குடுமித் தலை
…………………….. நம் ஊர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே.
கபிலர். ஐங். 202 : 1 – 4
அன்னாய் ! நம் காதலனாகிய நெடிய மலை நாட்டுக்குத் தலவன் தேரை ஈர்த்துவரும் குதிரைகளும் நம்மூர்ப் பார்ப்பனச் சிறார் போலவே தாமும் குடுமித் தலையை உடையவாயின ; அதனைக் காண்பாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக