செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தமிழர் 3 கதிரவன் புத்தாண்டு மற்றும் 3 நாட்காட்டி முறைகள் குமரிக்கண்டம் ஆடிப்பெருக்கு வானியல்

இரவு - பகல் என்று எந்த உயிரினமும் கணிக்கத்தவறாத கால அளவுகளுக்கு
அப்பால் நிலவின் வளர்ச்சி தேய்வுகளை மனிதன் கண்டான். இது இரவில்தான்
இயலும். காருவா ஆகிய அமாவாசைக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு நிலவ்வு
கதிரவனுக்கு மிக நெருக்கமாக இருப்பதாலும் அதன் ஒளிப்பகுதி மிக மிக
மெலிதாக இருப்பதாலும் மூன்றாம் நாள்தான் அது தெளிவாகக் கண்ணுக்குத்
தெரியும். அதனால் தமிழரகள் மூன்றாம் பிறையைக் கண்டதும் கன்னத்தில் போட்ட
நிகழ்வு 2 தலைமுறைகளுக்கு முன் வரை தொடர்ந்தது. அடுத்து தொடர்ந்த
கடற்செலவுகளால் நிலவின் இயக்கத்தைத் துல்லியமாகக் கணித்து முதல்
பிறை(பிரதமை)யிலிருந்து கணித்தனர். 12 சுற்றுகளுக்கு ஒருமுறை
முழுநிலவன்று அதன் பின்னணியிலிருக்கும் விண்மீன் கூட்டத்துக்கு
கிட்டத்தட்ட நேரே மீண்டும் வருவதால் அந்த கால அளவை மாதத்தை விட உயர்ந்த
ஆண்டு என்ற காலக்கணிப்பாக்கினர். அதனை அடுத்து பகல் வேளைகளில்
குறிப்பிட்ட கால இடைவெளியில் நிழல் வடக்கும் தெற்குமாக நகர்வதை வைத்து
கதிரவ ஆண்டுமுறையை வகுத்தனர். இது பெரும்பாலும் சுறவ(மகர)க் கோட்டில்
தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். காலன், சிறு பொழுது
எனப்படும் யாமம் என்ற பெயரால் அறியப்படும் எமன் போன்றோரால் இது
வகுக்கப்பட்டிருக்கும். அப்போது ஆண்டுப்பிறப்பு திசம்பர் 21இல்
நிகழ்ந்தது. ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய விண்வெளிக்கூட்டத்தின் பெயர்களை
அதற்குச் சூட்டினார்கள். கொல்லம் ஆண்டுமுறையில் அப்பெயர்கள்தாம் இன்றும்
கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழர்களின் தலைநகர் தென் மதுரைக்கு வந்த போது
அங்கு கதிரவன் வரும் மார்ச்சு 21இல் வரும் மேழ மாதப் பிறப்பை ஆண்டுப்
பிறப்பாகக் கொண்டனர். மதுரை முழுகி கபாடபுரத்துக்குத் தலைநகர் வந்த போது
அந்நகர் மீது கதிரவன் வரும் ஏப்பிரல் 14 ஆண்டுப் பிறப்பாகக் கொண்டதுடன்
அம்மாததில் முழுநிலாவன்று கதிரவன் இருக்கும் ஓரையாகிய மேழத்துக்கு நேர்
எதிரில் நிலா இருக்கும் துலை ஓரையின் முதல் நாள்மீனான(நட்சத்திரம்)
சித்திரையை அம்மாதத்துக்கு வைத்தனர. ஒவ்வொரு ஓரையிலும் இரண்டேகால்
நாள்மீன்கள் அடக்ககம்.
இந்த மாற்றங்கள் மேம்பாடுகளை எல்லாம் அறியாத வடக்ககிலிருந்து வந்த
பார்ப்பனப் பூசகர்கள் பிறந்த நாளுக்கு நாள்மீனையும் இறந்த நாளுக்கு
திதிகளையும் வைத்துப் பிழைப்பு நடத்துகின்றனர். இதையெல்லாம் மீறி
மாமன்னன் கரிகாலன் நிறுவிய ஆடிப் பதினெட்டாம் பெருக்கு அறிவுக்கண்
உள்ளோருக்குக் கலங்கரை விளக்கமாக உள்ளது. விரிவுக்கு "குமரிமைந்தன்
படைப்புகள்" என்ற தலைப்பில் "தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்" என்ற
கட்டுரையையும் பிறவற்றையம் பார்க்க. http//: kumarimainthan.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக