சீனமும் அமெரிக்காவும் –அன்றும் இன்றும் – 2
நகசல்பாரி இயக்கம் என அழைக்கப்பட்ட இந்த இயக்கத்தில் மாணவர்களும்
இளைஞர்களும் பங்கேற்றனர். சராசரி உழைப்பாளர்கள், சிறுதொழில்
உடமையாளர்கள், சிறு வாணிகர்களைப் போன்ற உழைப்பு இன்றியே அவர்களை விட பல
மடங்கு ஈட்டும் அறிவுசீவிகள் எனப்படும் படித்து வேலைபார்க்கும் கூட்டம்
கோட்பாட்டளவில் இந்த இயக்கத்துக்கு உளவியல் ஊக்கம் கொடுத்தது. மேற்கு
வங்காளத்துக்கு இணையாக ஆந்திர மாநிலத்திலும் இந்த இயக்கம், குறிப்பாக
வரண்ட பகுதியான இராயலசீமா பகுதியில் நன்றாக வேரூன்றியது. இயக்கம்
வளர்ச்சியடைந்து அரை முதலாளியர், அரை நிலக்கிழார்கள் எனப்படும் சராசரி
மக்களைப் படுகொலை செய்தல் தொடங்கியது. இது ஓர் எல்லையைத் தாண்டிய போது
இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து பல்லாயிரவரைக் கொன்றது. அலுவலகக்
கணக்கு 20,000 என்று கூறப்பட்டாலும் ஆவணங்களை அழித்துவிடுமாறு
ஆணையிடப்பட்டுள்ளதால் சாவுகள் ஓரிலக்கத்துக்கு மேலிருக்கும் என்று
கருதப்படுகிறது.
அண்டையில் தொங்கிக்கொண்டிர
ுக்கும் இலங்கையில் “சனதா விமுக்தி பெரமுனா” என்ற பெயரில் இன்று தமிழர்
ஒழிப்பில் பெருமுனைப்புக் காட்டும் இயக்கம் மாவோயியம் எனப்படும்
மார்க்சிய – லெனினிய இயக்கமாகத்தான் தோன்றியது. காவல்துறையினர் அடக்க
முயன்ற போது அவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும்
“அழித்தொழிக்க” “தோழர்கள்” முயன்றனர். அதன் எதிர்வினையாக
காவல்துறையினரையும் படைத்துறையையும் ஏவி விட்டது இலங்கை அரசு. நாட்டுப்
பொதுப் பாதுகாப்புக்கு இந்திய படைத்துறையை கமுக்கமாக வரவழைத்துக்கொண்டது.
படையினரும் காவல்துறையினரும் அரிவாள்களைக் கொண்டு இயக்கத்தினரை
சாலையோரங்களில் வெட்டிச்சாய்த்தனர். ஒன்றரை இலக்கம் பேர் இவ்வாறு
கொன்றொழிக்கப்பட
்டனர். இன்று இலங்கயின் ஆட்சியில் கிட்டத்தட்ட அனைத்து அரசுகளிலும்
பங்கேற்று தமிழர்களுக்கு எதிராக நஞ்சைக் கொட்டுவதே தொழிலாகக் கொண்டு
இயங்குகிறது அந்த இயக்கம்.
அதே போல் தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் ஒளிரும் பாதை (Shining Path)
என்ற பெயரில் இயங்கிய இயக்கதிலுள்ள பல இலக்கம் இளைஞர்கள் கொன்றொழிக்கப்பட
்டார்கள். இவ்வாறு மாவோவின் பெயரால் அமெரிக்கா மூன்றாம் நாடுகள் எனவும்
வளரும் நாடுகள் எனவும் ஏழை நாடுகள் எனவும் அழைக்கப்படும் நாடுகளிலுள்ள
இளமைத் துடிப்பும் பொது நல நாட்டமும் சிந்தனைத் திறனும் செயல் வீரமும்
கொண்ட, அந்த நாடுகளின் எதிர்கால கலங்கரை விளக்குகளாக வாய்ப்புள்ள பல கோடி
இளைஞர்களைத் தவறான கோட்பாடுகளைப் புகுத்தி நடுத்தெருவுக்கு இழுந்துவந்து
துள்ளத்துடிக்கக் கொன்றொழித்த கொடுமை 20ஆம் நூற்றாண்டில் நடந்தேறியது.
தமிழகத்திலும் வரண்ட, வேளாண்மை – தொழில்துறை வளர்ச்சியற்ற திருவண்ணாமலை
மாவட்ட திருப்பத்தூர், சேலம் – தருமபுரி மாவட்டங்களில் இவ்வியக்கம்
செல்வாக்கும் வளர்ச்சியும் பெற்றது. புலவர் கலியபெருமாள், தியாகு
போன்றோர் கொன்றொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்று பிடிபட்டு மரண
தண்டனை பெற்றிருந்த நிலையில் வல்லரசிய ஒற்றர்கள் எசு.வி.இராசதுரை,
அ.மார்க்சு போன்றோர் அவர்களைச் சிறைக்கோட்டத்தில் அணுகி மன்னுப்பு
வேண்டுகை பெற்று மரண தண்டனையைச் சிறைத்தண்டனையாக்கி பின்னர் விடுதலையும்
பெற்றனர். பின்னர் “தமிழ்த் தேசிய விடுதலை”’யை ஏற்றுக்கொண்டதாகவும்
அறிவித்தார்கள். புலவர் கலியபெருமாள் இறந்துபோக தியாகு கருணாநிதியின்
ஊதுகுழலாக மாறி இன்று இதழாழராக, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக
வாழ்கிறார். தமிழரசன் முனைப்பான தமிழக விடுதலை இயக்கத்தை முன்னெடுத்தார்.
ஆனால் மக்கள் நடுவில் இறங்கிச் செயற்பட முடியாத நிலையில் காவல்துறையின்
தேடுதல் வளையத்துக்குள் இருந்தார். அவர் இருப்பிடத்தை அறிந்து தமிழகக்
காவல்துறையினரே பொதுமக்களைப் போல் நடித்து அவரை ஓட ஓட விரட்டி
அடித்துக்கொன்றனர்.
எப்படியாவது கட்சியை வளர்த்து ஒரு முதலமைச்சராகிவிட வேண்டும் என்று
துடித்துக்கொண்டிருந்த பா.ம.க. தலைவர் மரு.இராமதாசை வளைத்து அவரை வைத்து
தமிழகத் தன்தீர்மானிப்புரிமை மாநாடு ஒன்றை வல்லரசிய ஒற்றர்களான
பேரா.கல்யாணி போன்றோர் அவருடன் தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனாரையும்
கலந்துகொள்ள வைத்தனர். தீர்மானம் நிறைவேற்றிய பின் காவல்துறை இவர்களைத்
தேட மரு.இராமதாசு அப்போதைய தமிழக பேரவைக் கட்சித் தலைவராக இருந்த
சம்பந்தியார் வாழப்பாடி இராமமூர்த்தி வீட்டில் அடைக்கலமாகித்
தப்பித்தார். பெருஞ்சித்திரனார் மட்டும் மாட்டிக்கொண்டு காவல்துறையினரின்
கடும் தாக்குதலுக்கு உள்ளாகி விடுதலை பெற்ற குறுகிய காலத்தில் இறந்தார்.
இன்றும் படித்து பெரும் சம்பளங்களுடன் பக்க வரவுகளையும் கூச்சமின்றி
பெறும் படித்த ஒரு கூட்டம் மூலதனம் இடுவதே சுரண்டலுக்கு இட்டுச் செல்லும்
என்று தேசிய வளர்ச்சிக்கு எதிரான கோட்பாட்டைப் பரப்பி மாநிலங்களின் மீது
இந்திய பனியாக்களின் நடுவரசு நடத்தும் தேசியப் பொருளியல் ஒடுக்குமுறையை
வரவேற்கும் மனநிலையை இளைஞர்களிடையிலும் படித்தவர்களிடையிலும் உருவாக்கி
வைத்துள்ளனர். பனியா – பார்சி – வல்லரசிய விசைகள் இங்கு நடத்தும்
பொருளியல் படையெடுப்பை கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்கள், இதழ்கள்,
கட்டுரைகள் மூலம் எதிர்ப்பதற்கு மேல் எதுவும் செய்யாமல்
அடங்கிப்போகிறார்கள் இவ,கள். இவர்களால் தங்கள் பொருளியல் நடவடிக்கைகளைக்
கட்டுப்படுத்த முடியாத அதே வேளையில் தாங்கள் உள்ளூர் பொருளியல் விசைகள்
மீது நடத்தும் பொருளியல் ஒடுக்குமுறையை எதிர்க்க மாட்டார்கள் என்ற
வகையில் தங்கள் நலனுக்கு இன்றியமையாதவர்கள் என்று மறைமுக ஊக்கமும்
வழங்கிவருகிறார்கள் வல்லரசியர்கள்.
சீனத்தில் பட்டினிச் சாவுகளும் பிழைப்பு தேடி மக்கள் உலகெலாம் ஓடுவதும்
மட்டுமீறின. கப்பல்களில் சரக்குப்பெட்டகங்களுக்கிடையில் பதுங்கி
வெளிநாடுகளுக்குத் தப்பியோடியோர் பெட்டகங்களுக்கி
டையில் சிக்கி நசுங்கிச் சாவதும் கள்ளத்தோணிகளில் தப்பியோடுவதும் தொடங்கி
உலகமெல்லாம் நாற்றமெடுத்த பின்னர் வல்லரசுகளின் சிறப்புப் பொருளியல்
மண்டலங்களை உருவாக்கினர். அமெரிக்காவில் பெருமளவுக்கு சீனர்களுக்கும்
இடம் கிடைத்தது. இன்று சீனத்தில் பிற நாடுகளில் போல் தொழிலாளர்கள்
நடத்தப்படவில்லை. அவர்களுக்கு கூலி எதுவும் கொடுக்கப்படுவதாகத்
தெரியவில்லை. தனிக்குடியிருப்
புகள் அமைத்து உணவு, உடை, குழந்தைகளுக்குக் கல்வி போன்ற வசதிகளுடன் ஒரு
கொத்தடிமை முறை அங்கு கடைப்பிடிக்கப்ப
டுகிறது. அதனால் மிக மலிவாக அவர்களால் பண்டங்களைப் படைத்து வெளிநாடுகளில்
விற்க முடிகிறது. இதில் சீனத்துக்கு மிகப்பெரும் சந்தை 125 கோடி மக்களைக்
கொண்ட இந்தியா.
தொடரும்…..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக