பொய்யோ – புதிரோ
அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த
பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல
மடல் பாடிய மாதங்கீரனார். நற்.377 : 6 – 7
அகன்ற கரிய வானத்தில் அரவு விழுங்குதலால் குறைவுபட்ட பசிய கதிரை உடைய திங்களின் பலவாகிய ஒளியைப் போல…..
மேலும் காண்க: அகம். 313; கலித். 15.
( இப்புராணச் செய்தியைப் பலரும் பாடியுள்ளனர். திங்களைப் பாம்பு விழுங்கும் என்பதைத் தமிழ்ப் புலமையோர் கூறுவரோ ? – அரவு என்ற சொல்லுக்கு வருத்து என்ற பொருளும் உண்டு ; ஒளியை இருள் கவ்வுதல் அஃதாவது நிறைந்த குளிர்ச்சியான ஒளியை ( நிலவை) இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்பு இரையை விழுங்குவதைப் போலத் தீண்டி வருத்துகிறது .)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக