ஏறு தழுவுதல்
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்.
சோழன் நல்லுருத்திரன். கலித்.103: 63 - 64
கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை மறுபிறப்பினும் தழுவ மாட்டாள் ஆயமகள். (ஏறுதழுவுதல் முல்லை நிலத்தின் வீர விளையாட்டு; தொல்காப்பியத்தில் இடம் பெறாத ஒன்று.ஏறு தழுவிய பின்னர்க் குரவைக் கூத்து நிகழும்; தெய்வ வாழ்த்தும் இடம் பெறும். )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக