செவ்வாய், 26 செப்டம்பர், 2017

நிலா கடல் அலைகள் ஓதம் ஏற்படுத்துதல் அறிவியல் இலக்கியம் வானியல்

ண நாள்
2 )   ……..  நாணும் நன்னுதல் உவப்ப
வருவை ஆயினோ நன்றே பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.
பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி. நற். 375 :5 – 9
 தலைவனே ! வரைவு குரித்துப் பேசுதற்கு வெட்கமுறுகின்ற நல்ல நெற்றியை உடைய  தலைவி மகிழுமாறு செய்ய  வேண்டுவது ஒன்றுண்டு. அது – பெரிய கடலிடத்தே இரவுப் பொழுதில் நிலா மண்டிலம் தோன்றிற்றாக – கடல் பொங்கி  வலிமை மிக்க அலைகள் எழுந்துநிற்கும்;  மணல் மேடுகள் உயர்ந்த கொல்லைகள் உடைய எம் உறைவிடமாகிய ஊரிடத்து நீ மணம் செய்து கொள்ளுமாறு வருவதேயாம் -  என மணநாள் குறித்துத் தலைவனை வற்புறுத்துவாள் தோழி. ( நிறை நிலாக் காலம் மணம் கொள்வதற்கு ஏற்றதெனக் கூறுவாள். ”தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின் மணந்தனள் ” – குறுந். 193.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக