செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஆடுபுலி ஆட்டம் கோல்ப் போன்ற விளையாட்டு பெண்கள் போர்வீரன் தனிமை கவலை இலக்கியம்

கள் – களியாட்டம்
வங்கா வரிப் பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன்னகை அழுங்கா பால் மடுத்து
அலையா உலவை ஓச்சி சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும்
துணை நன்கு உடையள் மடந்தை யாமே
மதுரை மருதளினநாகனார். நற். 341 : 1 – 6
 குறமகள் – வங்கா என்னும் பறவை தன் இனத்துடன் நிரைபடப் பறந்து செல்வதைப் பார்த்து மகிழ்ந்து -  சிவந்த புள்ளிகளை உடைய அரக்கினாற் செய்யப்பட்ட வட்டுச் சாடியின் நாவிலிருந்து ஊற்றப் பெறும்  - மகிழ்ச்சியுடன் ஆடற்கேற்ற இனிய கள்ளை அருந்துவாள்; பின் அங்குமிங்குமாக அலைந்து மரக்கிளையை கொண்டு ஓச்சி ; சிற்சில சொற்களைக் கூறும்; குன்றத்திடத்தே  இருக்கும் தன் காதலனோடு கையால் சிறு நொடி பயிற்றிக் காட்டும் – இவ்வாறு செய்யும் அவளுக்குத் துணை நன்கு அமைந்துள்ளது – ஆனால் எமக்கோ… ( தலைவி பிரிவால்  தலைவன் வருந்துவான்)

நற்றிணை 341 Natrinai 341

Games of the Tamils
2nd century B.C.
சங்ககாலத் தமிழர்
விளையாட்டுகள்
பாறையில் வங்கம் போன்ற உருவத்தில் கோடுகளை வரைந்துகொண்டு விளையாடுவர். அமர்ந்துகொண்டு உடல்-திறம் காட்டாமல் விளையாடுவதால் இந்த விளையாட்டுக்குச் ‘சிறுபாடு’ என்று பெயர். இந்த விளையாட்டில் வெறுப்புத் தோன்றினால், அரங்கத்தில் விளையாடுவர். சிவப்புப் புள்ளி அமைத்து அரக்கினால் செய்யப்பபட குண்டை நாக்கு உள்ள கோலால் அடித்து விளையாடுவர். இவை இனிக்கும் ஏளனச் சிரிப்புத் தோன்றாமல் ஆடும் விளையாட்டு. பின்னர் பால் பருகுவர். அதன் பின்னர் கோலால் அடிக்காமல் (அலையா) குன்றக் குறவனோடு உறவு சேர்ந்துகொண்டு (சில கிளையா)கைவிரலை நொடித்துக் காட்டி விளையாடுவர். இப்படி விளையாடும் தோழிமார் துணை என் மனைவிக்கு (மடந்தை) உண்டு.  நானோ இங்குக் கடுமையாகப் போரிடும் பகைவரின் முனையில் இருக்கிறேன். மழை பொழிந்து நீர் வழியும் நள்ளிரவில் (அரைநாள்) வாடைக்காற்றின் குளிர் தாக்கத்தில் வருந்திக்கொண்டு துணைக்கு யாரும் இல்லாமல், பாசறையில், தனிமையில் இருக்கிறேன்.
அவள் விளையாடிக்கொண்டு துணையோடு இருக்கிறாள்.
நான் குளிரில் நடுங்கிக்கொண்டு பாசறையில் இருக்கிறேன்.
தலைவன் இப்படிச் சொல்லி வருந்துகிறான்.

அழுங்கா = ஒலி எழுப்பாமல்
முணையின் = சலிப்பு தோன்றினால்
வங்கா = வங்கம், கப்பல்
 
வங்கா (வங்கம்) வரிப் பாறை

வங்கம் வரைந்து விளையாடும் ஆடுபுலி விளையாட்டு

வங்கம் வரைந்து விளையாடும் ஆடுபுலி விளையாட்டு

வட்டு (பந்து) நா (பந்தடிக்கும் மட்டை) விளையாட்டு

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்காபால் மடுத்து,
அலையாஉலவை ஓச்சிசில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும்      5
துணை நன்கு உடையள்மடந்தையாமே
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,
நீர் இரங்கு அரை நாள் மயங்கிகூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப,
துணை இலேம்தமியேம்பாசறையேமே.                   10

வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக