செவ்வாய், 26 செப்டம்பர், 2017

குறவர் கற்பு இலக்கியம்

ஐயப்படாத அகவாழ்க்கை
 …………………….. குறவர் மடமகளிர்
தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்
கபிலர். கலித். 39  :  10 - 12
 குறிஞ்சி நில குறவர் மடமகளிர் என்றும் பிழை செய்யார்; தாம் தம் கணவரைப் போற்றி த் தெய்வமென்று தொழுது எழுவர்; இதனால் அவர்தம் கணவன்மாரும் குறி தப்பாது கணை தொடுக்கும் ஆற்றல் உடையர் ஆயினர். ( ஈண்டு - இல்லறவியல் கோட்பாடு ஆராயத் தக்கது)

2 கருத்துகள்:

  1. தொல்தமிழினமான குறவரினம் இன்று வரலாறு இழந்து மறைந்துவாழ
    குஜராத்தில் இருந்து வந்த நரிக்காரர் இம்மண்ணின் குறவரினமாக அடையாளப்படுத்தபடுகின்றனர்

    பதிலளிநீக்கு
  2. பார் தழுவிய குறவர் தமிழர் வரலாறு மீட்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு