சான்றோர் அவை
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்
தன் திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்
நல் அவையுள் படக் கெட்டாங்கு
நல்லந்துவனார். கலித் . 144 : 70 –72
அறனறிந்து நடக்கும் கண்ணோட்டம் உடையவனை – அத்திறமில்லாதோர் உண்டாக்கிச் சொன்ன தீய மொழிகள் எல்லாம் நன்மக்கள் இருக்கின்ற அவைக்குள்ளே ஆராய்ச்சி நிகழ – தீய மொழிகள் எல்லாம் மறைந்து போகும். ( நன்று தீது ஆராயும் அவை இருந்தமையும் – அந்த அவை மக்கள் தொடர்புடையவற்றை ஆராய்ந்தமையும் இப்பாடலால் புலனாகின்றன.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக