செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சேவல்சண்டை காடை இலக்கியம் ஆப்கானிஸ்தான் இல் இன்றும் தொடர்பு

குறும்பூழ்ப் போர்
செறிந்து ஒளிர் வெண்பல்லாய் யாம் வேறு இயைந்த
குறும்பூழ்ப் போர் கண்டேம் ……….
  மருதன் இளநாகனார். கலித். 95 : 5- 6

செறிந்து விளங்குகின்ற வெள்ளிய பல்லினை உடையாய் – யாம் புதிய குரும்பூழ் வந்து பொருந்தின குறும்பூழ்ப் போர் கண்டேம். ( சங்க கால மக்கள் பொழுதுபோக்காகப் பல விளையாடுக்களைக் கண்டு மகிழ்ந்தனர் ; குறும்பூழ்ப் போரும் அவற்றுள் ஒன்று. ) இவ்விளையாட்டு இன்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருவதை இணையவழியில் அறியலாம். குறும்பூழ் – காடை / சிவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக