சீனமும் அமெரிக்காவும் –அன்றும் இன்றும் - 1
20 – 07 – 2017 தினமணியில் இந்து மக்கள் கட்சித் தலைவராம் அர்சுன்
சம்பத்து “சூழ்ந்து வரும் போர் மேகம்” என்ற தலைப்பில் கட்டுரை
எழுதியுள்ளார். திபேத்தை சீனா கைப்பற்ற அதன் ஆட்சியாளர் தலாய்லாமா
இந்தியாவில் தஞ்சமடைய, அதைக் காழ்ப்பாக வைத்து சீனம் இந்தியா மீது
படையெடுத்து 47,000 சதுர மைல்கள் – 1,20,320 ச.கிமீ. இந்தியப் பரப்பைக்
கைப்பற்றியதைக் குறிப்பிடுகிறார். அத்துடன் பொதுமைக் கட்சி சார்புடைய
கிட்ணமேனன் பாதுகாப்புத்துற
ை அமைச்சராக இருந்ததாலும் இந்தியப் படை சரியாக இயங்கவில்லை என்பது
கட்டுரை ஆசிரியரின் குற்றச்சாட்டு. பெண் பொறுக்கியான நேருவுக்கு
கிட்ணமேனன் பிடித்தமானவன் என்பதில் எந்த வியப்புமில்லை. அந்தக்
காலகட்டத்தில்தான் இந்தியப் படைத்துறையில் அதிகாரிகள் நிலையில்
மலையாளிகளின் ஆதிக்கமும் உருவானது. கயவாளி காந்தியின் தேர்வான நேருவே
இந்திய மக்களின் இன்றைய அனைத்துத் துயரங்களுக்கும் காரணம் என்பது
வரலாற்று உண்மை. பனியாக்களின் பின்னணியில் ஆட்சி நடத்திய எந்தத்
தலைமையமைச்சரும் அதே தடத்தில்தான் செல்கின்றனர் என்பதும் உண்மை. இந்தப்
போரின் விளைவாக இந்தியப் பொதுமைக் கட்சி இரண்டாக உடைந்தது என்ற
உண்மைக்குப் புறம்பான கருத்தை இவர் கட்டுரையில் முன்வைத்துள்ளார். உண்மை
என்னவென்றால் உருசிய முற்றதிகாரி தாலின் 1953இல் இறந்ததும் உலகப் பொதுமை
இயக்கத் தலைமை தனக்குத்தான் கிடைக்கும் என்று மனப்பால் குடித்திருந்த
மாவோவின் எதிர்பார்ப்புக்கு மாறாக குருச்சேவு அந்த இடத்தைப்
பிடித்துக்கொண்டார்.
1956இல் குருச்சேவு தாலின் காலத்து அத்துமீறல்களை வெளிப்படுத்தி அவரது
படிமத்தைச் சிதைக்கும் பணியைத் தொடங்கியதோடு லெனினுக்கு இணையாகப் பாடம்
செய்து பாதுகாக்கப்பட்ட தாலின் பூதவுடலையும் அகற்றி கல்லறையில்
புதைத்தார். இது உலகெலாம் உள்ள பொதுமைக் கட்சியினரின் மனங்களில்
மட்டுமல்ல பொதுவான பொதுமை நாடிகளின் மனதில் கூட தாக்கங்களை
ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் இருந்த
பொதுமைக் கட்சிகளில் உருசியச் சார்பு – சீனச் சார்பு என்ற பிளவுகளை
உருவாக்கியது. இந்தியாவைப் பொறுத்த வரை 1964இல் இந்திய பொதுமைக்
கட்சி(மார்க்சியம்) – CPIM உருவானது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுமைக் கட்சி தலைமை இடங்களில் பெரும்பாலும்
சிவனிய வெள்ளாளர்களின் பிடியிலிருந்தன. அதிலிருந்து விலகிப் பார்ப்பனர்
அவ்விடங்களைக் கைப்பற்றுவதாகவே மார்க்சியப் பிரிவினரின் அமைப்பு
உருவானது. பார்ப்பனரான இராமமூர்த்தி அதன் தலைவரானார்.
சீனத்தின் தலைமையிலிருந்த மாவோ அதிகார போதை தலைக்கேற காதல் செய்யுள்கள்
எழுதுவது ஆடல் பாடல்களில் இன்பமாகப் பொழுது போக்குவது என்று நமது சீவக
சிந்தாமணியின் அரசன் சச்சந்தன் போல் தன்னை மறந்து இருந்த வேளையில் அவரது
எதிரிகள் சுற்றிவளைக்கத் தொடங்கினர். அது மட்டுமல்ல மாபெரும் முன்
பாய்ச்சல்(The Great Leap Forward) என்ற பெயரில் வேளாண்மையைப்
புறக்கணித்து தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பெரும் முதலீட்டை இறக்கினர்.
அத்துடன் தனிமனிதர்களின் வேளாண் – தொழில் முனைவுகள் தடுக்கப்பட்டன. நாடு
முழுவதும் பட்டினிச்சாவுகளால் 5.5 கோடி மக்கள் செத்ததாக வரலாற்றறிஞர்கள்
கூறுகின்றனர். இந்தச் சூழலில்தான் எதிரிகள் அவரை வீழ்த்த முயன்றது. ஆனால்
சச்சந்தன் போலன்றி காலங்கடந்து போவதற்குச் சற்று முன்பாகவே சூழலை
உணர்ந்துகொண்டு தலைவர் தன் சொந்த மாநிலத்துக்குத் தப்பி ஓடிவிட்டார்.
அங்கு தன்னை நிலைப்படுத்திக்கொண்ட பிறகு 1966இல் அறிவிக்கப்பட்டதுதான்
“மாபெரும் பண்பாட்டுப் புரட்சி”. பொருளியல் பொதுவுடைமைப் புரட்சி
முடிந்துவிட்டது, இப்போது தேவை பண்பாட்டுப் புரட்சி என்று அறிவித்துத்
தன் சார்பானவர்களை ஒருங்கிணைத்து மீண்டும் பெய்சிங் வந்து
அமர்ந்துகொண்டார். இருந்த சூழலைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அமெரிக்கா,
தன் அயலுறவுத்துறைச் செயலர் கிசிங்கரின் ஏற்பாட்டின் படி அமெரிக்க
குடியரசுத் தலைவர் நிக்சன் 1972இல் சீனம் சென்று மாவோவைச் சந்தித்தார்.
அதற்குள்ளாகவே அமெரிக்கா தன் அழிம்பு வேலையைத் தொடங்கிவிட்டது. ஏழை
நாடுகளில் அரை நிலக்கிழமை, அரை முதலாளியப் பொருளியல் நடைமுறையில்
இருப்பதாகவும் உழைக்கும் மக்களை இந்த அரை நிலக்கிழார்களும் அரை
முதலாளியரும்தாம் சுரண்டுகிறார்கள் என்றும் அவர்களைக் கொன்றொழிப்பதுன்
மூலமே உழைக்கும் மக்களை நல்வாழ்வு வாழ வைக்கும் பொதுமைக் குமுகத்தை
உருவாக்க முடியும் என்ற பரப்பல் அமெரிக்கப் பண உதவியுடன் ஏழை நாடுகள்
அனைத்திலும் முழுவீச்சில் நடைபெற்றது. இந்தப் பரப்பலை நெஞ்சில் தாங்கி
இந்தியாவில் செயற்பட்டவர் மேற்கு வங்க மாநிலம் நக்சல்பாரி என்ற ஊரில்
சாரு மசூம்தார் என்பவர்.
தொடரும்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக