எங்கள் குமரியின் இயற்கை மலைகளை அழித்து , குமரியின் கடல் வளத்தை
சிதைத்து , எங்கள் கடலோடி சொந்தங்களின் வாழ்வாதாரத்தை அகற்றி இனயத்தில்
துறைமுகமா ??
எதற்கு தரகு வேலை ?? அமைச்சரே கேரளாவில் இருந்து பாறையை உடைத்தும் ,
அங்கு ஆற்றில் மணல் எடுத்தும் இனயம் துறைமுகம் உங்களால் கட்ட முடியுமா ??
எட்டும் தூரத்தில் உள்ள விழிஞம் துறைமுக்துக்கு குமரி மலைகள் அழித்து
கல்லும் , பாறை பொடியும் லாறி கணக்கில் போவதை தடுத்து நிறுத்த என்ன
நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் ??
//அமைச்சர் பதவியையும்,
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் விடுங்கள், அமைச்சரே!
குளச்சல் துறைமுகத் திட்டத்துக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத்
தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன்
அறிவித்திருக்கிறார். அமைச்சர் பதவியோடு நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியையும் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
“மீன்பிடித் துறைமுகம் கட்டுங்கள், மீன் பதனிடும் நிலையம் கட்டுங்கள்,
எங்கள் மீனுக்கு அதிக விலை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்பதுதான்
குமரி மாவட்ட மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால்
நமது அதிகார வர்க்கம் கொட்டைப்பாக்குக்கு விலை கேட்டால்,
பட்டுக்கோட்டைக்குத்தானே வழி சொல்லும்? அதற்கிணங்க, மத்திய, மாநில
அரசுகள் வர்த்தகத் துறைமுகம் கட்டுவோம் என்கிறார்கள்.
கடந்த 2013-ஆம் ஆண்டின் இறுதியில் ஜெயலலிதா அரசு ரூ. 87.75 கோடியை இந்தத்
திட்டத்துக்காக ஒதுக்கியது. குளச்சல் கடற்கரையின் கிழக்குப் பகுதியில்
540 மீட்டர் நீளத்திலும், மேற்குப் பகுதியில் 230 மீட்டர் நீளத்திலும்
அலைமுறித் தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி தொடங்கியது.
பின்னர் குளச்சல் வர்த்தகத் துறைமுகத்தின் சாத்தியக் கூறுகளை
கண்டறிவதற்காக ஸ்பெயின் நாட்டு நிறுவனமான டெக்னிக்கா யி பிரயக்டோஸ்
(Tecnica y Proyectos) மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப்—இந்தியா
(Boston Consulting Group--India) எனும் இரண்டு நிறுவனங்களை தூத்துக்குடி
துறைமுகத்தின் தலைமைப் பொறியாளர் திருமதி. எல். ஏ. மாத்யூ பணித்தார்.
கடந்த மார்ச் 17, 2015 தேதியிட்ட அவரது ஆணையில் 90 நாட்களுக்குள் அறிக்கை
சமர்ப்பிக்கும்படி மேற்கண்ட நிறுவனங்களைக் கோரியிருந்தார். இந்தத்
திட்டம் குறித்து சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை எதுவும் இதுவரை
தயாரிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
குளச்சல் கடற்கரையிலிருந்து சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு பாலம் அமைத்து
நடுக்கடலில் சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவில் செயற்கை நிலப்பரப்பை
உருவாக்கி, அங்கே கப்பல்களை நிறுத்தத் திட்டமிடுகிறார்களாம். கிழக்கு
ஆசியாவிலிருந்து வரும் கப்பல்கள் இந்தத் துறைமுகத்தில் தங்கள் பொருட்களை
இறக்கிவைத்துவிட
்டுச் சென்ற பின்னர், மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்பிரிக்காவுக்
கும் செல்லும் கப்பல்கள் இந்தச் சரக்குகளை ஏற்றிச் செல்லுமாம். குளச்சல்
கடல் தூத்துக்குடி துறைமுகக் கடல் பகுதியை விட மிகவும் ஆழமானது என்பதால்,
இந்தத் திட்டத்தை மத்திய அரசு விரும்புகிறதாம்.
குளச்சல் வர்த்தக துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், அடுத்த
அங்கமாக கடற்கரைப்பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்படுமாம். ஏற்றுமதி,
இறக்குமதி சம்பந்தப்பட்டத் தொழில்கள், பல்வேறுப் பொருட்களின் உற்பத்தி
ஆலைகள் என ஏராளமான நிறுவனங்கள் வந்தேறும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு
இலவச நிலம், தண்ணீர், மின்சாரம், மாசுபடுத்தும் உரிமை, தொழிலாளர் நலம்
மற்றும் சூழல் நலனை எல்லாம் புறக்கணிக்கும் அனுமதி போன்றவற்றை வாரிக்
கொடுத்துவிட்டு, “வேலைவாய்ப்பு உருவாகிறது பார்” என்று மத்திய, மாநில
அரசுகள் வழக்கம்போல நம்மை ஏமாற்றும்.
எத்தனை லட்சம் மீனவர்களின், விவசாயிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டு, இந்த
சில ஆயிரம் துறைமுக வேலைகளை உருவாக்குவார்கள்? இவ்வளவு பெரிய
துறைமுகத்துக்கும், அதன் பின்னணியில் நடைபெறவிருக்கும்
குடியேறல்களுக்கும், தொழில்களுக்கும் ஏராளமான நன்னீர் தேவைப்படுமே,
அதற்கு என்ன செய்வது? பரப்பளவில் மிகச் சிறியதான குமரி மாவட்டத்தின்
வளமான நிலங்களை “வளர்ச்சி”யின் பெயரால் அழித்துவிட்டால், உணவுக்கும்
(அரிசி, தேங்காய்), ஊட்டச்சத்துக்கும் (மீன்) என்ன செய்வோம்?
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை அனைத்து கடலோர கிராமங்களிலும் நீடித்த,
நிலைத்த மீன்பிடித் தொழில் செய்து வாழும் மீனவ மக்களின் வாழ்க்கை,
வாழ்வுரிமை என்னவாகும்?
குளச்சல் துறைமுகத்தால் எழும் மாசு, திடக்கழிவு, திரவக்கழிவுகளை எப்படிக்
கையாள்வது? ஏற்கெனவே புற்றுநோயால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும்
குமரிமாவட்ட கடற்கரைப் பகுதி இன்னும் பல நோய்களால் பாதிப்படையும்போது
என்ன செய்வது? துறைமுகத்தோடு போதைப் பொருட்களும், விபச்சாரமும், இன்னும்
பல விபரீதங்களும் வந்திறங்குமே? “கண்ணை விற்று சித்திரம் வாங்கும் இந்தத்
திட்டம் தேவையா” என்று கேள்வி கேட்கின்றனர் மக்கள்.
ஆனால் அதிகார வர்க்கமோ அகப்படும் இடத்தில் எல்லாம் ஆப்பு வைப்பதில்
குறியாக இருக்கிறது. குளச்சலின் மிக அருகேயுள்ள (திருவனந்தபுரம்
மாவட்டம்) விழிஞ்ஞம் எனுமிடத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு
உட்படாத “விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் லிமிட்டெட்” எனும் ஒரு பெரிய
தனியார் வர்த்தகத் துறைமுகம் உருவாக்கப்படுகிறது அதானி குழுமத்தால்.
இந்தத் துறைமுகத்துக்கு வேண்டிய நிலம், நீர், மின்சாரம் அனைத்தையும் கேரள
அரசு கொடுக்க வேண்டும்.
இந்தத் துறைமுகத்திலிருந்து வரும் வருமானத்தில் ஒரு சதவீதத்தை துறைமுகம்
இயங்கத்துவங்கிய 16-வது வருடத்திலிருந்து அதானி குழுமம் கேரள அரசுக்குக்
கொடுக்கும். பின்னர் ஆண்டுதோறும் ஒரு சதவீதம் வருமானத்தை உயர்த்திக்
கொடுப்பார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமுலில்
இருக்குமாம். இந்த திட்டப்பணிகளை உடனடியாகத் துவக்கும் விதத்தில்
ஊக்குவிப்புத் தொகையாக மத்திய அரசு சுமார் ரூ. 817.8 கோடியை அண்மையில்
ஒதுக்கியிருக்கிறது. இந்தக் கடனை திருப்பியளிப்பதில் கேரள அரசுக்கும்
பங்கு உண்டாம். மொத்தத்தில் கேரள அரசு அரிசி கொண்டு வரும், அதானி குழுமம்
உமி கொண்டு வருவார்கள். இருவருமாக ஊதி ஊதித் தின்பார்கள்.
சென்னை, தூத்துக்குடி விழிஞ்ஞம், கொச்சி எனுமிடங்களில் பெரும் வர்த்தகத்
துறைமுகங்கள் இயங்கிக் கொண்டிருக்கும்போது, குளச்சலில் எதற்கு இன்னொரு
வர்த்தகத் துறைமுகம் என்ற கேள்வி எழுகிறது. துறைமுகம் என்பது பேருந்து
நிலையமா என்ன, மாவட்டம்தோறும் அமைப்பதற்கு? குமரி மாவட்டத்தின் ஆறு
சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள். அமைச்சர்
இராதாகிருஷ்ணன் இது குமரி மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கனவு என்கிறார்.
அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வேன் என மிரட்டும் திரு. பொன்
ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யட்டும்.
குமரி மாவட்ட மக்கள் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து இந்தத் திட்டத்தின் சாதக,
பாதகங்களை விவாதித்து, இந்தப் பிரச்சினையில் இறுதி முடிவு
எடுப்போம்....//

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக