செவ்வாய், 26 செப்டம்பர், 2017

வேதி உரம் பதிலாக சாம்பல் சேனைக்கிழங்கு கீரை விவசாயம் புதுமுயற்சி வேளாண்மை

தமிழர் நாடு , 3 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற சேனைக்கிழங்கு சாகுபடி..!
விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள
சுந்தரராஜபுரம் எனும் கிராமத்தில் கனகசபாபதியின் தோட்டம் இருக்கிறது.
முன்னாடி காய்கறி, சேனைக் கிழங்குனு பயிர் பண்ணிட்டு இருந்தோம். அதுக்கு
ரசாயன உரத்த அடியுரமா போடுவோம். பூச்சி தாக்குனா அடுப்புச் சாம்பலைத்
தூவி விடுவோம். வேற எதுவும் செய்யமாட்டோம். என் மனைவிக்குச் சிகிச்சை
எடுக்கிறதுக்காக, நாலு வருஷத்துக்கு முன் ஓர் உளவியல் மருத்துவர்கிட்ட
போனோம். அவர்தான் "பாரம்பர்ய இயற்கை உணவுகள்" பத்தியும் "இயற்கை
விவசாயம்" பத்தியும் சொன்னார். அதோட, இயற்கை விவசாயம் செஞ்சுட்டு
இருக்கிற கருப்பசாமியையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். கருப்பசாமி,
வானகத்துல "நம்மாழ்வார்" ஐயா கிட்ட பயிற்சி எடுத்தவர்.
கருப்பசாமிகிட்டதான், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு, பூச்சிவிரட்டி
தயாரிப்பு, பலதானிய விதைப்புனு எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்
.பலதானிய விதைப்பு செஞ்சு நிலத்தை வளப்படுத்தி... காசினி கீரை, சிறுகீரை,
பொன்னாங்கண்ணி கீரை, பாலக்கீரைனு 10 கீரை வகைகளைச் சாகுபடி செஞ்சேன்.
எல்லாமே நல்லா விளைஞ்சது. அடுத்து 20 வகைக் கீரைகளையும் தக்காளியையும்
சாகுபடி செஞ்சேன். அதுலேயும் நல்ல மகசூல் கிடைச்சது. அதுக்குப் பிறகு
முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். இப்போ நாலு வருஷம் ஆகுது.
போன ஆடிப்பட்டத்துல இயற்கை முறையில சேனைக்கிழங்கை நடவு செஞ்சேன். அதுதான்
இப்போ அறுவடையாகிட்டு இருக்கு”.
“இது மொத்தம் நாலரை ஏக்கர். முழுக்கவே கரிசல் மண்தான். எட்டு
வருஷத்துக்கு முன்னாடி அரை ஏக்கர் நிலத்துல தென்னை போட்டேன். அடுத்த அரை
ஏக்கர் நிலத்துல அகத்தி, முருங்கையை நட்டிருக்கேன். 60 சென்ட் நிலத்துல
சேனைக்கிழங்கு போட்டிருக்கேன். இதுல 10 சென்ட் நிலத்துல
விதைக்கிழங்குக்காக விரலிக்கிழங்குகளை நட்டிருக்கேன். மீதி நிலத்தைக்
கீரைகள், சிறுதானியங்கள் போடுறதுக்காகத் தயார்ப்படுத்தி வெச்சிருக்கேன்.
முன்பெல்லாம் ரசாயன உரம் போட்டுதான் சேனை சாகுபடி செஞ்சேன். இந்தமுறை
முதல் முறையா இயற்கையில் சேனைக்கிழங்கு சாகுபடி செஞ்சிருக்கேன். நான்
எதிர்பார்த்ததைவிட நல்லாவே வந்திருக்கு”.
“பொதுவாவே சேனைக்கிழங்கை நீண்ட நாட்களுக்குச் சேமிச்சு வைக்க முடியும்.
இயற்கை முறையில் விளைவிச்சா 10 மாசம் வரை வெச்சிருக்கலாம். பிறகு நல்ல
விலை கிடைக்கும்போது விற்பனை செய்யலாம். சிவகாசியில் இயற்கை விவசாயிகள்
சேர்ந்து நடத்துற ‘தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை’யில் கிழங்கை விற்பனை
செய்றேன். ஒவ்வொரு வாரமும் ஞாயித்துக்கிழமை மட்டுமே நடக்கிற இந்தச்
சந்தையில நல்ல விலை கிடைக்குது. தேவைக்கேத்தபடி கிழங்குகளை அறுவடை
செய்றேன்.
இதுவரை 1,240 கிலோ கிழங்கை அறுவடை செஞ்சிருக்கேன். ஒரு கிலோ 40 ரூபாய்னு
விற்பனை செஞ்சது மூலமா 49,600 ரூபாய் வருமானமா கிடைச்சிருக்கு. இன்னும்
2,400 கிலோ வரை கிழங்கு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அதையும் அறுவடை
செஞ்சு, கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சா, 96 ஆயிரம் ரூபாய் வருமானம்
கிடைக்கும். ஆக மொத்தம் 50 சென்ட் நிலத்துல இருந்து 1,45,600 ரூபாய்
கிடைச்சுடும். விதைப்பில் இருந்து அறுவடை வரைக்கும் மொத்தம் 60 ஆயிரம்
ரூபாய் செலவாகும். அதைக் கழிச்சா எப்படியும் 85,600 ரூபாய் லாபமா
நிக்கும். அடுத்த முறை விதைப்புக்கு இங்கேயே கிழங்கு கிடைக்கிறதால,
அடுத்த போகத்துல இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும்”,.
- இயற்கை விவசாயி கனகசபாபதி
https://www.facebook.com/greenindia.natur
al.agri.promo/posts/381803932217609

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக