்பதும், அரசருடன்
போர்க்களத்திற்குச் சென்று வெற்றி நேர்ந்தவிடத்து வெற்றிக் கூத்தாடுவதும்
இறந்துபட்ட அரசர்க்கும் வீரர்க்கும் இரங்கிப் பாடுவதும், அவரை
நினைவுகூர்தற்கும் வழிபடுவதற்கும் நாட்டிய நடுகற்களை வணங்கிச் செல்வதும்
வழக்கம்.
அரசரும் விடிந்தெழுந்தபின் பாணரை வருவித்து, அவர்க்குச் சிறந்த
பரிசிலளிப்பதும், அவரை இனத்தாருடன் உண்பிப்பதும். போர்க்களத்து
வருவாய்களைப் போர் செய்து வெற்றிபெற்ற பின்பும், பகைவர் செல்வங்களை
(வெற்றியுறுதிபற்றிப்) போர் செய்யப் போது முன்பும் அவற்றிற்கு
உரிமையாக்குவதும் வழக்கம்.
“வரையா வாயிற் செறாஅ திருந்து
பாணர் வருக பட்டியார் வருக
…………………….. வயிரியர் வருகென
இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம்
கொடிஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி”
என்றுதுரைக்காஞ்சியில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
விடியற்காலத்துப் பாணரை வருவித்துப் பரிசளித்தமை கூறப்பட்டது.
“பொறிமயிற் வாரணம் பொழுதறிந் தியம்பப்
பொய்கைப் பூமுகை மலரப் பாணார்
கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க
இரவுப் புறம்பெற்ற ஏம வைதகறை
…………………………………………………………………………………………….
வரிசையின் இறுத்த வாய்பொழி வஞ்சன்”
-------------------------------(புறம்398)
“பாணன் கூத்தன் விறலி ……………………………..
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்”
என்று தொல்காப்பியத்தில் பாணர் அரசியரிடம் அவர்க்கு அவர்தம் கணவர்
மீதுள்ள ஊடலை புலவியைப் போக்குதல் கூறப்பட்டது. ஊடல் முதர்ந்தது புலவி.
# புறப்பொருள் வெண்பாமாலையில், 144 ஆம் சூத்திரத்தில். பாணர்
போர்களத்தில் வீர்ருடன் தேரின் பின் நின்று ஆடுவதும், 207ஆம்
சூத்திரத்தில் அவர் போர்களத்திற் பெற்ற பரிசிலைப் புகழ்ந்து கூறுவதும்,
137ஆம் சூத்திரத்தில் அவர் போரில் இறந்த விரர்க்கு எடுத்த நடுகல்லைத்
தொழுவதும் கூறப்பட்டன.
+++++++
@ # தமிழ்தேசிய_பாலை_வாணர் கூட்டமைப்பு...
1 மணி நேரம் · பொது

நாடகத்தமிழ் விறல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக